தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு ஓய்வூதிய திட்டமாகும். இதில் மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். ஓய்வூதியத்திற்குப் பிறகு ஒரு மொத்தத் தொகையையும், மாதாந்திர ஓய்வூதியத்தையும் NPS திட்டம் மூலம் சுலபமாகப் பெறலாம். இளம் வயதிலேயே முதலீடு செய்யத் தொடங்கினால், குறைவான மாதாந்திர பங்களிப்பும் கூட பெரிய அளவில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற உதவும்.
அன்றாட செலவுகள் பண வீக்கத்தின் காரணமாகத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் ஓய்வுக்கு பின்னால் சேமிப்பை மட்டுமே நம்பி இருப்பது அவ்வளவு போதுமானதாக இருக்காது. எனவே, உறுதியான வருமானம் பெறுவதற்கு ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வது, நீங்கள் பணியில் இருந்து வருமானம் பெறாமல் இருக்கும் நாட்களிலும் உங்களுக்கு உதவியாக மாத வருமானத்தை வழங்கும்.

NPS திட்டத்தில் ஒருவர் மாதாந்திர முதலீட்டைச் செய்து, அதன் பிறகு ஒரு மொத்தத் தொகையையும் மாதாந்திர ஓய்வூதியத்தையும் பெறலாம். ஒருவர் முன்கூட்டியே சேமிக்கத் தொடங்கினால், சீரான மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும். ஒருவர் 18 வயது முதல் 70 வயது வரை NPS திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
NPS திட்டம் 2 வகையான கணக்குகளை வழங்குகிறது. அவை Tier-I மற்றும் Tier-II. Tier-I கணக்கில், பணத்தை 60 வயது வரை திரும்பப் பெற முடியாது. ஓய்வூதியத்தின் போது, 60% தொகையை மொத்தமாக திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40 சதவீத தொகையை திரும்பவும் முதலீடு செய்ய வேண்டும். அதாவது வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
ரூ. 5,000 NPS திட்டத்தில் முதலீடு செய்து, ரூ. 96,000 ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி?: உங்கள் NPS கணக்கில், 25 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ. 5,000 டெபாசிட் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் உங்களுக்கு 10 % வருடாந்திர வருமானம் கிடைத்தால் மொத்தமாக ரூ.1,91,41,384 கார்ப்பஸை உருவாக்க முடியும். மேலும் 60 வயதில், உங்களின் மொத்த முதலீடு ரூ.21 லட்சமாக இருக்கும்.
60 வயதில், உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும். உங்களின் ஓய்வூதியக் கார்பஸில் 60 சதவிகிதம் வரை நீங்கள் திரும்பப் பெறலாம் அல்லது மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
100 சதவீத கார்பஸுடன் வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் அதிக மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற முடியும். நீங்கள் ரூ.1,91,41,384 கார்பஸிலிருந்து, ஆறு சதவீத வருமானத்தைப் பெற்றால், நீங்கள் ரூ.95,707 மாத ஓய்வூதியமாகப் பெறுவீர்கள்.
100,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?: அதற்கு நீங்கள் 24 வயது முதல் NPS-இல் முதலீடு செய்ய வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அதே நிபந்தனைகள் இந்த முதலீட்டிற்கு பொருந்தினால், உங்களின் ஓய்வூதிய கார்பஸ் ரூ.2,12,09,088 ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் மாத ஓய்வூதியமாக ரூ.1,06,045 பெறலாம்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!



Click it and Unblock the Notifications