சவுதியில் மீண்டும் தாக்குதல் - இந்தியர் பலி; அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா.. நடப்பது என்ன?

ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை கொண்ட ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். சவுதி அரேபியாவில் தம்மாம் விமான நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர். சவுதியில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவதால் தூதரக அதிகாரிகள் உடனே வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று மாலை ஹவுதி படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அதிகாரிகள் தரப்பிலிருந்து இந்திய அரசுக்கு வழங்கப்பட்ட தகவலின்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த இருவரில் ஒருவர் இந்திய குடிமகன் என்றும் மேலும் இரு இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

சவுதியில் மீண்டும் தாக்குதல் - இந்தியர் பலி; அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா.. நடப்பது என்ன?

மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள வெளியுறவு துறை அமைச்சகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 10ஆம் தேதி ரியாத் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். அந்த வகையில் இந்த தாக்குதலில் இதுவரை இரண்டு இந்தியர்கள் பலியாகியுள்ளனர். ஹவுதி படையினர் தொடர்ச்சியாக விமான நிலையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்துவதால் இந்தியாவில் இருந்து சவுதிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Also Read

ஹவுதி படை தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு அச்சம் காரணமாக, சவுதி அரேபியாவில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் பொது விமான நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதே இந்த பாதுகாப்பு எச்சரிக்கைக்கு காரணம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி பிகோட் தெரிவித்துள்ளார்.

Recommended For You

இதற்கிடையே சவுதி மீதான தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்து 110 டாலரை நெருங்கியுள்ளது. இது ஒரு புறம் என்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த தயாராகி வருகின்றன. இதன் காரணமாக மத்திய கிழக்கில் இன்னமும் பதற்றம், அதிகரிக்க போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+