ஓ Aloe Vera வச்சு இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? கோடிகளில் சம்பாதிக்கும் விவசாயி! வாவ்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சதாரா மாவட்டத்தில் விவசாயிகள் பாசனத்திற்காக மழை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர். பெரும்பாலும் வழக்கமான நீர் பாசன வசதிகள் இல்லாமல் இயற்கையின் கருணையில் தங்கள் பயிர்களை வளர்த்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒருவர் சோற்றுக் கற்றாழை உற்பத்தியில் பெரிய லாபம் பார்த்து வருவதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

ஒரு தொழிலதிபர் சதாரா கிராமத்திற்கு வந்து கற்றாழை விவசாயம் பற்றி விளம்பரம் செய்திருக்கிறார். விவசாயிகளிடம் ஒரு நோட்டீசை வழங்கியுள்ளார். அதில் ஒரு புறம் விவசாயிகள் பணத்துடனும் மறுபுறம் கற்றாழை செடிகளுடனும் போஸ் கொடுப்பது போல இருந்துள்ளது. இதன் காரணமாக பல விவசாயிகள் கற்றாழை சாகுபடியில் இறங்கியுள்ளனர். அப்படி கற்றாழை சாகுபடியில் இறங்கியவர் தான் ஹ்ருஷிகேஷ்.

 ஓ Aloe Vera வச்சு இப்படி ஒரு பிசினஸ் இருக்கா? கோடிகளில் சம்பாதிக்கும் விவசாயி! வாவ்!

விவசாய குடும்பத்தில் பிறந்த ஹ்ருஷிகேஷ் பாடலி கிராமத்தில் 8 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கிறார். இவருடைய குடும்பம் பாரம்பரியமாக நெல், திணை, சோளம் மற்றும் கோதுமை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறது. ஆனாலும் வறண்ட பகுதி என்பதால் இங்கு பயிரிடப்படும் பயிர்கள் பெரிதும் மழை நீரையே நம்பி உள்ளன. என்னதான் கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்கு போதிய விளைச்சல் கிடைக்காமல் இருந்துள்ளது.

மேலும் வேறு இடத்திலிருந்து தண்ணீரை கொண்டு வரும் அளவுக்கு வசதிகளும் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர்களுடைய பயிர்கள் அடிக்கடி கருகி வீணாவதையும் சந்தித்துள்ளனர். நல்ல நிலம் இருந்த போதிலும் ஆண்டு முழுவதும் தரிசாக இருந்ததால் எந்தவித லாபமும் இல்லாமல் இருந்துள்ளது.

நான்கு பேர் கொண்ட குடும்பம் முழுவதுமாக ஹ்ருஷிகேஷின் தந்தையின் மாத சம்பளமான 2000 ரூபாயை மட்டுமே நம்பி இருந்தது. மேலும் அவர்களுடைய குடும்பம் ஒரு மண் வீட்டில் வசித்து வந்துள்ளது. குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக இருந்ததால் அவர்கள் தரம் குறைந்த சப்பாத்திகளையும் எப்போதாவது காய்கறிகளையும் சாப்பிட்டே பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.

ஹ்ருஷிகேஷ் ஒரு ஜோடி செருப்பு கூட அணிந்ததில்லையாம். 20 வயதில் தனது குடும்ப வருமானத்தை அதிகரிக்கவும், உயர் கல்விக்கு ஆதரவாகவும் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் சேல்ஸ் பிரிவில் 1 லட்சம் டார்கெட்டை எட்டினால் மாதம் 3500 கிடைத்துள்ளது. இந்த வருமானமும் பிக்சட் கிடையாது. மேலும் இதற்காக வீட்டை விட்டு 25 கிலோமீட்டர் தூரத்தில் தங்கி இருந்துள்ளார். மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை அங்கு வேலை செய்துள்ளார். ஆனால் அவருக்கு அந்த வேலை பிரச்சனையாக இருந்த காரணத்தினால் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர் தனது கிராமத்தில் வியாபாரம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். முருங்கைக்கன்றுகள், மாமரக் கன்றுகளை பெற்று விற்க ஒரு நர்சரியை தொடங்கி இருக்கிறார். இருப்பினும் இந்த வியாபாரமும் பருவமழை காலத்தில் மட்டுமே சிறப்பாக இருந்துள்ளது. படிப்படியாக விவசாயிகளுக்கு உரங்களையும் விற்கத் தொடங்கியுள்ளார்.

ஹ்ருஷிகேஷ் மாம்பழம் மற்றும் நெல்லிக்காய் மரங்களுக்கு இடையில் 4000 கற்றாழை செடிகளையும் நட்டுள்ளார். மேலும் கற்றாழை செடி கரையானை விரட்டும் சக்தி கொண்டது. இதனால் தனது பண்ணைக்கு எந்தவித சேதமும் ஏற்படாது என்று எண்ணியும், மாமரங்களை பாதுகாக்க உதவும் என்று எண்ணியும் கற்றாழை செடிகளை நட்டுள்ளார். இந்த கஷ்டத்தோடு கஷ்டமாக தோட்டக்கலையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

சதாராவில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் போது கற்றாழை தயாரிப்புகளை விற்பனை செய்யும் ஒரு தொழில் முனைவோரை கண்டுள்ளார். இந்த யோசனையின் மூலம் ஈர்க்கப்பட்டு ஹ்ருஷிகேஷ் சோப்புகள், ஷாம்புகள், கற்றாழை சாறு போன்ற பொருட்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அது அவருக்கு நல்ல லாபத்தை தரவில்லை. அதன் பிறகு தோட்டக்கலையில் தனக்கு இருக்கும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி கற்றாழையின் மூலம் இயற்கைப் பூச்சி கொல்லிகள் தாவர வளர்ச்சிக்கு தேவையான உரங்கள் போன்றவற்றை உருவாக்கியுள்ளார்.

இயற்கையாகவே வாழை இலையில் தண்ணீர் பட்டால் அவை இலையின் மேல் நிற்காது. இதை தெரிந்து கொண்டு ஆலோவேரா ஸ்ப்ரேடரை தயாரித்துள்ளார். இதை தெளிப்பதன் மூலம் பூச்சிகள் வராமல் இருந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் ஹ்ருஷிகேஷ் தனது ப்ராடக்டுகளை சந்தைப்படுத்தும் வேலையை தனது நண்பர்களின் உதவியுடன் தொடங்கியுள்ளார். இன்று அவர் தனது கற்றாழை பண்ணையிலிருந்து சராசரியாக 8000 லிட்டர் ப்ராடக்டுகளை உற்பத்தி செய்கிறார். இப்போது 2 ஏக்கர் நிலமாக விரிவடைந்துள்ளது அவருடைய கற்றாழை தொழில். இதன் மூலம் ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் செய்கிறார். இதில் இவருடைய லாப வரம்பு 30 சதவீதமாக உள்ளது.

அனைவரையும் போல கற்றாழையை வைத்து சரும பொருட்களை தயாரித்திருப்பார் என்று பலரும் நினைக்கையில்.. பூச்சிக்கொல்லி மருந்தை தயாரித்திருக்கிறார் இந்த சாதனை மனிதர். வித்தியாசமான யோசனை மற்றும் தொடர் முயற்சி இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு இவருடைய கதை ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+