ஷாங்காய், சீனா: சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு நிறுவனத்தின் மனித வளத்துறை மேலாளர் ஒருவர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாமலேயே நிறுவனத்திடம் இருந்து 20 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷாங்காயை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவளத்துறை மேலாளராக பணிபுரிந்து வந்தவர் யாங். இவர் 8 ஆண்டு காலமாக மோசடி செய்து 20 கோடி ரூபாயை சுருட்டி இருக்கிறார். இது தொடர்பாக சீன நாளிதழில் வெளியாகி இருக்கக்கூடிய செய்தியில் ஹெச்ஆர் மேனேஜர் யாங் , 2014 ஆம் ஆண்டு நிறுவனத்தில் 22 ஊழியர்களை புதிதாக பணிக்கு அமர்த்தியதாக கணக்கு காட்டியிருக்கிறார்.

எட்டு ஆண்டுகளாக இவர்களுக்கான ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகளை இவரே பெற்று இருக்கிறார். பல வங்கிகளிலும் இந்த போலி ஊழியர்கள் பெயரை கொண்டு கணக்குகளை தொடங்கி இருக்கிறார். ஊதியத்தை இந்த வங்கி கணக்குகளில் வரச் செய்து இவர் எடுத்து பயன்படுத்தி ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இவர் இவ்வாறு நிறுவனத்தை ஏமாற்றி வேலைக்கு ஆட்களையே எடுக்காமல் போலியாக பெயர்களை உருவாக்கி மோசடி செய்து வந்திருக்கிறார்.
இவ்வாறு இவர் போலியாக உருவாக்கிய ஒரு ஊழியர் 100 சதவீதம் வருகை கொண்டிருந்ததால் நிறுவனத்திற்கு சந்தேகம் வந்திருக்கிறது. ஒரு ஊழியர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் அலுவலகத்திற்கு வந்துள்ளார் என சந்தேகம் அடைந்த நிறுவனம் விசாரணை நடத்த தொடங்கியது. அப்பொழுதுதான் அங்கே பணியாற்றிய மற்ற ஊழியர்கள் இப்படி ஒரு ஊழியரை நாங்கள் பார்க்கவே இல்லை இப்படி பெயர் கொண்ட ஒரு நபர் இங்கு இல்லவே இல்லை என கூறினார்கள்.
இதனை அடுத்து நிறுவன தலைமை அந்த மனித வள மேலாளரிடம் கடுமையாக விசாரணை நடத்திய போது தான் அவர் இத்தனை ஆண்டு காலம் ஊழியர்களை பணி அமர்த்தாமலேயே போலியாக கணக்கு காட்டி 20 கோடி ரூபாயை சுருட்டியது தெரியவந்துள்ளது. இவ்வாறு நிறுவனத்திடம் இருந்து ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் இவர் சுமார் இரண்டரை கோடி ரூபாயை திருப்பி தந்து இருப்பதாக தெரிகிறது.
இதனை அடுத்து இவர் மீது நிறுவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. அவருக்கு 10 ஆண்டுகாலம் சிறை தண்டனை தற்போது கிடைத்திருக்கிறது. இவ்வாறு மோசடி செய்வதற்கு ஏதுவாக யாங் இந்த நிறுவனத்தில் புதிதாக ஆட்களை தேர்வு செய்வது, அவர்களுக்கான ராஜினாமா மீது முடிவெடுப்பது , அவர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வது என அனைத்தும் தன்னிடமே இருக்கும் படி பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் இவர் மோசடி செய்வதற்கு பெருமளவில் உதவி இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications