பெங்களூர்: புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என விரும்புபவர்களின் பிரதான தேர்வாக பெங்களூர் நகரம் இருக்கிறது. ஏனெனில் தொழில் தொடங்கி வெற்றி பெற்ற பலரது புகலிடமாக பெங்களூர் தான். அண்மையில் வெளியான ஹாரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலும் இதனை உறுதிப்படுத்துகிறது.
ஹாரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலின் படி, தற்போது இந்தியாவில் 334 பில்லினியர்கள் இருக்கின்றனர். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள பெங்களூரில் வசிக்கும் ஐந்து முக்கிய பணக்காரர்கள் யார் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

1. அசிம் பிரேம்ஜி - ஹாரன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருப்பவர் தான் அசிம் பிரேம்ஜி. விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இவர் பெங்களூரில் தான் வசிக்கிறார். இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் ஒன்பதாவது இடத்தை பிடித்திருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 90,700 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஓராண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு 24 சதவீதம் உயர்ந்துள்ளது.
2. இர்ஃபான் ரசாக் - இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 51ஆவது இடத்தில் இருப்பவர் தான் இர்ஃபான் ரசாக். இவரும் பெங்களூர் வாசி தான். பிரஸ்டீஜ் குழுமத்தின் மேலாண் இயக்குனராக செயல்பட்டு வரக்கூடிய இவருடைய சொத்து மதிப்பு 43600 கோடி ரூபாய் ஆகும். இந்தியாவின் முன்னணி பிராபெர்டி டெவெலப்பராக பிரஸ்டீஜ் குழுமம் இயங்கி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு 178 சதவீதம் அதிகரித்துள்ளது.
3. நிதின் காமத் - ஸெரோதா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான நிதின் காமத் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 57ஆவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 41,000 கோடி ரூபாய் ஆகும். கடந்த ஓராண்டில் சொத்து மதிப்பு 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இவரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்.
4. எஸ். கோபாலகிருஷ்ணன் - இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 62 ஆவது இடத்தை பிடித்திருப்பவர். இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் இவரும் ஒருவராவார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2007 முதல் 2011 வரை செயல்பட்டு வந்தார். கடந்த ஓராண்டு காலத்தில் இவரின் சொத்து மதிப்பு 24 சதவீதம் அதிகரித்து 38,500 கோடி ரூபாயாக இருக்கிறது.
5. என் ஆர் நாராயணமூர்த்தி - தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் அறியப்பட்ட ஒரு பெயர்தான் நாராயணமூர்த்தி. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் இந்திய பணக்காரர்கள் பட்டியில் 69 வது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 36,600 கோடி ஆகும். 1981 முதல் 2020 வரை 21 ஆண்டு காலம் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் தான் நாராயண மூர்த்தி.
இவர்கள் மட்டும் இல்லாமல் ஜிஎம்ஆர் குழுமத்தின் நிறுவனர் ஜி எம் ராவ், மணிபால் மருத்துவக் குழுமத்தின் தலைவர் ரஞ்சன் பை, பயோகான் நிறுவனத்தின் நிறுவனர் கிரண் மசுந்தர் ஷா ஆகியோரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள பெங்களூர்வாசிகள் ஆவர்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications