சில நேரங்களில் நாம் செய்யும் சிறு மாற்றம் கூட பெரிய அளவிலான சாதனையையும், வெற்றியையும் பெற்று தரும். அப்படித்தான் ஒருவர் தன்னுடைய வணிகத்தின் மூலம் இன்று கோடிகளில் சம்பாதித்து வருகிறார். தோட்டக்கலைத் துறையில் பல வருட அனுபவம் கொண்ட ஒரு விஞ்ஞானி தான் காமினி. இவருக்கு ஆர்கானிக் விவசாயத்தின் மீது அலாதியான பிரியம்.
தனது கல்வியில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார். தான் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருக்கும் போது வயல்களில் அயராத உழைக்கும் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று காமினி சிங்கிற்கு தோன்றியுள்ளது.

இந்த எண்ணம் 17 வருடம் தோட்டக்கலைத் துறையில் அனுபவம் வாய்ந்த காமினியை உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு உதவ ஊக்குவித்தது. இதனால் 2016 முதல் 2017-ஆம் ஆண்டில் உத்தர பிரதேசம் முழுவதும் இருக்கும் விவசாயிகளுக்கு ஆர்கானிக் விவசாயம் பற்றிய பயிற்சி வழங்கும் நோக்கில் செயல்பட ஆரம்பித்தார்.
முதல் 2, 3 ஆண்டுகளுக்கு ஆர்கானிக் விவசாயத்தின் மூலம் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் உடனே மண் புத்துயிர் பெற்று விளைச்சலை அதிகரிக்கும். ஆனால் ஆர்கானிக் உரங்களைப் பயன்படுத்துவதால் சில வருடங்களுக்கு விளைச்சல் குறைவாக இருக்கும் வாய்ப்புள்ளது.
சில விவசாயிகள் காமினியின் பேச்சைக் கேட்டு ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் அரசாங்க மானியங்களைப் பெறுவதற்காகவே இந்த முயற்சிக்கு பதிவு செய்யத் தொடங்கினர். ஆனால் பதிவு செய்த அனைவரும் காமினி சொன்னது போல் ஆர்கானிக் முறைகளைப் பயன்படுத்தவில்லை.
குறைந்த விளைச்சல் காரணமாக அவ்வப்போது ரசாயன உரங்களையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் காமினி குறைந்த முதலீடு தேவைப்படும் அதே நேரம் அதிக மகசூலை வழங்கும் பயிர்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். முருங்கை மற்றும் முருங்கைக்காய் நீண்ட காலமாக ஊட்டச்சத்து உணவுப் பொருளாக மக்களின் மத்தியில் பெயர் பெற்ற ஒன்று. இது தான் காமினிக்கு நம்பிக்கைகுரியதாகத் தோன்றியது.
இதனால் காமினி உள்ளூர் விவசாயிகளிடம் ஒரு புதுமையான யோசனையை அறிமுகப்படுத்தினார். பாரம்பரிய பயிர்களுடன் சேர்த்து முருங்கையை பயிரிடச் சொன்னார். விவசாய நிலங்களின் ஓரத்தில் முருங்கையைப் பயிரிடுவதால் மற்ற பயிர்களுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது என்றும் கூறினார். இதனால் அவற்றை பரிசோதனை செய்ய பல விவசாயிகள் முன் வந்தனர்.
இந்த முருங்கையை வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய காமினி "டாக்டர் மோரிங்கா பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனத்தை 2019-ஆம் ஆண்டு நிறுவினார். தற்போது இந்த நிறுவனத்தில் 22-க்கும் மேற்பட்ட முருங்கையைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் விற்பனையாகிறது. முருங்கை சோப், முருங்கை பிஸ்கட், முருங்கை மாத்திரைகள், முருங்கை எண்ணெய், முருங்கை சீரம் என எண்ணற்ற பொருட்கள் இந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு விற்க்கப்படுகிறது.
சிறிதாகத் தொடங்கப்பட்ட முயற்சி தற்போது உத்தரப்பிரதேசத்தில் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று எண்ணற்ற விவசாயிகள் காமினியின் பயிற்சியால் முருங்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த முருங்கையை எல்லாம் வாங்கி தற்போது அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி காமினி விற்பனை செய்கிறார்.
தற்போது வெறும் ரூ.9 லட்சம் பர்சனல் லோன் வாங்கி காமினி அளித்த பயிற்சி இன்று ரூ.1.75 கோடி வருமானம் தரும் பிசினஸ்-ஆக மாறியுள்ளது. இதில் 30 சதவீத லாபமும் அவருக்கு தொடர்ந்து கிடைக்கிறது. அது மட்டுமின்றி ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட வைக்க தொடர்ந்து காமினி பயிற்சி அளித்து வருகிறார். இதற்கு முன்னர் மாம்பழ விவசாயம் செய்து வந்த ஒரு விவசாயி காமினியின் பயிற்சிக்கு பின் தன்னுடைய 17 ஏக்கர் நிலத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகிறார். இதற்கு முன்னர் 40,000 வருமானம் பெற்ற விவசாயிகள் தற்போது ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறுவதாக கூறியுள்ளனர்.
முருங்கைக் கீரைக்கு நம் நாட்டில் அவ்வளவு டிமென்ட். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களானாலும் சரி அல்லது கீரைகளாக எடுத்துக் கொண்டாலும் சரி முருங்கையில் இருக்கும் ஊட்டச்சத்துகளால் மக்கள் பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். இதையே ஒரு பிசினஸ் ஆக மாற்றி லாபம் பார்த்து வரும் காமினி இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications