AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அமிஞ்சிக்கரை முதல் அமெரிக்கா வரை என உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது, . AI தொழில்நுட்பம் பல துறைகளில் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உதாரணமாகப் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர் சேவைகளை ஏஐ வாயிலாக அளித்து வருகிறது, இதனால் இத்துறையில் பணியாற்றும் பல ஆயிரம் ஊழியர்கள் தொடர்ந்து வேலைவாய்ப்புகளை இழந்து வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் அரசு சேவைகளிலும் மக்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு ஏஐ சாட்பாட், ஏஐ போன் கால் சேவைகள் மூலம் பிராந்திய மொழிகளில் அளிக்கப்பட்டு வருகிறது.

AI தொழில்நுட்பம் பல வேலைகள் நீக்கப்படும் என்று கருத்து நிலவினாலும், அது பல புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பம் மனிதர்கள் செய்யும் பல கடினமான மற்றும் சலிப்பான வேலைகளைத் தானியங்கி செயலாக்கம் செய்யும், இதன் மூலம் மனிதர்கள் படைப்பாற்றல் மற்றும் சிந்தனை தேவைப்படும் வேலைகளில் கவனம் செலுத்த முடியும்.
மேலும், AI தொழில்நுட்பம் பல துறைகளில் திறன் மேம்பாட்டிற்கு உதவும். உதாரணமாக, AI தொழில்நுட்பம் மருத்துவமனைகளில் நோயறிதலை மேம்படுத்துவதற்கும் (இதில் கூகுள் நிறுவனம் இப்போது பணியாற்றி வருகிறது), நிதி நிறுவனங்களில் முடிவுகள் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படலாம் (இதில் கோல்டுமேன் சாச்சஸ் முதல் பல நிறுவனங்கள் பணியாற்றி வருகிறது).
மறுபக்கம் AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகள் மூலம் தினசரி பணிகளை ஆட்டோமேஷன் செய்யும்போது, பல்வேறு வேலைகளைச் செய்ய மனிதர்களின் தேவை குறைந்து, வேலையின்மை அதிகரிக்கக்கூடும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
மேலும், AI தொழில்நுட்பம் சில வேலைகளின் தன்மையை மாற்றலாம், இதன் மூலம் தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். இது சில தொழிலாளர்களுக்குச் சவாலாகக் கூட இருக்கலாம், ஏனெனில் அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள முடியாமல் போவதால் வேலைகளை இழக்கக் கூடும்.
AI தொழில்நுட்பம் இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், ஆனால் இது உடனடியாக இருக்காது. இந்தியாவில் AI தொழில்நுட்பத்தால் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும். ஆனால் அதன் பின்பு பல வேலைகள் மனிதர்கள் செய்ய வேண்டிய அவசியமும், கட்டாயமும் இருக்காது.
வேலையின்மை அதிகரிக்காமல் இருக்கவும், தொழிலாளர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும் அரசாங்கம் மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஐடி நிறுவனங்களில் கோடிங் செய்வதற்குக் கூடத் தற்போது ஏஐ சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதனால் ஆரம்பக்கட்ட ஊழியர்கள் செய்யும் பணிகளை இனி ஏஐ மூலம் செய்ய முடியும்.
இத்தகை ஏஜ கோடிங் இன்ஜின் கட்டமைப்பை உருவாக்க டிசிஎஸ் முதல் விப்ரோ வரையில் அனைத்து நிறுவனங்களும் பணியாற்றி வருகிறது. இதனால் ஐடி மற்றும் டெக் ஊழியர்களும் குறிப்பாகப் பிரஷ்ஷர்கள் அதிகப்படியான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications