கேரளா: கேரளா மாநிலத்தில் மது போதைக்கும் சூதாட்டத்துக்கும் அடிமையாகி கிடந்த ஒரு கிராமத்தை மீட்டெடுத்து இருக்கிறார் ஒரு டீக்கடைக்காரர். இதற்கு அவர் பயன்படுத்திய ஆயுதம் சதுரங்க விளையாட்டு.
வடக்கு கேரளாவில் திரிச்சூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மரோட்டிசல் என்ற கிராமம். தற்போது இது இந்தியாவின் செஸ் கிராமம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ஒரு காலத்தில் இங்கு மதுபானம் தான் கரைபுரண்டு ஓடி கொண்டிருந்தது. ஆம் எங்கு பார்த்தாலும் மது அருந்தி விட்டு வன்முறையில் ஈடுபடுவது, சூதாட்டம் விளையாடுவது என இந்த கிராமத்தினர் இருந்தனர். குறிப்பாக ஆண்களின் முழு நேர வேலையாகவே இவை இருந்தன. அந்த சமயத்தில் ஊருக்கு வந்த உன்னிகிருஷ்ணன் என்பவர் தான் போதைக்கு அடிமையாக இருந்த கிராமத்தை சதுரங்க விளையாட்டுக்கு அடிமையாக வைத்தார்.

1960களில் உன்னிகிருஷ்ணன் என்பவர் பெங்களூருவில் மரோட்டிசல் கிராமத்துக்கு வந்தார். அப்போது கிராமமே போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருவதை கண்டு மனம் வருந்தினார். அப்போது ஒரு டீக்கடை வைத்து நடத்தி வந்த உன்னிகிருஷ்ணன், மக்களின் கவனத்தை திசை திருப்பினால் மது பழக்கத்தில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள் என முடிவு செய்தார்.
அவருக்கு ஏற்கனவே சதுரங்க விளையாட்டில் அனுபவம் இருந்தது. எனவே தன்னுடைய டீக்கடையில் சதுரங்கம் விளையாட தொடங்கினார். கிராம மக்களுக்கு இது புது விளையாட்டாக இருந்தது. அனைவரும் கூட்டம் கூடி இந்த விளையாட்டை கண்டு களிக்க தொடங்கினர். பின்னர் படிப்படியாக மக்களும் சதுரங்கம் கற்க தொடங்கினர்.

உன்னிகிருஷ்ணன் அனைவருக்கும் இலவசமாக சதுரங்கம் கற்று தந்தார். தன்னுடைய கடையையே சதுரங்க விளையாட்டின் மையமாக மாற்றினார். இப்படியாக அந்த கிராமத்து ஆண்களின் கவனம் சதுரங்க போட்டியின் பக்கம் திரும்பியது படிப்படியாக மது பழக்கத்தில் இருந்து விடுபட தொடங்கினர். சூதாட்டமும் குறைய தொடங்கியது.
தற்போது மரோட்டிசலில் எந்த பக்கம் திரும்பினாலும் மக்கள் சதுரங்கம் விளையாடி கொண்டிருப்பார்கள். தொலைக்காட்சி, மொபைல் போன்கள் என இவற்றை எல்லாம் தாண்டி இவர்களது கண்கள் சதுரங்க போட்டியை தான் உற்றுநோக்குகின்றன. இப்போது இந்த கிராமமே இந்த சதுரங்க விளையாட்டுக்கு அடிமையாக இருக்கிறது.
சதுரங்க விளையாட்டு தங்களின் கவனத்தை மேம்படுத்துகிறது என மக்கள் கூறுகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 90% மக்கள் இப்போது சதுரங்க புலிகளாக இருக்கின்றனர். பேருந்துநிலையம், தெருமுனைகள், வீடுகளின் முற்றங்கள் எல்லாம் விளையாட்டு அரங்கமாக இருக்கிறது.
இந்த கிராமத்தின் அடையாளமே சதுரங்க விளையாட்டு தான். எனவே தான் இதற்கு இந்தியாவின் செஸ் கிராமம் என பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கதையை மையமாக வைத்து ஆகஸ்ட் கிளப் என்ற பெயரில் ஒரு படமும் வெளியானது. உன்னிகிருஷ்ணனின் ஒரு சின்ன யோசனை தான் ஒரு கிராமத்தை காப்பாற்றியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications