கிரெடிட் கார்டுகள் தற்போது பணத் தேவைக்கு அத்தியாவசியமாக மாறிவிட்டது. வெளியில் சென்று கடன் வாங்காமல் ஏதேனும் பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் மக்கள் கிரெடிட் கார்டுகளைத் தான் பயன்படுத்துகின்றனர். ஆனால் உங்களுக்கு கிரெடிட் கார்டை வழங்கும் வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்தப் பதிவில் உங்களுடைய கிரெடிட் கார்டு வழங்குனருக்கு எந்தெந்த வகையில் வருவாய் கிடைக்கிறது? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வங்கிகளுக்கு கிரெடிட் கார்டு மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய சோர்சாக மாறியுள்ளது. எனவே கிரெடிட் கார்டை வழங்குவது வங்கிக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவருக்கும் நன்மை பயக்கும். கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கிகளுக்கு வட்டி தொகை, மார்க்கெட்டிங்-டை-அப் கட்டணம் மற்றும் பிற வகையான கட்டணங்களிலிருந்து பணம் கிடைக்கிறது.

கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கிகள் எப்படி பணம் சம்பாதிக்கின்றன?:
கிரெடிட் கார்டு வட்டி விகிதம்: கிரெடிட் கார்டு வட்டி என்பது வங்கிகள் கடன் கொடுப்பதற்கான கட்டணமாகும். அவை வருடாந்திர சதவீத விகிதம் (APR) என்று அழைக்கப்படுகின்றன. கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 30 சதவீதத்திலிருந்து 48 சதவீதம் வரை இருக்கும். அதே போல நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கு தினசரி அடிப்படையில் வட்டி விதிக்கப்படுகிறது. எனவே பயனர்கள் கடன் பெறும்போது வட்டி விகிதங்களை சரி பார்த்து கிரெடிட் கார்டுகளைப் பெற வேண்டும்.
மெர்ச்சன்ட் பீஸ்: கிரெடிட் கார்டுகளை பணம் செலுத்துவதற்கு பயன்படுத்த மெர்ச்சன்ட் பீஸ் விதிக்கப்படுகிறது. உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் பணம் செலுத்தும் போதெல்லாம் அதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. எனவே பரிவர்த்தனையின் முழு தொகையும் வணிகங்களுக்கு செல்லாது. இவை கிரெடிட் கார்டு நெட்ஒர்க்குகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டணம் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை இருக்கும். கிரெடிட் கார்டு பரிவர்த்தனையின் அளவைப் பொறுத்து இதன் மூலம் நல்ல வருவாய் வங்கிகளுக்கு கிடைக்கும்.
மார்க்கெட்டிங் டை-அப் கட்டணங்கள்: பிற பிராண்டுகள் அல்லது சேவை வழங்குநர்களுடன் இணைந்து வங்கிகளால் வழங்கப்படும் கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகள், மார்க்கெட்டிங் டை-அப் கட்டணங்களை வசூலிக்கின்றன. இத்தகைய கிரெடிட் கார்டுகள் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றன. வங்கிகளுடன் கூட்டு சேர்ந்து, இந்த பிராண்டுகள் பல்வேறு ரிவார்டுகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்குவதன் மூலம் அதிகமான வாடிக்கையாளர்களை அடைய முயற்சி செய்கின்றன. இதற்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம், வருடாந்திர கட்டணம், தாமதமாக பில் செலுத்துவதற்கான கட்டணம், பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் கட்டணம், வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன.
ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டணம்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும்போது இந்தக் கட்டணம் வசூலிக்கப்படும். இது பொதுவாக மொத்த பரிவர்த்தனை தொகையில் 2.5 முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.
வருடாந்திர கட்டணம்: இது கிரெடிட் கார்டைப் பராமரிக்க ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும் கட்டணம். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.
பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டில் இருந்து மற்றொன்றுக்கு கடனை மாற்றும்போது 3 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், சில வங்கிகள் பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர் கட்டணங்களை வசூலிப்பதில்லை.
வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம்: கிரெடிட் கார்டு பயனர்கள் வெளிநாட்டு நாணயங்களில் செலுத்தப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை இருக்கும்.
தாமதக் கட்டணம்: ஒரு கிரெடிட் கார்டு பயனர் குறைந்தபட்சத் தொகையை உரிய தேதிக்குள் செலுத்தத் தவறினால், வங்கிகள் தாமதக் கட்டணத்தை வசூலிக்கின்றன. இருப்பினும், இந்த கட்டணத்தில் வங்கிகள் சில சலுகைகளை வழங்குகின்றன. இது 14 முதல் 40 சதவீதம் வரை இருக்கும்.
கிரெடிட் கார்டுகள் மூலம் வங்கிகள் பல வழிகளில் பணம் சம்பாதிக்கின்றன. பயனர்கள் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும் மற்றும் பல்வேறு வங்கிகளால் வசூலிக்கப்படும் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களின் நிதித் தேவைகளுக்கு ஏற்ற ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications