அடங்காத ஹவுதிக்கள்.. அலறும் சவுதி அரேபியா.. மீண்டும் மதீனா பைப்லைன் மீது தாக்குதல்..!

ஈரான் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கும் வேளையில் மத்திய கிழக்கில் அமைதி திரும்பியுள்ளது, ஆனால் சவுதி அரேபியா - ஹவுதி மத்தியிலான தாக்குதல்கள் இன்னும் முடியவில்லை.

ஹவுதி படைகள் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கிய ஏவிய இரண்டு ஏவுகணைகளை வானில் எதிர்த் தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாகச் சவுதி பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

அடங்காத ஹவுதிக்கள்.. அலறும் சவுதி அரேபியா.. மீண்டும் மதீனா பைப்லைன் மீது தாக்குதல்..!

இதேபோல் போல் இன்று ரியாத் நகரத்தில் பல்வேறு இடத்தில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு உள்ளது, மேலும் ரியாத் நகரத்தில் தாக்குதல் பகுதியில் இருக்கும் மக்களுக்கு வான்வழி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அடுத்து சில மணிநேரத்தில் சவுதி பாதுகாப்புத் துறை அனைத்து மக்களுக்கும் ஆபத்து கடந்துவிட்டது என்ற செய்தியை அனுப்பி பதற்றத்தைக் குறைத்தது.

இந்த தாக்குதல் நடந்து முடிந்த சில மணிநேரத்தில் யெமன் நாட்டில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருக்கும் சனா விமான நிலையத்தின் மீது சவுதி படைகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹவுதி படைகள் நடத்தும் சாபா தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த தாக்குதல் மூலம் ஜாடர் பகுதியில் இருக்கும் al-Mufazir என்னும் எரிவாயு தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது, இது சனாவில் இருக்கும் ஒரு எண்ணெய் நிறுவனமாகும்.

இதேவேளையில் ஹவுதி படைகள் சவுதி அரேபிய அரசை பயமுறுத்திய, மதீனா பகுதியில் இருக்கும் East-West oil pipeline மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்த தாக்குதல் சிறிய அளவில் இருந்த காரணத்தாலும், இத்தாக்குதல் மூலம் ஏற்பட்ட தீ விபத்து சிறிது நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டதால் பெரிய பாதிப்பு இல்லாமல் தொடர்ந்து அந்த பைப்லைன் வழியாக ஏற்றுமதி நடப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தில் வளைகுடா நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்காத நிலையில் சவுதி தினமும் உற்பத்தி செய்யப்படும் லட்ச கணக்கான கச்சா எண்ணெய்யைக் கிழக்கு மேற்கு பைப்லைன் வாயிலாக தான் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்க நவம்பர் 6ஆம் தேதி கடைசியாக qesham தீவில் தாக்குதல் நடத்திய பின்பு இதுவரையில் எவ்விதமான தாக்குதலும், நடத்தவில்லை என்றாலும் ஹார்முஸ் வழித்தடத்தில் போடப்பட்டு உள்ள கடற்படை முடக்கம் தொடரும் என தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+