சென்னை: நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிப்பவை நம் ஸ்மார்ட் போன்கள், லேப்டாப்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள். ஆனால், இந்த சாதனங்கள் எதிர்பாராத விதமாக விழுந்து உடைந்து போய்விடவோ, திருட்டு போய்விடவோ வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் நிதி இழப்பை சந்திக்காமல் இருக்க உதவும் "போர்ட்டபிள் எக்யூப்மென்ட் இன்சூரன்ஸ்" (Portable Equipment Insurance) பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
போர்ட்டபிள் எக்யூப்மென்ட் இன்சூரன்ஸ் என்றால் என்ன?: போர்ட்டபிள் எக்யூப்மென்ட் இன்சூரன்ஸ் என்பது உங்கள் மொபைல் போன், லேப்டாப் (Laptop) போன்ற சாதனங்களுக்கு கிடைக்கும் ஒரு காப்பீட்டு திட்டம் ஆகும். இது பொதுவாக முழு அபாயக் கொள்கையைக் கொண்ட ஒரு பாலிசி ஆகும். அதாவது, விபத்து, ஷார்ட் சர்க்யூட் கோளாறு, திருட்டு போன்ற காரணங்களால் உங்கள் சாதனத்திற்கு ஏற்படும் சேதத்தை ஈடுகட்ட இந்தக் காப்பீடு உதவும்.

போர்ட்டபிள் எக்யூப்மென்ட் இன்சூரன்ஸ்-ஐ பல காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. இருப்பினும், பெரும்பாலான நிறுவனங்கள் இதனை தனியாக வழங்குவதை விட, ஹோம் இன்சூரன்ஸ் போன்ற வேறு ஏதேனும் ஒரு காப்பீட்டு திட்டத்துடன் இணைத்து வழங்க விரும்புகின்றன. இதன்மூலம் ஹோம் இன்சூரன்ஸ் எடுக்கும் போது போர்ட்டபிள் எக்யூப்மென்ட் இன்சூரன்ஸ் மற்றும் பிற வீட்டு பொருட்களுடன் சேர்த்து காப்பீடு செய்யப்படும். அதேபோல், பல சாதனங்கள் கொண்ட அலுவலகங்கள், சிறு வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து வகையான நிறுவனங்களும் அலுவலகப் பொருள்களுக்கும் "office package policy" என்பதன் கீழ் இந்தக் காப்பீட்டைப் பெறலாம். இது தீ மற்றும் பிற விபத்துக்களால் ஏற்படும் அலுவலகப் பொருட்களின் இழப்பீட்டை சரிசெய்ய உதவும்.
பொதுவாக, ஒரு போனுக்கு "ஆல் ரிஸ்க் இன்சுரன்ஸ்-ஐ" வாங்குவது சற்று கடினமாக இருக்கலாம். எனவே போன் வாங்கும்போதே இன்சுரன்ஸ் பெறுவதற்கான சிறந்த நேரம். பல மொபைல் போன் விற்பனையாளர்கள் போனை விற்பனை செய்யும் போதே இன்சூரன்ஸ் வழங்குகின்றனர்.
போனுக்கு மட்டுமின்றி லைஃப் இன்சூரன்ஸ் பிளான் எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் சூழ்நிலைகளில் குடும்பத்தின் நிதிநிலை பாதிக்கப்படாமல் இருக்க இன்சூரன்ஸ் பிளான்கள் உதவுகின்றன. இதில் 2 வகையான திட்டங்கள் உள்ளன. முதலாவது "எண்டவுன்மென்ட் பிளான்" இது காலாவதியாகும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்குவதுடன் காப்பீடு செய்யப்பட்டவர் இறந்துவிட்டால் அந்த குடும்பத்திற்கு கூடுதல் தொகை கிடைக்கும். இரண்டாவதாக "டேர்ம் பிளான்" இது குறைந்த ப்ரீமியத்தில் அதிகப்படியான காப்பீடு தொகையை வழங்குகிறது. ஆனால் காப்பீடு செய்யப்பட்டவர் பாலிசி காலத்தை கடந்து விட்டால், எந்த தொகையும் கிடைக்காது.


Click it and Unblock the Notifications