மத்திய அரசு இன்று தாக்கல் செய்த 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாத சம்பளதாரர்கள் மாதம் மாதம் செலுக்கும் வருமான வரியில் மிகப்பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் புதிய வருமான வரி முறையில் பிரிவு 87A இன் கீழ் கிடைக்கும் வரி விலக்கு ரூ.12 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 12 லட்சம் வரையில் வருமான பெரும் நபர் புதிய வருமான வரி முறையின் கீழ் எவ்விதமான வரியும் செலுத்த வேண்டியது இல்லை. இதேபோஸ் நிலையான கழிப்பு கீழ் 75000 ரூபாய் கிடைக்கும் வேளையில் 12.75 லட்சம் வரையிலான தொகைக்கு எவ்விதமான வரியும் செலுத்த தேவையில்லை.
இதன் வாயிலாகவே புதிய வரி முறையின் கீழ், வருமான வரி செலுத்துவோர்கள் ரூ.1,14,400 வரை வரி சேமிக்க முடியும் என ஈவாயி நிறுவனத்தின் (EY) ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் புதிய வரி முறையின் கீழ் ரூ.75,000 நிலையான கழிப்பு மூலம் கிடைக்கும் வரி விலக்கு மூலம் கிடைக்கும் வரி சேமிப்பை மையமாகக் கொண்டு கணக்கிட்டு உள்ளது.

அதாவது 12,75,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் புதிய வரி முறையின் கீழ் தற்போதைய வரி பலகையில் 83200 ரூபாய் வரி செலுத்த வேண்டும், அதுவே நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திருத்தப்பட்ட வரி பலகையில் கீழ் 0 அதாவது எவ்விதமான வரியும் செலுத்த தேவையில்லை. இதன் மூலம் அடுத்த வருடம் இவர் 83200 ரூபாய் சேமிக்க முடியும்.
இதேபோல் 2500000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவர் புதிய வரி முறையின் கீழ் தற்போதைய வரி பலகையில் 4,34,200 ரூபாய் வரி செலுத்த வேண்டும், அதுவே நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள திருத்தப்பட்ட வரி பலகையில் கீழ் 3,19,800 ரூபாய் செலுத்தினால் போதும், இதன் மூலம் அடுத்த வருடம் இவர் 1,14,400 ரூபாய் சேமிக்க முடியும்.

தற்போதைய நிதியாண்டு (2024-25) இல் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுத்த வரி செலுத்துவோர், வரும் நிதியாண்டு (2025-26) இல் திருத்தப்பட்ட வருமான வரி விகிதத்தில் கூடுதலான வரியை சேமிக்க முடியும் என்பதை தான் EY ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதேபோல் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான (NPS) முதலாளியின் பங்களிப்பு உள்ளிட்ட தகுதியான செலவுகளுக்கான விலக்குகளை கோரி கூடுதல் வரி சேமிப்பை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications