இன்றெல்லாம் சில பொருட்களில் கலப்படங்கள் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன. உதாரணமாக தேனிற்கு பதில் சர்க்கரைபாகு, மிளகிற்கு பதில் பப்பாளி விதை என கலப்படங்களுடன் பொருட்கள் விற்பனையாகின்றன. இந்நிலையில் சுத்தமான தேனை உற்பத்தி செய்து அதன் மூலம் லட்சங்களில் சம்பாதித்து வருகிறார் ஒருவர். அவர் அப்படி என்ன செய்கிறார்? இதன் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கிறது? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆத்மானந்த சிங் என்ற விவசாயி தேனி வளர்ப்பில் நல்ல லாபம் பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் வழக்கமான பயிர் சாகுபடியில் இருந்து தேனி வளர்ப்பிற்கு மாறியுள்ளார். இப்போது தனது வழக்கத்திற்கு மாறான முயற்சியின் மூலமும் நல்ல லாபம் பார்த்து வருகிறார். ஆத்மானந்த சிங் ஒரு பட்டதாரி. இவருடைய குடும்பம் பாரம்பரியமாக தேனீ வளர்ப்பில் ஈடுபடும் குடும்பமாகும். இந்த தொழிலில் தீவிரமாக ஈடுபடும் மூன்றாம் தலைமுறையினரில் இவரும் ஒருவர்.

ஆத்மானந்த் சிங்கின் தாத்தா தேனி வளர்ப்பில் குடும்பத்தை நடத்தினார். மேலும் அவரது தந்தை அதே பாரம்பரியத்தை தொடர்ந்துள்ளார். அதேபோல ஆத்மானந்த் சிங்கும் இன்று நவீன விவசாயத்தில் புதிய சாதனையை படைத்துள்ளார். தேனீ உற்பத்தி துறையில் அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளை பாராட்டி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவர் ஆண்டுக்கு சுமார் 1200 தேன் கூடுகளை பராமரிக்கும் ஒரு விவசாயி. எதிர்பாராத வானிலை இருந்தால் அவருடைய தேன்கூடுகளின் எண்ணிக்கை 900-ஆக சற்று குறையும். இந்த ஆண்டு பருவமழையின் பாதகமான விளைவுகள் தேனி கூடுகளை சற்று பாதித்துள்ளது.
தேனீக்கள் வளர்ப்பில் உள்ள சவால்கள்: தேனீ வளர்ப்பு என்பது ஒரு பருவ கால வணிகம் ஆகும். மேலும் தேனீ பெட்டியின் விலை அந்தந்த பருவத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். இந்த விவசாயத்தை தொடங்க தனிப்பட்ட முன் முயற்சி தேவை. ஆத்மானந்த் சிங் தேனி வளர்ப்பில் கவனம் செலுத்தி தனது மனைவியின் நிர்வாகத்தின் கீழ் "ரீபி ஹனி" என்ற பிராண்டையும் நிறுவியுள்ளார். இந்த பிராண்ட் டாபர் மற்றும் பதஞ்சலி போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைந்து சந்தையில் விற்பனையாகிறது.
சுமார் 1200 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 50 முதல் 60 கிலோ கிராம் வரை தேனை விற்பனை செய்து வருகிறார். தேன் உற்பத்தியாளர்களுக்கு ஒரு சவாலான சந்தை சூழ்நிலை நிலவுகையில் ஆத்மானந்த் சிங் தனித்து நிற்கிறார். ஏனெனில் தற்போது சந்தையில் போலியான தேன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இவரைப் போன்ற உண்மையான தேனீ வளர்ப்பவர்களும் குறிப்பிடத்தக்க இழப்பை சந்திக்கின்றனர்.
தேன் தயாரிப்பில் பல ஏமாற்று நடைமுறைகள் செய்யப்படுகின்றன. தேனை தடிமனாக மாற்ற பல்வேறு பொருட்கள் கலக்கப்படுகிறது. எனவே எப்போதும் தேன் வாங்கும் போது சரியான தேனை கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார் ஆத்மானந்த் சிங்.
தேனீ வளர்ப்பில் வருடாந்திர செலவுகள், தேனி பெட்டிகளுக்கான செலவுகள், பராமரிப்பு செலவுகள், தொழிலாளர்களுக்கான செலவுகள் என பல வகையான செலவுகளையும் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த சவால்கள் இருந்தபோதிலும் ஆத்மானந்த் சிங்கின் ஆண்டு வருமானம் ரூ.40 லட்சமாக உள்ளது. இதில் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை லாபம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications