ஒரே ஒரு ஒப்பந்தத்தின் மூலம் உலகின் 80 சதவீத கோபால்ட்டை சீனா தன்வசப்படுத்தி ஒரு நாட்டையே ஏமாற்றி இருக்கிறது. ஜெயந்த் முந்த்ரா என்பவர் தன்னுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சீனா எப்படி இந்த சூழ்ச்சியை அரங்கேற்றியது என விவரித்துள்ளார்.
உலக அளவில் மிகவும் தேவை படக்கூடிய ஒரு பொருள்தான் கோபால்ட். நாம் மின்சார வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய பேட்டரிகளில் கோபால்ட் மிக முக்கிய உறுப்பாக பயன்படுத்தப்படுகிறது. அதேபோல சூப்பர் அலாய்களில் பயன்படுத்தப்படும் முக்கியமான ஒரு பொருள் கோபால்ட் தான். இது ஜெட் என்ஜின் மற்றும் கேஸ் டர்பைன்களில் பயன்படுத்தப்படுகிறது.

சில இடங்களில் கோபாலிட்டி 60ஐ பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்லப்படுகிறது. எனவே சர்வதேச அளவில் கோபால்ட்டிற்கான டிமாண்ட் எப்பொழுதும் இருந்து வருகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து கொண்ட சீனா கிட்டத்தட்ட உலகின் 80 சதவீத கோபாலட்டை ஒரு சிறிய ஒப்பந்தத்தின் மூலம் தனக்கு சொந்தமானதாக மாற்றியுள்ளது. உலக அளவில் 80 சதவீத கோபால்ட் இருக்கக்கூடிய ஒரு நாடு தான் காங்கோ.
2008 ஆம் ஆண்டு சீன அரசு காங்கோ நாட்டு அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து. அதன்படி காங்கோ நாட்டில் இருக்கும் கோபால்ட் , காப்பர் உள்ளிட்டவற்றை தோண்டி எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக சீன அரசு காங்கோ நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று உடன்பாடு ஏற்படுத்தப்பட்டது. இதனை அடுத்து காங்கோ நாட்டில் இருக்கும் 19 சுரங்கங்களில் தற்போது சீனாவின் வசம் 15 சுரங்கங்கள் சென்று விட்டன.
இங்கு பிரிக்கப்படும் கோபால்ட் அனைத்தும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கே அவை மதிப்பு கூட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம் சீனா பல கோடிகளை சம்பாதிக்கிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சீனாவோ தாங்கள் உறுதி அளித்தபடி காங்கோ அரசுக்கு முதலீடுகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடும்போது காங்கோ நாட்டு அரசு தங்கள் வசம் இருக்கக்கூடிய கோபாலிட்டின் மதிப்பை உணராமல் கையெழுத்திட்டு விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது ஆனால் காங்கோ அரசு உண்மையாக தங்கள் வசம் இருக்கும் கோபால்ட்டின் மதிப்பை உணர்ந்து இருந்தால் அது 20 மில்லியன் டாலர்கள் என உயர்ந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
சீன அரசு தாங்கள் உறுதி அளித்த 3 பில்லியன் டாலரில் இதுவரை 822 மில்லியன் டாலர்களை மட்டுமே முதலீடு செய்துள்ளது. அதாவது உறுதியளித்த தொகையில் 27 சதவீதத்தை மட்டுமே இதுவரை முதலீடாக மேற்கொண்டு இருக்கிறதாம். இதனால் தவறு செய்து விட்டோமோ என காங்கோ அரசு தற்போது வருத்தப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ மற்றொரு நாட்டின் ஆதாரத்தைக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகிறது.
Story Written By: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications