உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ரெசிஷன் அச்சம் காரணமாகவும், செலவுகளைக் குறைக்கும் காரணத்திற்காகவும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் மட்டும் இதுவரையில் பணிநீக்கம் குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இதனால் ஆப்பிள் நிறுவனம் பணிநீக்கம் அறிவிக்காது என்பது இல்லை, ஆனால் இதுவரையில் அறிவிக்காது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும்,டெக் ஊழியர்கள் மத்தியிலும் ஆச்சரியம் அளிக்கும் விஷயமாகவே உள்ளது.
கடந்த 5 மாதமாக ஆப்பிள் நிறுவனம் பணிநீக்கம் அறிவிக்காமல் தப்பித்தது எப்படி..? டிம் குக் தலைமையிலான நிர்வாகம் இந்தப் பணிநீக்க பிரச்சனையைச் சமாளித்தது எப்படி..?
பிப்ரவரி 2
இதேவேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு யூனியன் பட்ஜெட் அறிவிக்கும் வேளையில் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிடுகிறது. இதனால் ஆப்பிள் ஊழியர்கள் உச்சக்கட்ட பீதியில் உள்ளனர். ஆனால் இதுநாள் வரையில் ஆப்பிள் பணிநீக்கம் அறிவிக்காதது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம்
ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 2019 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் குறிப்பாகக் கொரோனா காலத்தில் அமேசான் தனது ஊழியர்கள் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரித்தது.
ஊழியர்கள் சேர்ப்பு
இதேபோல் தான் மெட்டா, மைக்ரோசாப்ட், கூகுள் ஆகியவை ஊழியர்கள் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தியது. ஆனால் ஆப்பிள் இக்காலகட்டத்தில் ஊழியர்கள் எண்ணிக்கையை 20 சதவீதம் மட்டுமே உயர்த்தியது.
பணிநீக்கம் எஸ்கேப்
ஆப்பிள் நிர்வாகம் மற்றவர்களைப் போல் ஆர்வ கோளாறாக இல்லாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே சேர்த்த காரணத்தால் தற்போது பணிநீக்கம் அறிவிக்கப்படவில்லை.
ஸ்டீவ் ஜாப்ஸ்
கடைசியாக ஆப்பிள் நிறுவனத்தின் Mass Layoff நடந்தது 23 வருடத்திற்கு முன்பு, ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாக ஸ்டீவ் ஜாப்ஸ் திரும்பப் பொறுப்பு ஏற்ற பின்பு 1997 ஆம் ஆண்டு 4100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தார். அதன் பின்பு நடந்தது எல்லாம் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான பணிநீக்கம் தான்.
சிஇஓ டிம் குக்
ஆப்பிள் சிஇஓ டிம் குக் 2023 ஆம் ஆண்டுக்கான சம்பளத்தில் 47 சதவீத அளவீட்டை குறைத்துள்ளார், இதன் மூலம் இவருடைய சம்பளம் 98 மில்லியன் டாலரில் இருந்து 49 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
உயர் மட்ட அதிகாரிகள்
இதே காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தில் உயர் மட்ட அதிகாரிகள் எண்ணிக்கையைப் பெரிய அளவில குறைத்துள்ளது ஆப்பிள். இதோடு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சில முக்கியமான சலுகைகளைக் கட் செய்தது மூலம் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தியுள்ளது, இதன் காரணமாகவும் ஆப்பிள் ஊழியர்கள் பணிநீக்க அறிவிப்பில் இருந்து தப்பித்து உள்ளனர்.
புதிய ஊழியர்கள் நியமனம்
அனைத்தையும் விட முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தில் வெளியேறிய அல்லது பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இடத்தில் புதிதாக ஒருவரை நியமிக்கப்படவில்லை, இதனால் செலவுகளைத் தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் HR பிரிவு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications