இன்றெல்லாம் பலருடைய சிந்தனை தங்களுக்கென ஒரு சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. ஏனெனில் பெரும்பாலானோர் நிறுவனங்களில் 9 முதல் 6 மணி வரையில் வேலை செய்வதை விரும்புவதில்லை. ஆனாலும் சிலர் போதிய முதலீடு இல்லாத காரணத்தினால் தொடர்ந்து தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அதே வேலையை செய்து வருகின்றனர். ஆனால் மும்பையைச் சேர்ந்த ஒரு நபர் தனது தடைகளை உடைத்தெறிந்து இன்று தனது சொந்த பிராண்டை உருவாக்கி அதன் மூலம் நல்ல லாபத்தை பார்த்து வருகிறார்.
மும்பையைச் சேர்ந்த சார்டர்ட் அக்கவுண்டண்டான சாஹில் ஜெயின் என்ற நபர் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அலுவலக கடிகாரம் 6 மணியை தொட்ட உடனே தனது பைகளை மூட்டை கட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்பி விடுவாராம். ஒன்றரை ஆண்டுகளாய் இதே போலத்தான் பணி புரிந்திருக்கிறார். ஆனால் கார்ப்பரேட் கலாச்சாரம் தனக்கு ஒத்துவரவில்லை என்பதை உணர்ந்த சாஹில் ஜெயின் அன்றைய தினம் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தில் இருந்து ரிசைன் செய்துவிட்டு தனது சொந்த பிராண்டை உருவாக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

அனுபவமிக்க நியூட்ரிசனிஸ்ட்டான தனது தாயார் மீனாவிடமிருந்து புதிய பிராண்டை உருவாக்குவதற்கான மோட்டிவேஷனை பெற்ற சாஹில், சத்தான உணவுப் பொருட்களை உருவாக்கும் தனது பிராண்டை ஆரம்பித்தார். தாய் மகன் என இருவரும் சேர்ந்து லட்டு, காய்கறி சிப்ஸ், திணை சார்ந்த பொருட்கள் என பல்வேறு ஆரோக்கிய உணவுகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
அப்படி அவர்கள் ஆரம்பித்த நிறுவனம் தான் மைட்டி மில்லட்ஸ். புனே, பெங்களூர், டெல்லி மும்பையில் உள்ள புகழ்பெற்ற தாஜ் குழுமம் போன்ற 50-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுடன் வாடிக்கையாளர்கள் தளத்தை உருவாக்கி, லாபகரமாக இந்த தொழிலை செய்து வருகின்றனர், கடந்த ஆண்டு அவர்கள் ஆண்டு வருமானமாக ரூ,50 லட்சத்தை பெற்றுள்ளனர் மற்றும் 2024 முதல் 2025 ஆம் நிதியாண்டில் தங்கள் விற்பனையை இரட்டிப்பாக்கவும் இலக்கு வைத்துள்ளனர்.
ஆனால் இந்த வெற்றிப் பயணம் அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அதற்காக கடுமையாக உழைத்துள்ளனர். மீனா சுவையான அதேசமயம் ஆரோக்கியம் சார்ந்த சமையல் வகைகளை உருவாக்குவதில் திறமை கொண்டவர்.. ஊட்டச்சத்து நிபுணராக இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள வாடிக்கையாளர்களின் ஆரோக்கிய இலக்குகளை அடைய நீண்ட காலமாக உதவி செய்து வருகிறார்.
அதேபோல சாஹிலும் தொழில் முனைவோர் மனப்பான்மை கொண்ட உணவுப் பிரியர். அவர்கள் இருவரின் பலத்தையும் ஒன்று சேர்த்து உணவு துறையில் தனித்துவமான ஒன்றை உருவாக்கிய அதில் வெற்றியும் கண்டுள்ளனர். உணவு பிரியர்களுக்கு ருசியாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியத்தையும் சேர்த்து வழங்க வேண்டுமானால் அதற்கு தனி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எனவே ஒவ்வொரு வார இறுதியிலும் சாஹில் தனது நண்பர்களுடன் மீனா செய்யும் உணவுகளை சாப்பிட வைத்து அவர்களிடம் ஃபீட்பேக் கேட்டு தெரிந்து கொள்வார்.
ஆரம்பத்தில் வடா பாவ் முதல் ஹைதராபாத் டோஸ்ட் வரை பல உணவு வகைகளையும் சமைத்துள்ளார். ஆனால் தானே ஒரு ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமற்ற உணவுகளை மார்க்கெட்டிங் செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்று கூறுகிறார் மீனா.
அதிலிருந்து ஆரோக்கியமான உணவுகளுக்கு சாஹிலும் மாறியுள்ளார். ஆரம்பத்தில் லட்டு பார்கள் உட்பட சிறிய அளவிலான தயாரிப்புகளுடன் தொடங்கியுள்ளனர். 2018-ஆம் ஆண்டில் மைட்டி மில்லட்சை அறிமுகப்படுத்தியுள்ளனர். இன்று அவர்கள் ஊட்டச்சத்து பார்கள், திணை சார்ந்த குக்கிகள், நூடுல்ஸ், பாஸ்தா, கேக், காய்கறி சிப்ஸ் போன்ற 50-க்கும் மேற்பட்ட பிரசர்வேட்டிவ் இல்லாத உணவுப் பொருட்களை வழங்குகின்றனர்.
ஆரம்பத்தில் இந்தத் தொழில் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக தோன்றியுள்ளது. ஏனெனில் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கிய போது சுமார் 1.5 வருடங்கள் தொழில் தொடங்க தாமதமாகியுள்ளது. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து தான் மைட்டி மில்லட்ஸ் நிறுவனம் வளர ஆரம்பித்துள்ளது. தாய் மற்றும் மகன் ஆகிய இருவரின் விடாமுயற்சி காரணமாக இன்று மைட்டி மில்லட்ஸ் நிறுவனம் இவ்வளவு பெரிய சாதனையை எட்டியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications