சென்னை: சொந்த வீடு என்பது இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவாக இருக்கிறது. சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பதற்காகத்தான் பலரும் தங்கள் வாழ்நாள் சம்பளத்தையே அர்ப்பணிக்கிறார்கள்.
இந்தியாவில் சொந்தமாக வீடு வாங்கக்கூடிய பெரும்பாலானவர்கள் அதற்கான பணத்தை வங்கிகளில் வீட்டு கடனாக தான் வாங்குகின்றனர். இவ்வாறு வாங்கக்கூடிய வீட்டுக் கடனுக்கு மாதந்தோறும் இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. அடுத்த 20 முதல் 25 ஆண்டு காலம் அந்த இஎம்ஐ செலுத்துவதற்காகவே அவர்கள் ஓட வேண்டி இருக்கிறது. இப்படி தங்கள் வாழ்நாளையே சொந்த வீடு எனும் கனவிற்காக மக்கள் அர்ப்பணிக்கின்றனர்.

சென்னை ,மும்பை ,பெங்களூரு போன்ற பெருநகரங்களில் எல்லாம் சொந்தமாக இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால் கூட 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்படுகிறது. ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தற்போது மலிவு விலை வீடுகளை கைவிட்டு ஆடம்பர வீடுகளை நோக்கி தான் கவனம் செலுத்துகின்றன. கேட்டட் கம்யூனிட்டி , குழந்தைகள் விளையாடுவதற்கான இடம், அரங்கங்கள், நீச்சல் குளம் என பல்வேறு வசதிகளோடு கட்டி தருவதாக கூறி பல லட்சங்களை நம்மிடம் இருந்து வாங்குகின்றனர்.
மக்களுக்கோ வீடுகளின் விலையை கேட்டு ஒரு வித சலிப்பு ஏற்பட்டு விட்டதாகவே தெரிகிறது. இந்தியாவின் பிரதான நகரங்களில் வீடுகளின் விற்பனை 19% சரிவடைந்து இருப்பதாக அண்மையில் வெளியான ஒரு தரவு தெரிவிக்கிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்தியாவின் பெருநகரங்களில் வீடுகளின் விற்பனை இந்த அளவு சரிந்து இருப்பது இதுவே முதல் முறையாகும். கடந்த காலாண்டில் வீடுகளின் விற்பனை 1 லட்சம் யூனிட்களுக்கும் கீழ் குறைந்து இருக்கிறது.
வீடுகளின் விற்பனை குறைந்த நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருக்கிறது. டெல்லியில் என்சிஆர் பகுதியில் வீடுகளின் விற்பனை 23 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது. மும்பை மற்றும் பெங்களூருவில் இது 15 சதவீதமாக இருக்கிறது. ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கும் பதிவில் இந்தியாவில் வீடுகளின் விற்பனை குறைந்து இருக்கிறது, கட்டி முடித்த வீடுகளை வாங்க ஆள் இல்லை, செயற்கையாக விலை உயர்த்தி வீடுகளை விற்பனை செய்கிறார்கள், அந்த தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறியிருக்கிறார்.

இதற்கிடையே காயின் சுவிட்ச் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஆஷிஷ் சிங்கால், தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒரு பதிவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஒரு தலைமுறை சம்பாதிக்கும் பணத்தையே ஒரு வீட்டின் விலையாக நிர்ணயம் செய்கின்றன என குற்றம் சாட்டியிருக்கிறார். மும்பையில் ஒரு படுக்கை அறை கொண்டு ஒரு வீட்டின் விலை 1.5 கோடி ரூபாய் மக்கள் இவ்வளவு அதிக விலை கொண்ட வீடுகளை வாங்குவதை நிறுத்திவிட்டார்கள் . புதிதாக வீடு வாங்குவதையோ அல்லது விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதோ மக்கள் நிறுத்தி கொண்டனர், இதன் விளைவாக தற்போது இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை தேக்கமடைந்து இருக்கிறது என கூறியிருக்கிறார்.
புதிதாக வீடு கட்டும் திட்டங்களை நிறுவனங்கள் அறிவிப்பது பெரும் அளவில் குறைந்திருக்கிறது, கட்டி முடிக்கப்பட்ட வீடுகளே விற்காமல் பல்வேறு பில்டர்களும் யாரேனும் வாங்க வருவார்களா என காத்திருக்கின்றனர் என தெரிவித்திருக்கிறார். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அப்படி இருந்தும் வீடுகளின் விலையை குறைக்காமல் உள்ளன, மக்கள் தெளிவாகிவிட்டனர் வீடுகளின் விலை குறைந்தால் மட்டுமே அவர்கள் வாங்க முன்வருவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கையில் பணம் வைத்திருக்கிறார்கள் பொருத்தமான விலைக்கு வரும்போது வாங்க வேண்டும் என காத்திருக்கிறார்கள் என சுட்டிக்காட்டிருக்கும் அவர் மக்களின் எதிர்பார்ப்பு இதுதான் வீடுகளின் விலை குறைய வேண்டும் அல்லது இந்த தேக்க நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 2 படுக்கையறை கொண்ட வீடு 2 கோடி ரூபாய், ஆனால் பால்கனி கூட கிடையாது. சம்பளத்தில் பாதியை உறிஞ்சும் வீட்டு கடன் இஎம்ஐ என மக்கள் தெளிவடைந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications