19 வயதில் ரூ.24 கோடி மதிப்பிலான ஸ்டார்ட் அப்.. அமெரிக்காவை அசர வைத்த இந்திய மாணவன்!!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வ்ருகிறது. இதை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் சிறந்த முறையில் சாதிக்கின்றனர். ஏஐ பல்வேறு இளம் தொழில்முனைவோரை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. அப்படி மும்பையை சேர்ந்த 19 வயது Dhravya Shah -வின் வெற்றி கதை தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பெரும்பாலான இந்திய மாணவர்கள் IIT போன்ற கல்வி நிறுவனங்களில் சேர கடுமையாக படிப்பார்கள். ஆனால் திராவ்ய ஷா வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். 13 வயதிலேயே கோடிங் கற்க தொடங்கினார். இதை கொண்டு தனது 16-வது வயதிலேயே ஒரு ட்விட்டர் ஆட்டோமேஷன் கருவியை (Twitter automation tool) உருவாக்கி விற்பனை செய்தார். இந்த வெற்றி அவருக்குள் தன்னம்பிக்கையை தந்தது. இந்த பணத்தை கொண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.

19 வயதில் ரூ.24 கோடி மதிப்பிலான ஸ்டார்ட் அப்.. அமெரிக்காவை அசர வைத்த இந்திய மாணவன்!!

பின்னர் அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க சென்ற அவர் 40 வாரங்களில் 40 புதிய ப்ராஜெக்ட்களை உருவாக்குவேன் என்று சவால் விடுத்து, ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாகக் கோடிங் செய்தார். இந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக உருவானதுதான் AnyContext. இது பயனர்களின் ட்விட்டர் புக்மார்க்குகளைச் சேமித்து வைத்து, அவர்களுடன் உரையாட உதவும் ஒரு கருவியாக இருந்தது. இதுவே பிற்காலத்தில் 'Supermemory' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்தது.

Also Read

இன்றைய AI கருவிகள் ஒரு குறிப்பிட்ட உரையாடலுக்குப் பிறகு பழைய தகவல்களை மறந்துவிடுகின்றன. இதனை சரிசெய்யவே 'Supermemory' உருவாக்கப்பட்டது. இது பயனர்களின் கோப்புகள், மின்னஞ்சல்கள், உரையாடல்கள் என அனைத்தையும் ஒரு "நினைவகக் கட்டமைப்பாக" மாற்றி, ஏஐக்கு தேவையான தகவலை தருகிறது. இதனால், ஏஐ நிறுவனங்களால் தங்கள் தயாரிப்புகளில் சிறந்த நினைவாற்றல் வசதியை வழங்க முடிகிறது.

ஷாவின் இந்த முயற்சிக்கு உலக அளவில் முதலீட்டாளர்கள் ஆதரவு அளித்தனர். கூகுளின் ஏஐ தலைவர் ஜெஃப் டீன், கிளவுட் ஃபிளேர் தலைமை அதிகாரி டேனி நெக்ட் மற்றும் டீப்-மைண்ட் நிர்வாகிகள் உட்படப் பல முன்னணி தொழில்நுட்ப மேதைகள் ஷாவின் ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்துள்ளனர். 19 வயதிலேயே சுமார் 3 மில்லியன் டாலர் அதாவது 25 கோடி ரூபாய் நிதி திரட்டி தொழில்நுட்ப உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

Recommended For You

ஷாவின் திறமையை பாராட்டின் அமெரிக்காவின் மதிப்புமிக்க O-1 விசா அவருக்கு வழங்கப்பட்டது. இது அறிவியல், கலை அல்லது வணிகத் துறைகளில் அசாத்தியமான திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் ஒரு சிறப்பு குடியேற்ற அனுமதி.

தற்போது தன் ஸ்டார்ட் அப்பை அடுத்த கட்டத்திற்கு செல்லும் முயற்சியில் இறங்கி இருக்கும் ஷா, ஒரு பெரிய ஐடியாவிற்காக காத்திருக்காமல், மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் புரிந்து அதற்கான தீர்வை தரும் ஐடியாவை பிஸ்னஸாக மாற்ற வேண்டும் என்கிறார். தற்போது கல்லூரி படிப்பையே கைவிட்டு முழுநேரமாக தனது ஸ்டார்ட்அப் தொழிலில் கவனம் செலுத்துகிறார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+