ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் என்னும் வென்சர் பண்ட்-ஐ நிர்வாகம் செய்யும் Elara Capital, அதானி குழுமத்தில் அதிகம் முதலீட்டு செய்த மொரிஷியஸ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட டாப் 4 நிறுவனங்களில் ஒன்று.
அதானி குழுமத்தில் கடந்த 3 வருடத்தில் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த Elara Capital டிசம்பர் 2022 முடிவில் அதானி குழுமத்தின் 3 நிறுவனங்களில் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை முதலீடு செய்து அதானி பங்குகளை வைத்துள்ளது. இது Elara Capital நிறுவனத்தின் மொத்த முதலீட்டில் 96 சதவீதமாகும்.
ஆனால் Elara Capital சாதாரண நிறுவனம் இல்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்து தெரிவித்துள்ளது. ஏன் தெரியுமா..?
பெங்களூர் நிறுவனம்
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிபென்ஸ் நிறுவனமான Alpha Design Technologies Private Limited நிறுவனத்தில் அதானி குழுமம் மற்றும் Elara Capital ஆகிய இரு நிறுவனங்களும் ப்ரோமோட்டர் நிறுவனங்களாக உள்ளது.
ISRO மற்றும் DRDO
2003 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட Alpha Design Technologies நிறுவனம் ISRO மற்றும் DRDO ஆகிய அரசு அமைப்புகள் உடன் இணைந்து நெருங்கி பணியாற்றி வருகிறது. மேலும் Alpha Design Technologies மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து சுமார் 590 கோடி ரூபாய் மதிப்பிலான Pechora missile and radar systems-ஐ மேம்படுத்தவும், டிஜிட்டல் முறையில் மாற்றும் முக்கியமான ஒப்பந்தத்தை கொடுத்துள்ளது.
Alpha Design Technologies நிறுவனம்
Alpha Design Technologies நிறுவனத்தில் அதானி குழுமத்தின் அதானி டிபென்ஸ் மற்றும் டெக்னாலஜிஸ் நேரடியாக முதலீடு செய்து சுமார் 26 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் Alpha Design நிறுவனத்தில் அதானி டிபென்ஸ்-க்கு நிர்வாக அதிகாரம் உள்ளது என்பதை இந்நிறுவனத்தின் நிதியியல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட்
மேலும் ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் நிறுவனம் 2018 நவம்பர் 5 ஆம் தேதி VASAKA ப்ரோமோட்டர்ஸ் & டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் 44.3 சதவீத பங்குகளை கைபற்றியது. இதை தொடர்ந்து 2022 மார்ச் 31ல் VASAKA நிறுவனம் ஆல்பா டிசைன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 56.7 சதவீத பங்குகளை கைப்பற்றியது. இது மட்டும் அல்லாமல் 2018, டிசம்பர் 1 ஆம் தேதி ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் நிறுவனம் தனியாக ஆல்பா டிசைன் நிறுவனத்தில் 0.53 சதவீத பங்குகளை வாங்கியது.
அதானி டிபென்ஸ் மற்றும் ELARA
இப்படி பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் டிபென்ஸ் நிறுவனமான Alpha Design Technologies Private Limited நிறுவனத்தில் அதானி டிபென்ஸ் மற்றும் ELARA இணைந்து சுமார் 51.65 சதவீத பங்குகளை நிர்வாகம் செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
ELARA கேப்பிடல் முதலீடுகள்
ELARA கேப்பிடல் நிறுவனத்தின் இந்திய முதலீடுகளில் சுமார் 96 சதவீதத்தை ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் வாயிலாக தான் முதலீடு செய்துள்ளது, இது அனைத்தும் அதானி குழும நிறுவனத்தில் உள்ளது. டிசம்பர் 31, 2022 நிலவரப்படி ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் நிறுவனம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 1.6 சதவீத பங்குகளும், அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 3.62 சதவீத பங்குகளும், அதானி டோட்டல் நிறுவனத்தில் 1.62 சதவீத பங்குகளும் வைத்துள்ளது.
அதானி குரூப் விளக்கம்
இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து அதானி குரூப் விளக்கத்தில் 2017ல் அதானி டிபென்ஸ் நிறுவனம், பாதுக்காப்பு துறை உற்பத்தியில் நுழைய அதிகப்படியான ஆர்வத்தை கொண்டு இருந்தது. அப்போது Data Patterns, Astra Microwave, Apollo Microsystems, Alpha Design Technologies போன்ற நிறுவனங்களை ஆய்வு செய்தோம்.
26 சதவீத பங்குகள்
இதில் ஆல்பா டிசைன் நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏரோஸ்டக்சர்ஸ் துறையில் சிறந்து விளங்கிய காரணத்தாலும், சிறப்பான பாதுகாப்பு கருவிகள் சப்ளையர் ஆக அறியப்பட்டது. இதனால் 2018ல் முதலீடு செய்து 26 சதவீத பங்குகளை கைப்பற்றினோம்.
Vasaka Promoters ஆதிக்கம்
இந்த நிலையில் ELARA இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் பண்ட் ஆல்பா டிசைன் நிறுவனம் நேரடியாத 0.53 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் அதிகப்படியான பங்குகளை Vasaka Promoters வைத்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications