விலைவாசி உயர்வும், மக்களின் வருமானத்தில் ஏற்பட்ட சரிவு இந்திய மக்களை எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது பொதுத்தேர்தலுக்கு முன்பு வெளிவந்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா குடும்பங்களின் கடன் அளவு 2023 (household debt level) டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மதிப்பில் 40 சதவீதத்தை எட்டியுள்ளதாக மோதிலால் ஒஸ்வால் நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது கவலைக்குரிய விஷயம் மட்டும் அல்லாமல் வரலாற்றில் முதல் முறையாக நாட்டு மக்களின் கடன் அளவு 40 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது

அதே நேரத்தில், குடும்பங்களின் நிதி சேமிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 5 சதவீதமாகச் சரிந்துள்ளது கூடுதல் அதிர்ச்சி அளிக்கும் செயலாக மாறியுள்ளது.
பாதுகாப்பற்ற கடன்களின் வளர்ச்சி: மோதிலால் ஒஸ்வால் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், குடும்ப கடன்களில், பாதுகாப்பற்ற தனிநபர் கடன்கள் மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து வீட்டுக் கடன், விவசாயக் கடன் மற்றும் வியாபாரக் கடன்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சேமிப்பு ஓர் பக்கம் - கடன் இன்னொரு பக்கம்: கடந்த நிதிய ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதாவது மார்ச் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியக் குடும்பங்களின் மொத்த நிதி சேமிப்பு (gross financial savings) 2022-23 ம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதத்திலிருந்து 10.8 சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில், இந்தியக் குடும்பங்களின் மொத்த கடன்களும் 5.5 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக அதிகரித்துள்ளன என்று மோதிலால் ஒஸ்வால் நிறுவனத்தின் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2022-23 ம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் மொத்த கடன் வாங்குதல் (annual borrowings) அளவீடு, உள்நாட்டு உற்பத்தியில் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது சுதந்திர இந்தியாவில் இரண்டாவது அதிகப்படியான உயர்வாகும்.
சேமிப்பு பத்தாண்டுகளின் சரிவு: 2022-23ம் ஆண்டில் இந்திய குடும்பங்களின் கைவச சேமிப்பு பத்தாண்டுகளின் உச்சத்தை எட்டிய போதிலும், அவற்றின் மொத்த சேமிப்பு ஜிடிபி-யில் 18.4 சதவீதமாக ஆறு ஆண்டுகளின் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு சேமிப்பு (GDS) 2013-14 மற்றும் 2018-19 க்கு இடைப்பட்ட காலத்தில் பதிவான 31-32 சதவீத வரம்பை விட 30.2 சதவீதம் என்ற குறைவான அளவீடு பதிவாகியுள்ளது. இந்தியக் குடும்பங்களின் நிதி சேமிப்பு விகிதம் "கவலைக்கிடமான அளவுக்கு" சரிந்துள்ளதாக அறிக்கை வலியுறுத்துகிறது.
நிதி நெருக்கடிக்கான அபாயம்: குடும்பங்களின் நிதி சேமிப்பு (HHNFS) என்பது அவற்றின் மொத்த நிதி சேமிப்பு மற்றும் நிதி கடன்களுக்கு இடையே உள்ள சமநிலையைப் பொறுத்தே அமைகிறது. இந்த சமநிலையில் ஏற்படும் சரிவு காரணமாக குடும்பங்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications