அதானி விரித்த வலைக்குள் ஆந்திரா, தமிழ்நாடு என 5 மாநிலங்கள் விழுந்தது எப்படி? பணம் விளையாடியிருக்கு!

அமெரிக்காவின் பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான SEC, கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, அசூர் பவர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாகி சிரில் கபனஸ் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் இந்திய அரசு அதிகாரிகளும் சிக்கியுள்ளனர்.

அமெரிக்கக் குற்றச்சாட்டின்படி, அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் லஞ்சம் கொடுத்துள்ளது. இந்த லஞ்சம் பெரும்பாலும் ஆந்திரப் பிரதேச அரசு அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள தொகை ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதானி விரித்த வலைக்குள் ஆந்திரா, தமிழ்நாடு என 5 மாநிலங்கள் விழுந்தது எப்படி? பணம் விளையாடியிருக்கு!

இவை அனைத்திற்கும் துவக்கம் சோலார் எனர்ஜி ஒப்பந்தம், மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியா தனது நெட் ஜீரோ இலக்கை 2030க்குள் அடைய வேண்டும் என்பதற்காக மாபெரும் புதுப்பிக்கத்தக்க மின்சார திட்டத்தைச் செயல்படுத்தத் துவங்கியது. இதில் முக்கியமாக Solar Energy Corporation of India (SECI) 12 கிகாவாட் சோலார் மின்சார திட்டம்.

மத்திய அரசு சோலார் மின்சார உற்பத்தியில் நேரடியாக இறங்காமல் தனியாரிடம் வாங்க முடிவு செய்தது. இதற்காக டென்டர் விடப்பட்டதில் அதானி கீரின் எனர்ஜி மற்றும் அமெரிக்காவின் அசூர் பவர் ஆகியவை இணைந்து 12 கிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதை மத்திய அரசின் SECI நிறுவனத்திற்கு விற்கப்பட வேண்டும், இதுதான் ஒப்பந்தம்.

ஆனால் அன்றைய காலக்கட்டத்தில் சோலார் மின்சாரம் என்பது இந்தியாவில் புதியது என்பதாலும், அதிகப்படியான முதலீடு தேவைப்படும் மின்சார உற்பத்தி முறையாக இருந்த காரணத்தால் அதானி கீரின் எனர்ஜி மற்றும் அசூர் பவர் ஆகியவை SECI-க்கு வழங்கும் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்தது. இதனால் இத்திட்டம் முடங்கும் கட்டத்தில் இருந்தது.

SECI அளிக்கப்படும் மின்சாரத்தை மாநிலங்களுக்கு விற்பனை செய்ய அதானி குழுமம் களத்தில் இறங்கியது. இதன் படி அதானி குழுமம், 2021-ல் ஆந்திரப் பிரதேச அரசின் உயர் அதிகாரியைப் பலமுறை சந்தித்து, ஆந்திரப் பிரதேசத்தின் மின் விநியோக நிறுவனங்களுடன் 7 கிகாவாட் சேலார் மின்சார வாங்குவதற்கு SECI உடன் ஒப்பந்தம் செய்ய லஞ்சம் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து இதே பார்மெட்டில் அதானி குழுமம் ஜூலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலகட்டத்தில் ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகளுடன் லஞ்சம் கொடுத்து SECI உடன் ஒப்பந்தம் செய்ய வைத்தது.

இப்பசி லஞ்சம் கொடுத்ததன் மூலம் 5 மாநிலங்களிடம் 12 கிகாவாட் மின்சாரத்திற்கான விற்பனை ஒப்பந்தத்தை இந்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (SECI) பெற்றது. இதன் மூலம் அதானி குழுமம் மற்றும் அமெரிக்காவின் அசூர் பவர் ஆகியவை SECI அமைப்பிடம் 12 கிகாவாட் சோலார் மின்சார விற்பனை திட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த 12 கிகாவாட் சப்ளை திட்டத்தில் அமெரிக்காவின் அசூர் பவர் 4 கிகாவாட் மின்சாரத்தை SECI சப்ளை செய்ய வேண்டும், விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தகத்தை இழக்க வேண்டுமே என்ற அச்சத்தில் அசூர் பவர் அதானி குழுமத்துடன் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மட்டும் அல்லாமல், அமெரிக்காவில் போலி ஆவணங்கள் அடிப்படையாக வைத்து முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டவும் அசூர் பவர் உயர் அதிகாரிகள் உதவி செய்துள்ளனர்.

அப்படி திரட்டப்பட்ட பணத்தை தான் அதானி குழுமம் மற்றும் அசூர் பவர் ஆகியவை இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்துள்ளது. 265 மில்லியன் டாலர் பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டதாக அமெரிக்க நீதி துறை குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 225 மில்லியன் டாலர் ஆந்திர பிரதேச அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+