ராஜேஷ் கோபிநாத் அடுத்த திட்டம் என்ன..? சந்திரசேகரன் ரியாக்ஷன் என்ன..? ராஜேஷ் கொடுத்த பதில்..!!

இந்தியாவிலேயே அதிகப்படியானோருக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனம் என பெயரை பெற்றுள்ள டிசிஎஸ்-ன் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் எவ்விதமான முன் அறிவிப்பு இல்லாமல், சிறிய சிக்னல் அல்லது வதந்தி கூட இல்லாமல் சைலென்ட் ஆக மிகப்பெரிய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ராஜேஷ் கோபிநாதன் 22 ஆண்டுகாலம் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இதில் 6 வருடம் டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக பணியாற்றியுள்ளார்.

ராஜேஷ் கோபிநாதன் வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்ததாக டிசிஎஸ் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டாலும் செப்டம்பர் மாதம் வரையில் இந்நிறுவன பணியில் இருப்பார்.

ராஜேஷ் கோபிநாதன் முடிவு குறித்து டாடா சன்ஸ் சந்திரசேகரன் ரியாக்ஷன் என்ன..? உடனே ஒப்புக்கொண்டாரா..? மறுத்தாரா..?

 டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனம்

டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன் மற்றும் புதிய சிஇஓ கிருதிவாசன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டனர். அப்போது பல கேள்விகள் இருவரிடமும் கேட்கப்பட்ட நிலையில் புதிய சிஇஓ கிருதிவாசன் Thug Life மொமண்ட் ஆக சென்னையில் இருந்து மும்பை போவது குறித்தும், ஹிந்தியில் கேட்ட கேள்விக்கு பதில் ஹிந்தியில் பதில் அளிக்க மறுத்தார்.

சந்திரசேகரன்

சந்திரசேகரன்

இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ராஜேஷ் கோபிநாதன்-யிடம் உங்கள் ராஜினாமா குறித்து சந்திரசேகரன் ரியாக்ஷன் என்ன..? என கேள்வி கேட்டபோது.என்னுடைய ராஜினாமா குறித்து அவ்வப்போது சந்திரா உடன் பேசியுள்ளேன். ஆனால் வர்த்தகத்தில் இருக்கும் பிரச்சனைகளை உடனடியாக களைவதில் கவனம் இருவருக்குமே இருந்தது.

ராஜினாமா

ராஜினாமா

ஆனால் தொடர்ந்து ஒரு கட்டத்தில் என்னுடைய திட்டத்தை கட்டாயம் நான் செய்ய வேண்டும், வாய்ப்பை மிஸ் செய்துவிட கூடாது என பேசியுள்ளோம். இது பல மாதங்களாக தொடர்ந்தாலும், ஒரு நாள் தூக்கத்தில் எழுந்து, இதுதான் சரியான நேரம் என உணர்ந்து, நீண்ட காலமாக பேசிவிட்டோம் என உணர்ந்து உறுதியாக ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டேன்.

 புதிய சிஇஓ

புதிய சிஇஓ

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ராஜினாமா செய்வதை உறுதி செய்துவிட்டு புதிய அதிகாரியை தேடும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது கிருதிவாசன் புதிய சிஇஓ ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார். அடுத்தது நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது.

ஓய்வு, குடும்பம்

ஓய்வு, குடும்பம்

கிருதிவாசன் டிசிஎஸ் நிர்வாகத்தை முழுமையாக கையில் எடுக்கும் வரையில் அதாவது செப்டம்பர் வரையிலான காலக்கட்டம் வரையில் டிசிஎஸ்-ல் இருப்பேன். இதன் பின்பு சில காலம் ஓய்வு, குடும்பத்திடம் நேரத்தை செலவு செய்துவிட்டு, இதன் பின்பு அடுத்த திட்டத்தை கையில் எடுக்க உள்ளேன்.

 ராஜேஷ் கோபிநாதன் பதில்

ராஜேஷ் கோபிநாதன் பதில்


ஒரே நேரத்தில் இரு முக்கியமான விஷயத்தை செய்ய கூடாது என்பதை நம்புகிறன், தற்போது முக்கியமான விஷயம் டிசிஎஸ் கைமாற்றம் தான், இது முடிந்த பின்பு தான் என்னுடைய திட்டத்தை கையில் எடுக்க உள்ளேன் என ராஜேஷ் கோபிநாதன் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+