பெங்களூரில் வீடுகள் விற்பனை 2 சதவீதம் குறைந்து விட்டது. கடந்த ஆண்டில் 13,390 வீடுகள் விற்றன. இது இந்தாண்டு 13,333 ஆக குறைந்துள்ளது. ரூ.50 லட்சம் மதிப்புள்ள வீடுகள் பிரிவில் 65 முதல் 70 சதவீதம் வரை விற்பனை கடந்த 3 மாதங்களில் குறைந்து விட்டது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வீடுகள் பிரிவு விற்பனை 7 சதவீதம் குறைந்துள்ளது.
இது ஒரு தற்காலிக சரிவு என்று நைட் பிராங் இந்தியா நிறுவன ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் விவேக் ரதி கூறியுள்ளார்.

பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையிலும் ரூ.1 கோடி மதிப்புள்ள வீடுகள் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
வீட்டு விற்பனையில் தண்ணீர் நெருக்கடி அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெங்களூரு ஒரு முக்கியமான வணிகச் சந்தையாகவும், அலுவலக இடத்தை ஆக்கிரமிப்பவர்களின் விருப்பமான நகரமாகவும் இருப்பதால், இந்தப் பிரச்னையை விரைவாக சீர்படுத்த வேண்டும்.
இது நாட்டின் வணிக குத்தகை இடங்களுக்கான தலைநகரம் ஆகும். தண்ணீர் பிரச்னையை தீர்க்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நைட் பிராங் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஷிஷிர் பஜ்ஜால் கூறினார்.
பெங்களூருவில் குடியிருப்பு விற்பனை சந்தை கடந்த 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி - மார்ச்) கணிசமான வளர்ச்சியைக் கண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது, பெங்களூருவில் வீடு வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.
2024ம் ஆண்டின் முதல் காலாண்டில், பெங்களூரில் மொத்தம் 13,133 குடியிருப்பு யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே காலகட்டத்தில், 13,135 புதிய குடியிருப்பு யூனிட்கள் சந்தையில் இறக்கப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (YoY) 9% வளர்ச்சியைக் காட்டுகிறது.
தேசிய அளவில் எட்டு முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், பெங்களூரில் சராசரி குடியிருப்பு விலை கடந்த ஆண்டை விட 9% அதிகரித்துள்ளது, இது இரண்டாவது அதிக உயர்வாகும். பெங்களூருவில் ஒரு சதுர அடி கட்டமைப்புக்கான சராசரி விலை ரூ. 6,145 ஆக இருந்தது.
₹50 லட்சத்திற்கும் குறைவான விலைப் பிரிவில் 993 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 68% குறைவு.
₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரையிலான விலைப் பிரிவில் 6065 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 7% குறைவு.
₹1 கோடிக்கு மேற்பட்ட விலைப் பிரிவில் 6075 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 50% அதிகரிப்பு. பெங்களூருவில் குடியிருப்பு விற்பனை கடந்த ஆண்டை விட வளர்ச்சியடைந்து வருவது நம்பிக்கையளிக்கும் செய்தி என்றாலும், சில கவலைகளையும் அளிக்கிறது.
குறைந்த விலைப் பிரிவில் (₹50 லட்சத்திற்கும் குறைவு) விற்பனை குறைந்திருப்பது, இந்த பிரிவினரைச் சேர்ந்த வீடு வாங்குவோரை பாதிக்கும். அதே நேரத்தில், ₹1 கோடிக்கு மேற்பட்ட பிரிவில் விற்பனை அதிகரிப்பு, வீடுகளின் விலை மேலும் உயரும் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
பெங்களூருவில் கட்டுமான செலவுகள் அதிகரிப்பதும், வங்கிகளின் கடன் வட்டி விகிதங்கள் உயரும் சாத்தியமும் இருப்பதால், எதிர்காலத்தில் வீடுகளின் விலைகள் மேலும் உயரக்கூடும் என்ற கவலை நிலவுகிறது. இது, வீடு வாங்குவோருக்கு சுமையாக அமையும்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பெங்களூரு 3.5 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இட விற்பனையை செய்துள்ளது. நாட்டின் தகவல் தொழில்நுட்பத் தலைநகரம் வணிகச் சந்தை வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது முன்னணி எட்டு இந்திய நகரங்களில் 16.2 மில்லியன் சதுர அடி பரிவர்த்தனைகளில் 22% ஆக இருந்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications