அகமதாபாத்: தன்னுடைய குழந்தைக்கு ஒரு பிரச்சனை என வந்தால் தாய் எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடுவார் என்பதற்கு உதாரணமான ஒரு நிகழ்வை தான் நம் தற்போது படிக்க போகிறோம். அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்தில் இருந்து தன்னுடைய 8 மாத குழந்தையை மீட்ட வீரத்தாய் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
கடந்த மாதம் 22ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது மோதியது. விமானத்தில் பயணம் செய்தவர்கள், விமானிகள், விமான பணியாளர்கள் மற்றும் அந்த மருத்துவ கல்லூரி கட்டிடத்திலிருந்து சிலரும் உயிரிழக்க நேரிட்டது .கிட்டத்தட்ட 260 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர். இந்தியாவின் மறக்க முடியாத ஒரு விமான விபத்தாக இந்த நிகழ்வு மாறியது.

இந்த விமான விபத்தின் போது ஒரு தாய் தன்னுடைய 8 மாத பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய சம்பவம் நம்மை நெகிழ வைக்கிறது. பிஜே மருத்துவ கல்லூரியில் முதுநிலை படிப்பு பயின்று வந்தவர் தான் கபில். இவருடைய மனைவி மனிஷா, இவர்களுக்கு தியான்ஸ் என்ற 8 மாத குழந்தை இருந்தது. அந்த கட்டிடத்தில் விமானம் மோதிய போது மனிஷா குழந்தையுடன் அந்த கட்டிடத்தில் தான் இருந்தாராம்.
விமானம் மோதிய உடன் கட்டிடமே குலுங்கி இருக்கிறது, இவர்கள் இருந்த அறையில் இருள் சூழ்ந்ததாம், விமானத்தில் தீப்பற்றி அந்த அறைக்கும் பரவ தொடங்கியதாம். இதில் இருந்து எப்படியாவது குழந்தையை காப்பாற்ற முடிவு செய்த மனிஷா தன் உயிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைக்கு தன்னையே கவசமாக்கியுள்ளார். குழந்தை மீது தீ பட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தாராம்.

அந்த அனலில் என்னால் என் குழந்தையை தவிர வேறு எதை பற்றியும் நினைக்க முடியவில்லை என கூறும் அவர் குழந்தைக்கு எதுவும் ஆக கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தாராம். நல்வாய்ப்பாக மீட்பு குழுவினர் உடனே இவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் மனிஷாவின் உடலில் 25% தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன குழந்தை உடலில் 36 % காயங்கள் ஏற்பட்டிருந்தன .
குழந்தையின் முகம் ,கை,நெஞ்சு ,வயிறு பகுதிகளில் எல்லாம் தீக்காயம் இருந்தது. கேடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த குழந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறது. இந்த எட்டு மாத குழந்தையின் உடலில் தோல் தான் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருந்தது இந்த சூழலில் மனிஷா தன்னுடைய தோலையே குழந்தைக்கு தானமாக வழங்கி குழந்தையை காப்பாற்றி இருக்கிறார் .
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அஜித் தேசாய் குழந்தையை காப்பாற்றிய இந்த தாயின் துணிச்சலை நாங்கள் பாராட்டுகிறோம் அது வீண் போய்விடக்கூடாது என்பதற்காக இந்த மருத்துவமனையில் இருந்த ஒவ்வொருவரும் இந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம் என தெரிவித்திருக்கிறார். 5 வாரம் ஐசியூவில் இருந்த குழந்தை நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டு தற்போது நலமுடன் வீடு திரும்பி இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications