இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் தளமான Magicbricks வீட்டு வாடகை குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. சென்னை, பெங்களூர், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் வீட்டு வாடகை கடந்த ஒரு வருடத்தில் 5000 முதல் 15000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் Magicbricks ஒரு காலாண்டில் எந்த அளவுக்கு வீட்டு வாடகை உயர்ந்துள்ளது என ஆய்வு முடிவுகளை வெளியிட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை அதிகரிக்கும் வீட்டு வாடகை தற்போது காலாண்டு அடிப்படையில் பெரிய மாற்றம் அடைந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியாகவே உள்ளது.

இந்தியாவில் உள்ள 13 முக்கிய நகரங்களில் வீட்டு வாடகை ஜூலை-செப்டம்பர் காலாண்டில் மட்டும் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சுமார் 22.4% அதிகரித்துள்ளன. அதாவது 13 நகரங்களில் சராசரியாக 10000 ரூபாய் இருந்த வீட்டு வாடகை 12240 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது நகரங்கள், பகுதிகளுக்கு ஏற்றப்படி மாறுபடும்.
இதுவே காலாண்டு அடிப்படையில், அதாவது ஏப்ரல் -ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீட்டு வாடகை 4.6% அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாகத் தானே, குர்கான், கிரேட்டர் நொய்டா, நொய்டா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வீட்டு வாடகை உயர்ந்துள்ளது.
வருடாந்திர அடிப்படையில் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்தில் தானே பகுதியில் வீட்டு வாடகை 57.3 சதவீதமும், குர்கானில் 41 சதவீதமும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த 13 நகரங்களில் அதிகமாக வாடகை வீடுகளைத் தேடுவது மில்லினியல்கள் தான், மொத்த வீட்டு வாடகை தேவையில் சுமார் 67 சதவீத பங்கீட்டைக் கொண்டது மில்லினியல் எனப்படும் 18-34 வயதுடையவர்கள் என மேஜிக்பிரிக்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த 13 நகரங்களில் வாடகை வீடுகளைத் தேடுவோர் 10000 முதல் 30000 ரூபாய் வரையிலான தொகையில் 41 சதவீதம் பேர் தேடுகின்றனர். இதேபோல் வாடகை வீட்டுச் சந்தையில் semi-furnished வீடுகளின் பங்கீடு 52.7 சதவீதமாக இருப்பதாகவும் மேஜிக்பிரிக்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications