பனிப் போர் காலத்தில் சோவியத் யூனியன் தன்னுடைய ராணுவ வலிமையைப் பல மடங்கு அதிகரித்துப் பொருளாதாரத்தில் கோட்டை விட்டது. சோவியத் யூனியன் சீட்டுக் கட்டு போன்று சரிந்து விட்டது எனினும் சோவியத் யூனியனின் அணு ஆயுதங்கள் அனைத்தும் ரஷ்யாவிடம் தஞ்சம் அடைந்தது.
எனவே ரஷ்யாவின் அணு ஆயுத களஞ்சியம் என்பது மிகவும் பெரியது மற்றும் வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. பனிப்போரின் பொழுது, சோவியத் யூனியனிடம் சுமார் 40000 அணு ஆயுதங்களும், அமெரிக்காவிடம் சுமார் 30000 அணு ஆயுதங்களும் இருந்ததாகவும் பனிப் போருக்கு பின்பு செய்யப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களின்படி, இந்த இரு நாட்டிடமும் இருந்த அணு ஆயுதங்களும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன.
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இன்றைய தேதியில், இந்த இரு நாடுகளிடமும், குறிப்பிடத்தக்க அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதம் இந்த இரு நாட்டிடம் இருப்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. அந்த அணு ஆயுதங்களை இந்த இரு நாடுகளும் எவ்வாறு செலுத்துகின்றன் என்பதில் இருக்கின்றது விவகாரம்.
ரஷ்யா முன்னோடி
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு, ஒவ்வொரு நாட்டிடமும் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகின்றது. அந்தக் கூட்டமைப்பின் 2022 அறிக்கையின் படி, அமெரிக்காவிடம் 5428, ரஷ்யாவிடம் 5977 அணு ஆயுதங்கள் இருக்கின்றன.
இதைத் தொடர்ந்து சீனாவிடம் மொத்தம் 350 அணு ஆயுதங்களும், பிரான்ஸ்ஸிடம் சுமார் 290, பிரிட்டன் நாட்டிடம் 225 அணு ஆயுதங்களும் உள்ளன என அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குத் தயார் நிலையில்
இதில் ரஷ்யாவிடம் உள்ளவற்றில் சுமார் 1,500 அணு ஆயுதங்கள் ஓய்வு பெற்றவை அதாவது செயல்பாட்டில் இல்லாதவை. ஆனால் இவற்றின் உறக்க நிலையை எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றி விடலாம் என்பது தான் தற்போது பலரின் அச்சம். மேலும் 2889 அணு ஆயுதங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சுமார் 1588 ஆயுதங்கள் உபயோகிக்கத் தயார் நிலையில் உள்ளன.
அணு ஆயுதங்கள்
அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு அறிக்கைப்படி இந்த 1588 ஆயுதங்களில், சுமார் 812 ஆயுதங்கள் நிலம் சார்ந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளிலும், சுமார் 576 நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளிலும், சுமார் 200 ஆயுதங்கள் கனரகக் குண்டுவீச்சு விமானங்களில் இருந்து ஏவப்படக்கூடிய தயார் நிலையில் உள்ளன எனத் தெரிகிறது.
ரெடியா இருக்கு
அமெரிக்காவிடம் சுமார் 1644 மூலோபாய அணு ஆயுதங்கள் உள்ளன, அதாவது உபயோகிக்கத் தயார் நிலையில் உள்ளன. இந்த இரு நாட்டிடம் உள்ள அணு ஆயுதங்கள், இந்த உலகை பலமுறை அழிக்கப் போதுமானதாகும்.
ஏவும் முறை
இதில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இன்றைய தேதியில், இந்த இரு நாடுகளிடமும், குறிப்பிடத்தக்க அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன. அணு ஆயுதம் இந்த இரு நாட்டிடம் இருப்பது ஒன்றும் சிதம்பர ரகசியம் அல்ல. அந்த அணு ஆயுதங்களை இந்த இரு நாடுகளும் எவ்வாறு செலுத்துகின்றன் என்பதில் இருக்கின்றது விவகாரம்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும், நிலம் (ஏவுகணை), நீர்(கப்பல், மற்றும் நீர் முழ்கிக் கப்பல்), மற்றும் காற்று (விமானம்) ஆகிய மூன்று முறைகளைப் பயன்படுத்தி அணு ஆயுதங்களைச் செலுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளன. ஏதேனும் ஒரு வழி அடைபட்டால் இந்த இரு நாடுகளும் மற்றொரு முறையைக் கண்டிப்பாகக் கையில் எடுக்கும்.
ரதக் கஜ துரகபதாதிகள்
ரஷ்யாவிடம் பல்வேறு ஏவுணைகள் உள்ளன. அவற்றில் சுமார் 400 கண்டம் விட்டுக் கண்டம் தாவும் ஏவுணைகள், அணு ஆயுதத்தைத் தாங்கிச் செல்லும் திறன் படைத்தவையாக இருக்கின்றன. இந்த ஏவுணைகளைப் பயன்படுத்திச் சுமார் 1185 அணு ஆயுதங்களை எதிரி நாட்டில் தாக்கும் திறன் கொண்டவை. கடல் வழியைப் பொருத்து, ரஷ்யாவிடம் சுமார் 10 அணு சக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இத்தகைய நீர்மூழ்கி கப்பல்களைப் பயன்படுத்திச் சுமார் 800 அணு ஆயுதங்களை ஏவலாம். அதோடு மட்டுமல்ல, ரஷ்யாவிடம் சுமார் 60 முதல் 70 வரையிலான அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் விமானங்கள் உள்ளன.
புதியன புகுதல்
அமெரிக்க அணு ஆயுத கூட்டமைப்பின் 2022 ம் ஆண்டு அறிக்கையின் படி, ரஷ்யாவும் சீனாவும் தங்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. இது உலகில் உள்ள பலம் மிகுந்த நாடுகளுக்கு இடைய அணு ஆயுதப் போட்டியை வேகப்படுத்தியுள்ளது. எனினும் இத்தகைய ஆயுதப் போட்டிகளைத் தடுக்க ஆயுதக் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை அமெரிக்கா கண்டிப்பாகத் தொடரும் என்றும் தெரிவிக்கின்றது.
அமெரிக்கா புதிய வகை அணு ஆயுதங்கள்
எனினும் இந்தத் தகவல்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மறுக்கின்றார். அமெரிக்கா புதிய வகை அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகத் தம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இருப்பதாக அவர் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தங்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்தி வருகிறது, இந்த இரு அறிக்கைகளின் படி கண்கூடாகத் தெரிகின்றது.
நவீனத்தை நோக்கி ரஷ்யா
1991 இல் சோவியத் யூனியன் சரிந்த பிறகு மிக சில நாடுகள் மட்டுமே அணு ஆயுத சோதனைகளை நடத்தியுள்ளன. அமெரிக்கா 1992 ம் ஆண்டும், சீனா மற்றும் பிரான்ஸ் கடைசியாக 1996 ம் ஆண்டும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் 1998 ம் ஆண்டும், இறுதியாக வட கொரியா 2017ம் ஆண்டு சோதனைகளை நடத்தியுள்ளன. சோவியத் யூனியன் கடைசியாக 1990 இல் சோதனை செய்தது. அதன் பிறகு ரஷ்யா எந்தவிதமான அணு ஆயுத சோதனைகளிலும் ஈடுபடவில்லை.
புதினின் கைகளில் உலகத்தின் எதிர்காலம்
விவேக்கின் ஒரு காமெடி மிகப் பிரபலம். பேர் வெச்சியே. சோறு வெச்சியா? இந்தக் கேள்வி இங்கேயும் பொருந்தும். அணு ஆயுதங்கள் கைகளில் உள்ளன. ஆனால் அவற்றை ஏவக்கூடிய கட்டளையை யார் வழங்குவது. இதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். ரஷ்யாவைப் பொறுத்தவரை, புதினைத் தவிர வேறு யார் கைகளிலும் இந்தப் பொறுப்பு இல்லை. ரஷ்யாவின் மூலோபாய மற்றும் மூலோபாயமற்ற அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புதினின் முடிவே இறுதியானது.
செகெட்
செகெட் எனப்படும் அணு ஆயுதத்தைக் கட்டுப்படுத்தும் பிரீஃப்கேஸ் எல்லா நேரங்களிலும் விளாடிமிர் புதினிடம் இருக்கும். தற்போதைய ரஷ்ய பாதுகாப்பு மந்திரியான Sergei Shoigu மற்றும் தற்போதைய பொது ஊழியர்களின் தலைவர், Valery Gerasimov ஆகியோரிடமும் இத்தகைய பிரீஃப்கேஸ்கள் இருப்பதாக ராயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பிரீஃப்கேஸ்
இந்தப் பிரீஃப்கேஸ் ஒரு தகவல்தொடர்பு கருவியாகும். இது விளாடிமிர் புதின் அவரது இராணுவ உயர் அதிகாரிகளுடன் இணைக்கிறது. இதைப் பயன்படுத்தி மிகவும் ரகசியமான "Kazbek" மின்னணு கட்டளை வழங்கப்பட்டு, அந்தக் கட்டளை பாதுகாப்பான நெட்வொர்க் வழியாக ராக்கெட் படைகளுடன் இணைக்கிறது. Kazbek கட்டளை Kavkaz எனப்படும் மற்றொரு அமைப்புடன் இணைக்கப்படுகின்றது.
இறுதி நாட்கள்
ரஷ்யா மீது ஒரு மூலோபாய அணுசக்தி தாக்குதல் நடைபெற்றதாக அந்த நாட்டின் அதிபர் நினைத்தால், அவர் தன்னிடமுள்ள பிரீஃப்கேஸைப் பயன்படுத்தி, அணுசக்தி குறியீடுகளை வைத்திருக்கும் பொதுப் பணியாளர் கட்டளை மற்றும் இருப்பு கட்டளை பிரிவுகளுக்கு நேரடி ஏவுதல் உத்தரவை அனுப்புவார்.
டெட் ஹேண்ட் ஆக்டிவேட்
அணுசக்தி தாக்குதல் உறுதிசெய்யப்பட்டால், புதின் கடைசி முயற்சியாக "டெட் ஹேண்ட்" அல்லது "பெரிமீட்டர்" அமைப்பு என்று அழைக்கப்படும் last resort என்பதை ஆக்டிவேட் செய்யப்படும். அதன் பிறகு நடப்பதெல்லாம் கணிணியின் கைகளில், கணிணிக் கட்டுப்பாடு மூலம் ரஷ்யாவின் பரந்து விரிந்த ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து அணுசக்தித் தாக்குதல்களை முன்னெடுக்கும் என ராய்ட்டர்ஸ் தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications