இந்தியாவில் பேட்டரி உற்பத்தியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது அமரராஜா பேட்டரீஸ். 1985 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவரால் தொடங்கப்பட்ட அமரராஜா நிறுவனம் இன்று இந்தியாவின் நம்பர் ஒன் பேட்டரி உற்பத்தி நிறுவனமாக மாறியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பவர் ராமச்சந்திர நாயுடு கல்லா.
இவருக்கு சிறு வயதில் இருந்தே மின்னணு சாதனங்களை ரிப்பேர் செய்வது அதில் இருக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அப்படித்தான் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்த இவர் அனந்தபுரி கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் எடுத்து பயின்றார். இதனை அடுத்து அமெரிக்கா சென்ற அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முது நிலை படிப்பை முடித்தார். அவருக்கு அங்கே மிகப்பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் ராமச்சந்திர நாயுடு கல்லா அந்த வேலையை விட்டுவிட்டு தன்னுடைய சொந்த நாட்டுக்காகவும் சொந்த கிராமத்திற்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி மீண்டும் இந்தியாவிற்கே திரும்பினார். அப்படி 1985 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பிய அவர் அமரராஜா பேட்டரி என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்பொழுது எக்சைடு நிறுவனத்தின் பேட்டரிகள் தான் இந்திய சந்தையில் அதிகம் செலுத்தி வந்தன. அதற்கு போட்டியிடக் கூடிய வகையிலான உள்கட்டமைப்பு அல்லது நிதி ஆதாரம் இவரிடம் கிடையாது.
எப்படியாவது இந்த துறையில் முதலிடத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஊக்கம் மட்டும் இருந்தது. அப்படித்தான் அவர் சீல்டு மெயின்டனன்ஸ் ஃப்ரீ பேட்டரிஸ் என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். அதற்கு முன்பு வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பேட்டரிகள் அனைத்துமே அதிக அளவு மெயின்டனன்ஸ் செலவு கொண்டிருந்தன. ஆனால் இவருடைய நிறுவனம் தயாரித்த பேட்டரிகள் ஸீரோ மெயின்டனன்ஸ் என்ற தொழில்நுட்பத்துடன் வந்தன. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் கண்ட்ரோல் நிறுவனத்தோடு இணைந்து அவர்களின் தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டு அதை இந்தியாவில் தன்னுடைய நிறுவனத்தின் பேட்டரி உற்பத்தியில் அவர் கொண்டு வந்தார்.
இந்தியாவில் விற்பனை செய்த பேட்டரிகள் அனைத்துமே ஆசிட் நிரப்பப்பட்ட பேட்டரிகளாக இருந்தன. ஆனால் அமர ராஜா தயாரித்த பேட்டரிகள் பராமரிக்கவே தேவையில்லாத ஆனால் நீண்ட காலம் பயன்படுத்த உகந்தவையாக இருந்தன . இதனை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இதை இந்திய சந்தையில் கொண்டு சேர்த்த அவருக்கு 2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹுண்டாய் நிறுவனத்திடம் இருந்து பெரிய ஆர்டர்கள் கிடைத்தன.
அதுதான் அமரராஜா நிறுவனத்தின் வளர்ச்சிக்கான முதல் படியாக இருந்தது. ஆனால் 2010 ஆம் ஆண்டு திடீரென திருப்பதியில் அமைந்திருந்த அமரராஜா பேட்ரி நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுமார் 20 கோடி மதிப்பிலான மூலப் பொருட்கள் கருகி போயின. இதனால் இந்த நிறுவனத்தால் குறித்த நேரத்தில் ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியவில்லை. நிறுவனத்தின் மீதான நம்பிக்கை குறைய தொடங்கியது. அந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து குறைந்த விலையில் பேட்டரிகள் இந்திய சந்தையில் கால் பதிக்க தொடங்கியிருந்தன.
இருந்தாலும் மனம் தளராத இராமச்சந்திரன் நாயுடு கல்லா மீண்டும் நிதி திரட்டி முதலீடு செய்து 18 மாதங்களுக்குள் புதிதாக ஒரு உற்பத்தி ஆலையை திறந்தார். இந்திய சந்தையில் மீண்டும் அவருடைய நிறுவனம் கால் பதிக்க தொடங்கியது. 2012 ஆம் ஆண்டு அமரராஜா பேட்டரி நிறுவனம் இந்தியாவில் கார்கள் தொடங்கி டெலிகாம் டவர்கள் வரை தங்களுடைய பேட்டரிகளை விற்பனை செய்தது இதன் மூலம் 2000 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது. படிப்படியாக பேட்டரி தொழில்நுட்பத்தில் புதிய புதிய விஷயங்களை கொண்டு வந்து அமரராஜா நிறுவனம் 2017 ஆம் ஆண்டு 5000 கோடி வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது.
தற்போது அமரராஜா பேட்டரி நிறுவனம் 16,000 கோடி மதிப்புள்ள பேட்டரி நிறுவனமாக மாறியிருக்கிறது. டாடா , ஹூண்டாய் ,அசோக் லேலண்ட், மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான பேட்டரிகளையும் 50 நாடுகளில் தங்களுடைய வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கிறது. இது தவிர அமரராஜா பேட்டரி நிறுவனத்தின் உரிமையாளர் ராமச்சந்திர நாயுடு கல்லா 16,000 பேருக்கு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளார் , தன்னுடைய கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சுகாதார வசதிகள் , கல்வி வசதிகள் உள்ளிட்டவற்றையும் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications