இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, தேசிய அளவில் கிரிக்கெட் விளையாட்டினை மேலாண்மை செய்து வரும் ஒரு அமைப்பு. உலகிலேயே சக்திவாய்ந்த ஒரு கிரிக்கெட் அமைப்பாக மட்டுமில்லாமல் நிதி ரீதியாக வலுவான ஒரு அமைப்பாகவும் பிசிசிஐ மாறி இருக்கிறது.
பிசிசிஐயின் ஆண்டு பொது குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி மும்பையில் நடைபெற இருக்கிறது. பிசிசிஐ யின் புதிய தலைவர் தலைவராக யார் தேர்ந்தெடுக்கப்பட போகிறார் என்பது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கிடையே பிசிசிஐ-இன் வருமானம் குறித்த தகவல்களை வெளியாகி ரசிகர்களை வாயடைத்து போக செய்திருக்கிறது.

பிசிசிஐ கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 14,627 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் மட்டும் 4,193 கோடி ரூபாயை பிசிசிஐ தன்னுடைய கருவூலத்தில் சேர்த்திருக்கிறதாம். இதன் மூலம் பிசிசிஐ இடம் இருக்கக்கூடிய வங்கி இருப்பு மற்றும் ரொக்க இருப்பு உள்ளிட்டவற்றின் மொத்த மதிப்பு 20,686 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. cricbuzz இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அனைத்து மாநில பிரிவுகளுக்கும் வழங்க வேண்டிய நிதிகளை வழங்கிவிட்டு மீதமுள்ள தொகை மதிப்பீடு செய்தாலே இத்தனை ஆயிரம் கோடி இருக்கிறதாம். பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் சூழலில் இந்த நிதி சார்ந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதில் 2019 ஆம் ஆண்டிலிருந்து பிசிசிஐயின் வங்கி இருப்பு மற்றும் ரொக்க இருப்பு என்பது 6,059 கோடி ரூபாயாக இருந்து 5 ஆண்டுகளில் அது 20 ,686 கோடி ரூபாய் என அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
இதன் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் பிசிசிஐ அமைப்பு 14 , 627 கோடியை வருமானமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பிசிசிஐ அமைப்புக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தான் அதிக வருமானத்தை தருகின்றன. பிசிசிஐ வருமான வரியே செலுத்துவதில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில் சுமார் 3,000 கோடி ரூபாயை வருமான வரி செலுத்துவதற்காகவே ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் போட்டிகள் மூலம் வந்த வருமானம், ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பகிர்ந்த வருமானம் ஆகியவற்றை தாண்டி வங்கிகளில் வைத்திருக்கும் ஃபிக்சட் டெபாசிட்களின் மூலம் மட்டுமே 986 கோடி ரூபாயை வருமானமாக பெற்றுள்ளது பிசிசிஐ.
1928ஆம் ஆண்டு மெட்ராஸில் தொடங்கப்பட்டது தான் பிசிசிஐ. சுதந்திரமான ஒரு அமைப்பாக இது செயல்படுகிறது. சர்வதேச போட்டிகளுக்கு ஆண்கள் கிரிக்கெட் அணி, மகளிர் கிரிக்கெட் அணி, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளை நிர்வாகம் செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications