கொல்கத்தா: காலணிகள் என்றாலே தற்போது நிறைய பிராண்டுகள் வந்துவிட்டன. குறிப்பாக வெளிநாட்டு பிராண்டுகளையும் நாம் பெரிய அளவில் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை காலணிகள் என்றாலே குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வதற்கான காலணிகள் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது பேட்டாவாக தான் இருக்கும்.
இந்தியர்களுக்கு பிடித்த பிராண்டான பேட்டா இந்திய நிறுவனம் கிடையாது . பேட்டா ஒரு வெளிநாட்டு நிறுவனம்தான் அது எப்படி இந்தியாவிற்குள் வந்து இந்தியர்களுக்கு பிடித்தமான ஒரு காலணி பிராண்டாக மாறியது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செக்கோஸ்லோவாக்கியா நாட்டுக்கு சொந்தமானது தான் பேட்டா நிறுவனம். முதன்முறையாக 1931 ஆம் ஆண்டு பேட்டா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய முதல் கடையை நிறுவியது.
கொல்கத்தாவிற்கு அருகே கோம்நகர் என்ற இடத்தில் தான் பேட்டா நிறுவனம் தன்னுடைய முதல் காலணி விற்பனை நிலையத்தை அமைத்தது. ரப்பர் மற்றும் கேன்வாஸ் ஷூக்களை இந்த நிறுவனம் விற்பனை செய்ய தொடங்கியது.
இந்தியாவின் காலநிலைகளுக்கு ஏற்ற வகையிலான காலணிகளை தயாரித்து இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்பனை செய்தது. அந்த சமயத்தில் பேட்டா நிறுவனம் அறிமுகம் செய்த காலணிகள் எடை குறைவாகவும் அணிவதற்கு சௌகரியமாகவும் இருந்ததால் இந்தியர்கள் மத்தியில் இது பிரபலமாக தொடங்கியது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளிலேயே பேட்டா ஷூ என்ற பெயர் பிரபலமானது. எனவே பேட்டா நிறுவனம் இந்தியாவிலேயே காலணி உற்பத்தி ஆலையை நிறுவியது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த காலணி உற்பத்தி ஆலைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இதன் காரணமாக கொல்கத்தாவில் இந்த ஆலைகள் இருந்த பகுதியே பேட்டா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1939 ஆம் ஆண்டில் பேட்டா நிறுவனம் இந்தியாவில் 86 கடைகளை நிறுவியிருந்தது. ஒரு வாரத்திற்கு 3,500 ஜோடி ஷூக்களை விற்பனை செய்தது.
பேட்டா நிறுவனத்தை பொருத்தவரை அதன் தரம் குறித்து வாய் வழியாக மக்கள் மூலம் ஒருவருக்கொருவர் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த வகையில் தான் இந்த மார்க்கெட்டிங் நடந்தது.
தரமான பொருள் என்பதால் மக்களே இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக மாறினர். 1980 களில் பேட்டா நிறுவனத்திற்கு காதிம், பாரகான் உள்ளிட்ட நிறுவனங்களால் கடும் போட்டி ஏற்பட்டது. ஆனால் இந்த சவால்கள் அனைத்தையும் கடந்து பேட்டா நிறுவனம் தொடர்ந்து இந்தியர்களுக்கு பிடித்த காலணி பிராண்டாக செயல்பட்டு வருகிறது.
பேட்டா நிறுவனம் தங்களுடைய நிறுவனத்தின் துணை பிராண்டுகளையும், ஹேண்ட் பேக், சன் கிளாசஸ் என நவீன காலத்திற்கு தேவையான பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. தற்போது இந்தியாவில் பேட்டா நிறுவனம் 1375 கடைகளை வைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி ஆன்லைன் வாயிலாகவும் தன்னுடைய காலணிகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய காலணி விற்பனை நிறுவனமாகவும் மிகப்பெரிய காலணி உற்பத்தியாளராகவும் பேட்டா நிறுவனம் தொடர்ந்து தன் நிலையை தக்க வைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications