துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராயல் மைசன் என்ற தனியார் வேலை வாய்ப்பு ஆட்செர்ப்பு நிறுவனம் ஒன்று பெரும் செல்வந்தர்களுக்காக துபாய் மற்றும் அபுதாபியில் பணியாற்ற முழு நேர ஹவுஸிங் மேனேஜர்கள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த வேலைக்கு மாதம் 30,000 AED சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 7 லட்சம்.
பொதுவாக வேலை வாய்ப்புகளுக்காக நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள், பெரிதும் பேசப்படாது. ஆனால் சம்பளம் அதிகமாக இருந்தால் பல நபர்களைச் சென்றடையும். அப்படித்தான் இந்த வேலை வாய்ப்புக்கு ரூ.7 லட்சம் சம்பளம் வழங்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது.

பலர் தங்களுடைய தற்போதைய வேலைவாய்ப்பை விட்டுவிட்டு இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தயாராகி வருவதாக நகைச்சுவையாக கமெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். ராயல் மைசன் நிறுவனம் வெளியிட்ட வேலை வாய்ப்பு வீடியோவில், "வேலை வாய்ப்பு: முழு நேர ஹவுஸிங் மேனேஜர் தேவை. துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள விஐபிகளுக்கு இரண்டு மேனேஜர்கள் தேவை. மாத சம்பளம் 30,000 AED" என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது.
அதோடு அந்த பதிவுக்கு டிஸ்கிரிப்ஷனும் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பில் இணைபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.84 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்றும் ராயல் மைசன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. எங்களுடைய குழுவில் சேர திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள மேனேஜர்கள் தேவைப்படுகின்றனர். இந்த வேலைக்கு மாதம் 30,000 AED சம்பளம் வழங்கப்படுகிறது. தொழில்துலையில் சிறந்த திறமையான நபர்களை வேலைக்கு சேர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
மேனேஜராக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் வீட்டின் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். பணியாளர்களை நிர்வகிக்க வேண்டும், பராமரிப்பு பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும், வீட்டு பட்ஜெட்டை திறம்பட கையாள வேண்டும். விண்ணப்பதாரர்கள் சிறந்த நிர்வாக திறன், கூர்ந்து கவனிக்கும் திறன், பல பணிகளையும் முன்னுரிமை அளித்து நிர்வகிக்கும் திறன் போன்றவற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்ப விவரங்களையும் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஆனால் விண்ணப்பிப்பவர்களை அழைப்பு விடுக்காமல் விண்ணப்பிக்க வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே சம்பளம் அதிகமாக இருப்பதால், இந்த வேலை வாய்ப்புக்காக பலரும் தங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பி உள்ள நிலையில், அதிக அளவிலான விண்ணப்பங்களை நிர்வகித்து வருவதால் அழைப்பு விடுக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ராயல் மைசன் நிறுவனம் தேவைக்கேற்ப பகுதி நேர மற்றும் முழு நேர பணியாளர்களை வழங்குவதில் பெயர் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications