ஜியோ நிறுவனம் உருவானது எப்படி? – ஈஷா அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஐபிஓ வெளியிடுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு போட்டி நிறைந்த இந்திய தொலைதொடர்பு சந்தையில் நுழைந்த ஜியோ இன்று இந்தியாவின் நம்பர் ஒன் தொலைதொடர்பு சேவை நிறுவனமாக உள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குநரான ஈஷா அம்பானி, ஜியோ குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். கடந்த 2009-2010 ஆம் ஆண்டுகளில் கல்லூரி காலத்தில் ஆன்லைன் மூலமாக தனது அசைன்மென்ட்டை பதிவேற்றம் செய்ய முயன்றபோது இணையம் வேலை செய்யாமல் போனதாம். அது தான் ஜியோ எனும் நிறுவனத்தின் தொடக்கத்திற்கு காரணமாக அமைந்தது என ஈஷா அம்பானி கூறியுள்ளார்.

ஜியோ நிறுவனம் உருவானது எப்படி? – ஈஷா அம்பானி பகிர்ந்த சுவாரஸ்ய பின்னணி

2009-2010 ஆம் காலக்கட்டத்தில் ஈஷா அம்பானியும் அவரது இரட்டை சகோதரரான ஆகாஷ் அம்பானியும் அமெரிக்காவில் படித்து வந்தனர். விடுமுறைக்காக அவர்கள் மும்பைக்கு வந்திருந்தபோது, ஈஷா தனது கல்லூரி அசைன்மென்ட்டை ஆன்லைனில் சமர்ப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், அந்த நேரத்தில் இணைய வசதி சரியாக வேலை செய்யாத காரணத்தினால் அவரால் அசைன்மென்ட்டை சமர்ப்பிக்க முடியவில்லை.

அப்போது இந்தியாவில் டிஜிட்டல் துறை ஏன் பின்தங்கியுள்ளது என்பது குறித்தும், மேற்கத்திய நாடுகளில் இருப்பது போன்ற அதிநவீன இணைய வசதிகள் இந்தியாவில் ஏன் இல்லை என்பது குறித்தும் ஈஷாவும் ஆகாஷும் ஆலோசித்து தங்கள் தந்தை முகேஷ் அம்பானியிடமும் இது பற்றி விவாதித்துள்ளனர்.

Also Read

இதற்கு தீர்வாக ஒரு டிஜிட்டல் தொழில்நுட்ப தள நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என அப்போது முடிவெடுக்கப்பட்டதாம். தற்போதைய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குநரான ஆகாஷ் அம்பானி உறுதியாக நம்பி இதன் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தார் என ஈஷா தெரிவித்தார். இதன் விளைவாகத்தான் 2016 ஆம் ஆண்டில் ஜியோ தொடங்கப்பட்டது, இன்று 2026 இல் நாம் இந்த இடத்தில் இருக்கிறோம் என ஈஷா அம்பானி கூறினார்.

ரிலையன்ஸ் என்பது வெறும் நிறுவனமட்டுமல்ல, இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு இந்தியனும் பங்குதாரராக இருக்க வேண்டும் என்ற வாக்குறுதி கொண்ட நிறுவனம் என அவர் குறிப்பிட்டார். மூன்று தலைமுறைகளுக்கு பிறகு, தானும், தனது சகோதரர்களான ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானியும் வளர்ச்சியே வாழ்க்கை என்ற குறிக்கோளுடன் தொடர்ந்து பாடுபட்டு வருவதாகவும் ஈஷா அம்பானி தெரிவித்தார்.

Recommended For You

ஜியோ நிறுவனம் தனது பங்கின் விலையை 1,065 முதல் 1,119 ரூபாய் வரை நிர்ணயித்துள்ளது. மொத்தம் 27 கோடி புதிய பங்குகள் வெளியிடப்படவுள்ளன. இது நிறுவனத்தின் தற்போதைய மூலதனத்தில் சுமார் 3 சதவீதமாகும். இந்த பங்கு வெளியீடு 30,213 கோடி ரூபாயை தாண்டும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் 21 முதல் அக்டோபர் 23 வரை ஜியோ ஐபிஓவுக்கு விண்ணப்பம் செய்யலாம் பங்கு வர்த்தகம் அக்டோபர் 28 அன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+