இவர் தான் ரத்தன் டாடா காதலி.. 19 வயதில் மலர்ந்த காதல்.. முதல் முறையாக வெளியான போட்டோ..!!

மும்பை: வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக இந்திய மனங்களில் இடம் பிடித்தவர் தான் ரத்தன் டாடா. தொழில் வாழ்க்கையில் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்தவர் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட பல்வேறு நேர்காணல்களிலும் கூட ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தபோது காதல் வயப்பட்டு திருமணத்திற்கு தயாராக இருந்த நேரத்தில் இந்தியா சீனா இடையில் ஏற்பட்ட ஒரு போர் ரத்தன் டாடாவின் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது தெரியவந்துள்ளது.

இவர் தான் ரத்தன் டாடா காதலி.. 19 வயதில் மலர்ந்த காதல்.. முதல் முறையாக வெளியான போட்டோ..!!


ரத்தன் டாடா : ஏ லைஃப் என்ற புத்தகத்தில் ரத்தன் டாடாவின் காதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. 1960களில் ரத்தன் டாடா அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக சென்றிருந்தார். அப்போது உலக புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர் Frederick Earl Emmons அவர்களின் அறிமுகம் ரத்தன் டாடாவுக்கு கிடைத்தது. அவருடைய மகளான கேரோலின் எம்மான்சுக்கும் ரத்தன் டாடாவுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. பின்னாளில் அது காதலாக மாறியது.

இருவரின் காதலுக்கும் கேரோலினின் பெற்றோர் பச்சைக் கொடி காட்டினார். இந்தியாவிலும் ரத்தன் டாடாவின் குடும்பத்தினர் இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில் 1962 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் பாட்டிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் அவசரமாக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பவேண்டிய சூழல் உண்டானது. அவர் இந்தியா வந்த பிறகு கேரோலினும் இந்தியாவிற்கு வந்து டாடாவின் குடும்பத்தினருடன் இணைந்து பின்னர் திருமணம் செய்து கொள்வதாக திட்டமிட்டு இருந்தனர் .

ஜூலை மாதம் ரத்தன் டாடா இந்தியா வந்தார் , அக்டோபர் மாதத்தில் இந்தியா சீனா இடையே சண்டை ஏற்பட்டது. இந்த இந்த போர் காரணமாக இந்தியாவில் ஒரு பதட்டமான சூழல் காணப்பட்டது. எனவே இப்படிப்பட்ட பதட்டமான சூழலில் தங்களுடைய மகளை இந்தியாவிற்கு அனுப்ப வேண்டாம் என கேரோலினின் பெற்றோர் முடிவு செய்தனர். இந்த முடிவு ரத்தன் டாடாவுக்கும் கேரோலினுக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தியது.

பின்னர் கேரோலின் ஓவன் ஜோனஸ் என்ற ஒரு கட்டிட வடிவமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் ஒரு பேட்டின் போது ரத்தன் டாடாவை போலவே இருந்ததற்காகவே ஜோனஸை தான் திருமணம் செய்து கொண்டேன் என கூறினார். தி டார்ஜிலிங் லிமிடெட் என்ற ஹாலிவுட் திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

அந்த திரைப்படத்தை பார்த்தபோது தனக்கு ரத்தன் டாடா உடனான நினைவுகள் திரும்ப வந்தன என கேரோலின் கூறியுள்ளார். அப்போதுதான் ரத்தன் டாடா திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பதும், டாடா சன்ஸ் தலைவராக உயர்ந்திருப்பதும் தெரிய வந்ததாம்.

உடனடியாக ரத்தன் டாடாவிற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு மின்னஞ்சலை அனுப்பி தான் இந்தியா வர விரும்புவதாக கூறினாராம் கேரோலின். இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு கேரோலின் இந்தியா வருகை தந்தார். ரத்தன் டாடா அவரை வரவேற்றார். இதனை அடுத்து இருவரும் நட்பு பாராட்ட தொடங்கினர்.

2017 ஆம் ஆண்டு ரத்தன் டாடாவின் 80ஆவது பிறந்தநாளுக்கு கேரோலின் இந்தியாவிற்கு மீண்டும் ஒருமுறை வருகை தந்தார். பின்னர் 2021 ஆம் ஆண்டு மற்றொரு வேலைக்காக இந்தியா வந்தபோதும் டாடாவை நேரடியாக சென்று சந்தித்தார். இந்தியா – சீனா இடையிலான போர் ஏற்படாமல் இருந்திருந்தால் ரத்தன் டாடாவுக்கு என தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+