2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு (CAD) நிதியளிக்கப் போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், ரூபாய் ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பதற்கு அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட போதுமான நிதி ஆதாரம் இருப்பதாக நம்புகிறது.
இந்த நிலையில் ரியல் எஸ்டேட் துறை 2022-23 ஆம் நிதியாண்டில் எப்படி இருந்தது எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாக லாக்டவுன், வொர்க் ப்ரம் ஹோம் நடைமுறையில் இருந்த வேளையில் பெரும்பாலான மக்கள் சொந்த ஊரில் குறிப்பாகக் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தனர்.
லாக்டவுன், வொர்க் ப்ரம் ஹோம்
2023 ஆம் நிதியாண்டில் லாக்டவுன், வொர்க் ப்ரம் ஹோம் அனைத்தும் குறைந்தும் உள்ள காரணத்தால் மக்கள் பெரு நகரங்களுக்கு வர துவங்கினர். இதுமட்டும் அல்லாமல் 90 சதவீத நிறுவனத்தில் ஹைப்ரிட் கலாச்சாரம் கொண்டு வரப்பட்டது.
ஆபீஸ் செட்டப்
இதனால் வீட்டிலேயே ஆபீஸ் செட்டப் பெரும்பாலான வீடுகளில் சேவைப்பட்ட காரணத்தாலும், ஊழியர்கள் பெரிய அளவிலான சம்பள உயர்வு பெற்று புதிய வேலைவாய்ப்பில் சேர்ந்த காரணத்தாலும் புதிய வீடு வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்தது.
வீடுகளுக்கான டிமாண்ட்
லாக்டவுனுக்குப் பின்பு சொந்த ஊரில் இருந்து வந்த மக்களுக்குப் புதிய வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த காரணத்தால் கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வேலைவாய்ப்பு உயர்ப்புடன் இருந்த காரணத்தால் கடந்த வருடம் 42 மாதமாக இருந்த விற்கப்படாத வீடுகள் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டில் 33 மாதமாகக் குறைந்துள்ளது.
ஹவுசிக் எகோசிஸ்டம்
இதேகாலகட்டத்தில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வீட்டுக் கடனுக்கான தேவையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதனால் ஒட்டுமொத்து ஹவுசிக் எகோசிஸ்டமும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்தது என 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications