இந்தியாவில் பர்சனல் கேர் எனப்படும் தனிப்பட்ட பராமரிப்பு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு எப்பொழுதுமே டிமாண்ட் அதிகம் . அதுவும் தோல் சம்பந்தப்பட்ட மற்றும் கூந்தல் பராமரிப்புக்கான சோப்பு ஷாம்பு உள்ளிட்டவை நாம் இயற்கையான பொருட்களிலிருந்து தயாரித்து வழங்குகிறோம் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும் .
அதை தன்னுடைய 24 வயதிலேயே சாதித்து காட்டியிருக்கிறார் சூரிய வர்ஷன் என்ற தமிழ்நாட்டு இளைஞர் . இவர் சொந்தமாக Naked Nature என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தோல் பராமரிப்பு சீரம், சோப் , எண்ணெய் என பல்வேறு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது . டைரக்ட் டு கஸ்டமர் என்ற முறையில் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நேக்கட் நேச்சர் நிறுவனத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தது சூரிய வர்ஷனுக்கு கிடைத்த 200 ரூபாய் பாக்கெட் மணி என்பது தான் இதன் பின்னால் இருக்கக்கூடிய சுவாரஸ்யம்.

சூர்யா 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது hibiscus bath salt என்ற உப்பை தன்னுடைய சொந்த சமையலறையில் இருந்து உருவாக்கினர் .தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த சூர்யாவுக்கு உப்பை வைத்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்வது என்றால் சிறுவயதினிலே விருப்பம். அப்படித்தான் இந்த ஹைபிஸ்கஸ் பாத் சால்ட் என்பதை உருவாக்கினார் . இதற்கு தனக்கு கிடைத்த பாக்கெட் மணியை பயன்படுத்தினார்.
ஆனால் பள்ளி படிப்பு கூட முடிக்காத ஒரு இளைஞன் தயாரித்திருக்கும் ஒரு பொருள் என்பதால் முதலில் இதனை வாங்குவதற்கும் இதனை ஏற்பதற்கும் பலரும் தயக்கம் காட்டினார்களாம். ஆனால் தற்போது புகழ்பெற்ற ஒரு பர்சனல் கேர் பிராண்டாக நேக்கட் நேச்சர் மாறி இருக்கிறது. சென்னையில் பொறியியல் படிப்பை படித்த சூர்யா வார இறுதி நாட்களில் மதுரைக்கு சென்று தன்னுடைய தொழிலை விரிவு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

இவருடைய தயாரிப்புகளால் ஈர்க்கப்பட்ட ஒரு ஆயுர்வேத மருத்துவர் இவரின் பொருட்களுக்கு பெரிய அளவில் ஒரு ஆர்டரை கொடுத்தாராம் . இதுதான் ஒரு தொழில் முனைவராக சூர்யா தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையை வழங்கியது. இதனை அடுத்து சென்னையில் இருந்து தன்னுடைய கல்லூரி படிப்பை மதுரைக்கு மாற்றிக் கொண்ட அவர் முழுவதுமாக தன்னுடைய சுய தொழிலில் கவனம் செலுத்தினார்.
ஆன்லைன் படிப்புகள் வாயிலாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து தெரிந்து கொண்டு அவர் அதன் மூலம் பலருக்கும் வகுப்புகள் எடுத்து அதில் கிடைத்த வருமானத்தை கொண்டு நேக்கட் நேச்சர் நிறுவனத்தை படிப்படியாக வளர்த்தார். தற்போது 70 தயாரிப்புகள் இவரை நிறுவனத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன . இவர் பலருக்கு வேலை வாய்ப்புகளையும் உண்டாக்கி தந்திருக்கிறார் .
இவர் நிறுவனம் 2021- 22 ஆம் ஆண்டிலேயே ஆண்டுக்கு 56 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது . சுமார் பத்து கோடி ரூபாய் மதிப்பு கொண்ட நிறுவனம் ஆகவும் தற்போது இது உருவெடுத்து இருக்கிறது. இந்த பிரிவில் இவர் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் மற்ற நிறுவனங்களைப் போல இல்லாமல் தன்னுடைய நிறுவனம் தயாரிக்கும் பொருட்களில் இவர் பசு நெய்யை பிரதானமான ஒரு பொருளாக பயன்படுத்துகிறார்.
செயற்கையான நிறமிகள், ரசாயனங்கள் போன்றவற்றை இவர் பயன்படுத்துவது கிடையாது இதனால்தான் தன்னுடைய நிறுவனத்திற்கு நேக்கட் நேச்சர் என பெயர் சூட்டியிருக்கிறார் இயற்கையில் இருந்து தயாரிக்கப்படும் பொருள் என்ற நோக்கம் பல நபர்களையும் ஈர்த்திருக்கிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications