சில சமயங்களில் வாழ்க்கை நமக்கு எதிர்பாராத வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும். அந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று அனைவருக்கும் முன் உதாரணமாக மாறிவிடுகிறார்கள். விஷயங்களை எல்லாம் நடத்திக் கொடுத்து விடும். அப்படித்தான் அப்துல் அலீமுக்கும் நடந்திருக்கிறது.
எந்த நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்தாரோ அதே நிறுவனத்தில் தற்போது பொறியாளராக வேலை பார்க்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார் அப்துல் அலீம் . சில நிறுவனங்கள் ஒரு நபரின் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில்லை திறமைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றன. அப்படி ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் இவருக்கு வாழ்க்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது.

4 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் தன் வாழ்க்கை சோஹோவால் எப்படி மாறியது என்பதை லிங்குடினில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி இருக்கிறது. லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் ஒரு பாதுகாவலராக ஜோஹோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து எப்படி அந்த நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்றேன் என்பதை விளக்கி இருக்கிறார்.
2013 ஆம் ஆண்டு வெறும் ஆயிரம் ரூபாயுடன் நான் என் வீட்டை விட்டு கிளம்பினேன் அதில் 800 ரூபாய்க்கு ரயில் டிக்கெட் எடுத்து விட்டேன். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தெருத்தெருவாக அலைந்து திரிந்து ஒரு வழியாக ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தேன் . அது தான் சோஹோ நிறுவனம் என கூறியுள்ளார்.
அப்போது அந்த நிறுவனத்தில் மூத்த நிலையில் வேலை செய்த ஒரு நபர் தன்னிடம் உன் பெயர் என்ன நீ என்ன படித்திருக்கிறாய் என்பது குறித்து கேட்டாராம் . அப்போது இவர் பத்தாம் வகுப்பு வரை படித்திருப்பதையும் கணினி சம்பந்தப்பட்ட அடிப்படை புரிதல்களை கொண்டிருப்பது ஹெச்டிஎம்எல் குறித்து தனக்கு கொஞ்சம் தெரியும் என கூறினாராம். அதற்கு இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறாயா என அவர் என்னிடம் கேட்டார் அதற்கு நான் ஆம் என பதில் கூறினேன் இதனை அடுத்து 12 மணி நேரம் செக்யூரிட்டி வேலை அதன் பிறகு படிப்பு என இருந்தேன் என கூறியுள்ளார்.
8 மாதங்களுக்கு பின் நானே சொந்தமாக ஒரு செயலியை உருவாக்கியதாகவும் பின்னர் அந்த செயலியை அந்த சீனியரிடம் கொடுத்து மேலாளரிடம் காண்பிக்க வைத்ததாகவும் கூறியிருக்கிறார் . நான் இப்போது சாஃப்ட்வேர் டெவலப்பராக சோஹோவில் வேலை செய்து வருகிறேன், என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி இருக்கும் சீனியர் சிபு அலெக்ஸிஸ் அவர்களுக்கு நன்றி எனக் கூறியிருக்கும் அவர் It is never too late to start learning என கூறி தன் பதிவை முடித்திருக்கிறார். தற்போதும் அவர் ஜோஹோ நிறுவனத்திலேயே வேலை செய்து வருவது அவருடைய லிங்குடின் பக்கத்தின் மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications