கர்நாடகா: புதிதாக தொழில் தொடங்க வேண்டும் அதில் வெற்றி அடைய வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் வழக்கமான விஷயங்களில் இருந்து மாறுபட்டு யோசிக்க வேண்டும். அப்படி மாற்றி யோசித்து வெற்றி பெற்றிருக்கிறார் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி .
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த சங்கர்புரா என்ற கிராமம் மல்லிகை பூ உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு புகழ் பெற்றது.ஆனால் இந்த கிராமத்தில் ஒரு விவசாயி மட்டும் மல்லிகை பூவுக்கு மாற்றாக வேறு ஒரு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் தான் ஜோசப் லோபோ. தன்னுடைய வீட்டு மாடியிலேயே மியாசாக்கி வகை மாம்பழங்களை விளைவித்து வெற்றி பெற்றிருக்கிறார்.

உலகிலேயே அதிக விலை உயர்ந்த மாம்பழ வகையாக மியாசாகி வகை மாம்பழங்கள் இருக்கின்றன . ஒரு கிலோ 2.5 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இவை விற்பனை செய்யப்படுகின்றன. 35 ஆண்டுகளுக்கு முன்பு ஜோசப் லோபோ, பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு மும்பைக்கு இடம் பெயர்ந்தாராம். அப்போது பல்வேறு ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.
விவசாய குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் அவருக்கு விவசாயம் குறித்த பெரிய புரிதல் அப்பொழுது இல்லை. இந்த சூழலில் தான் 2010 ஆம் ஆண்டு தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பிய அவர் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைத்து காய்கறி , பழங்கள் உள்ளிட்டவற்றை விளைவிக்க தொடங்கினார் . அப்பொழுதுதான் அவருக்கு விவசாயம் மீது ஆர்வம் பிறந்திருக்கிறது.
இதனை அடுத்து ஹைட்ரோபோனிக்ஸ் விவசாய முறை குறித்து கற்று தேர்ந்த அவர் தன் வீட்டு மாடியிலேயே அதனை அமைத்து பல வகையான பழங்களை விளைவித்தாராம். சப்போட்டா, மாம்பழம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த சமயத்தில் மியாசாகி வகை மாம்பழம்குறித்து இவருக்கு தெரிய வந்ததாம். அதிக ஊட்டச்சத்து கொண்ட ஜப்பானை சேர்ந்த மியாசாகி வகை மாம்பழங்களை நாம் ஏன் விளைவிக்க கூடாது என எண்ணினார். இதன் பின்னர் அவர் முதலில் ஒரு செடி வாங்கி நட்டுள்ளார்.

எந்த ஒரு ரசாயனமும் இல்லாமல் மாட்டு சானம், இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உரம் , காய்கறி கழிவுகள் உள்ளிட்டவற்றை கொண்டு ஒரு மரத்தை வளர்த்திருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அந்த மரத்திலிருந்து 15 முதல் 20 மாம்பழங்கள் விளைந்தன. இதனை அடுத்து ஆண்டுதோறும் அந்த மரத்தில் இவருக்கு மியாசாக்கி வகை பழங்கள் கிடைக்க தொடங்கின. இது ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
ஆனால் இவர் அதனை விற்பனை செய்வதில்லை என முடிவு செய்திருக்கிறார். மாறாக குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்களுக்கு இலவசமாகவே தருகிறாராம். விவசாயிகளுக்கு மியாசாகி வகை செடிகளை தந்து எப்படி அவற்றை வளர்ப்பது என பயிற்சி தருகிறார். ஹைட்ரோபோனிக்ஸ் விவசாயத்தில் தனக்கு கிடைத்த வெற்றியை கொண்டு மற்றவர்களுக்கும் அமைத்து தந்து அதில் போதுமான வருமானம் கிடைப்பதாக கூறுகிறார். கர்நாடக மாநில அரசு இவருக்கு ராஜ்யோத்சவா விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications