இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இத்துறையில் வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தாட்கோ (TAHDCO) நிறுவனம் AWS (Amazon Web Services) உடன் இணைந்து AI Programmer என்ற பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி திட்டத்தில் உயர் தொழில்நுட்ப ஏஐ பயிற்சி மட்டுமல்ல, ஆடை வடிவமைப்பு, அழகு கலை, சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன் பயிற்சி ஆகியவையும் கட்டணமில்லாமல் வழங்கப்படவுள்ளது. ஆக ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சிகளை பெற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்?
முற்றிலும் இலவசம்: ஏஐ உள்ளிட்ட இந்த பயிற்சிகளுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. பயிற்சியின் முழு செலவையும் தாட்கோ நிறுவனமே ஏற்கிறது. வெற்றிகரமாக பயிற்சி முடிப்பவர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட AWS re/Start சான்றிதழ் வழங்கப்படும். இது உலகெங்கிலும் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலை பெற உதவும்.
தங்குமிடம் மற்றும் உணவு: சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியின் போது, மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்?
பயிற்சி காலம்; இந்தப் பயிற்சி சுமார் 3 மாதங்கள் நடைபெறும் தீவிரமான பயிற்சியாகும்.
எந்த பிரிவு: விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் (SC) அல்லது பழங்குடியினர் (ST) பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
வருமான வரம்பு: இந்த பயிற்சி பெற குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்தவர்களுக்கும் முன்னுரிமை உண்டு).
பிற தேவைகள்: அடிப்படை கணினி அறிவு மற்றும் ஆங்கிலத் தொடர்பு திறன் இருப்பது கூடுதல் சிறப்பு.
வேலைவாய்ப்பு (Placement Assistance):
பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். AWS சான்றிதழ் பெற்றவர்கள் கிளவுட் சப்போர்ட் அசோசியேட் (Cloud Support Associate) மற்றும் AI புரோகிராமிங் போன்ற பணிகளில் முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை?
விருப்பமுள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
சாதி சான்றிதழ் நகல்
கல்விச் சான்றிதழ் நகல் - 12-ம் வகுப்பு / டிகிரி
ஆதார் அட்டை
வருமான சான்றிதழ்
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஐடி துறையில் கனவு காணும் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த பயிற்சி ஒரு ஏணியாக இருக்கும். தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பை உடனடியாக பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளலாம். இது குறித்த முழு விவரங்கள் https://tahdco.com/ தளத்தில் இருந்து பெறலாம். இப்ப்யிற்சிக்கு விண்ணப்பிக்கவும் செய்யலாம். ஒரு பயிற்சிக்கு 50 நபர்கள் இலக்கு வைத்துள்ள தாட்கோ, கடைசி தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போதைக்கு இணையதள சேவையானது முடக்கி வைக்கப்பட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications