வீடு விற்பனை அமோகம்.. 2021ல் புதிய வீடுகளுக்குச் செம டிமாண்ட்.. சென்னை நிலவரம் என்ன..?!

2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பல மாதங்களாக விற்பனை செய்யாமல் இருந்த வீடுகள் ஆகஸ்ட் மாதத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி மூலம் ரியல் எஸ்டேட் துறையில் அதிகளவிலான வர்த்தகம் பதிவானது.

இதற்கு ஏற்றார் போல் மத்திய அரசும் பொருளாதார ஊக்கத்திட்டத்தில் பல்வேறு அறிவிப்புகளை ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமாக அறிவித்தது. இதனால் ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ந்து வேலைவாய்ப்பும் வர்த்தகம் அதிகரித்து வந்தது.

டெல்லி என்சிஆர் பகுதி

டெல்லி என்சிஆர் பகுதி

நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதம் மட்டும் டெல்லி என்சிஆர் பகுதியில் சுமார் 9,016 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுக் கடந்த ஆண்டை விடவும் சுமார் 24 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் 2021ஆம் ஆண்டு முழுவதும் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

இதேபோல் அடுத்தச் சில மாதத்தில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் புதிய வீடுகள் மற்றும் விற்பனை ஆகாமல் இருக்கும் வீடுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்தில் வீடுகளைப் புக் செய்வது தற்போது பேஷனாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 நகரங்கள்

8 நகரங்கள்

இந்தியாவின் டாப் 8 நகரங்களை ஆய்வு செய்ததில் டெல்லி -என்சிஆர், அகமதாபாத், ஹைதராபாத், ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனை மிகவும் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், மும்பை, புனே, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனை சரிந்துள்ளது.

விற்பனை சரிவு

விற்பனை சரிவு

ஜூன் காலாண்டில் மட்டும் டாப் 8 நகரங்களில் மொத்தமாக 15,968 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இது கடந்த ஆண்டு 19,038 வீடுகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில் ஜூன் காலாண்டில் 76 சதவீதம் குறைவான வர்த்தகம் பதிவாகியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+