இந்தியாவில் வீடுகளின் விலை உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

இந்தியாவில் வீடுகளின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 13% உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு முதலே இந்தியாவில் குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் விலை கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பணவீக்கம் குறைந்ததால் வீடுகளின் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் 13% உயர்ந்துள்ளது என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அனராக் கேபிடல் (Anarock capital) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீடுகளுக்கான ரியல் எஸ்டேட் விலையின் சிஏஜிஆர் அதாவது ஆண்டு காம்பவுண்டிங் வளர்ச்சி விகிதம் 13 % என்ற அளவில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வீடுகளின் விலை உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!!

இதற்கு பணவீக்கம் குறைவதே காரணம் என்றும் கூறியுள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளை பொறுத்தவரையில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 8.25 லட்சம் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இரண்டு ஆண்டுகளில் 8.72 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டன. எனவே பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் ரியல் எஸ்டேட் விலை என்பது அதிகமாகவே இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை பண வீக்கத்துக்கு எதிராக தங்களுடைய முதலீடுகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற போது அவர்களுக்கான ஒரு பிரபலமான முதலீட்டு முறையாக ரியல் எஸ்டேட் குறிப்பாக வீடு வாங்குவது முதல் தேர்வாக இருக்கிறது.

அந்த வகையில் அனராக் நிறுவனம் கூறும் தகவலின் படி, 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் சராசரியாக குடியிருப்புகளின் விலை என்பது ஆண்டுக்கு 6 % என்ற அளவில் இருப்பதாக தெரிகிறது. அதாவது 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு சதுர அடியின் விலை 5,600 ரூபாய் என்ற அளவில் இருந்தது இது 2024 ஆண்டில் 7,550 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது என குறிப்பிடுகிறது.

அதேபோல 2014 ஆம் ஆண்டு தேர்தல் முடிவடைந்த பிறகும் கூட குறிப்பிட்ட ஏழு நகரங்களில் சராசரியாக வீட்டு மனைகளின் விலை என்பது ஆறு சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வந்துள்ளது.

2013இல் 4,895 ரூபாயாக இருந்த ஒரு சதுர அடியின் விலை 2014இல் 5,168 ரூபாய் என உயர்ந்தது என்கிறார் அனராக் கேப்பிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சோபித் அகர்வால். கடந்த 10 ஆண்டுகளில் வீடுகள் விற்பனையை பார்த்தால் தேவையை விட விநியோகம் அதிகமாக இருந்தது இதனால் வீட்டுமனைகளின் விலையானது ஒரு நிலையான வளர்ச்சியில் இருந்து வருகிறது என கூறுகிறார்.

2013 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் முக்கியமான ஏழு நகரங்களில் 23.55 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்வதற்கு தயாராக இருந்தன ஆனால் அப்போது தேவை 20 யூனிட்கள் மட்டுமே என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படிப்படியாக இந்த குடியிருப்புகளுக்கான தேவை உயர்ந்து வருவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் மிகவும் அடி வாங்கிய ரியல் எஸ்டேட் தற்போது மீண்டு வந்து விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்தது காரணமாக வீட்டு பட்ஜெட்டில் மக்களால் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடிகிறது, இதுவே அவர்கள் அதனை முதலீடாக மாற்றவும் வீட்டுமனைகளை நோக்கி வரவும் உதவியது என அனராக் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+