சென்னை: தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி துறை சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் 1.86 பில்லியன் டாலராக இருந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி, 2022-23 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட இரட்டிப்பாக உயர்ந்து 5.37 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை, தமிழ்நாட்டை இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி துறையில் முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தியுள்ளது. இதற்கு முன்னர், நோக்கியா நிறுவனம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அண்மைக்கால சாதனை அந்த சாதனையை விஞ்சியுள்ளது.

5 வருடத்திற்கு முன்பு சிறிய அளவிலான ஏற்றுமதி மட்டுமே கொண்டிருந்த இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி தற்போது வருடம் 10 பில்லியன் டாலர் அதாவது 80000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னோடியாக இருப்பது தமிழ்நாடு.
பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா டெக்னாலஜிஸ் என ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ளது. சமீப காலமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் இதர சப்ளை செயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் துவங்கி வருகிறது.
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் கர்நாடகாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிப்பதற்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று, உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் "சீனா பிளஸ் ஒன்" (China Plus One) என்ற ஒரு உத்தி தான் என தொழில் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.
உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவை நம்பியிருக்க கூடாது என்பது தான் சீனா பிளஸ் ஒன் உத்தி. இந்த திட்டத்தின் கீழ், ஆப்பிள் நிறுவனம் போன்ற நிறுவனங்கள் சீனாவை மட்டும் நம்பி இருக்காமல், பிற நாடுகளிலும் தங்கள் உற்பத்தி செயல்பாடுகளை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகின்றன.
இதன் விளைவாக, ஆப்பிள் நிறுவனத்தின் ஒப்பந்தத் தயாரிப்பாளர்களான Foxconn மற்றும் Pegatron மற்றும் விநியோகஸ்தர்களான Salcomp போன்ற நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. இதன் காரணமாகவே தமிழ்நாடு இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மையமாக உருவாவதற்கு வழிவகுத்துள்ளது.
இந்த நிலையில் 2025ஆம் நிதியாண்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை உயர்வைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் ஏப்ரல்-மே மாதங்களில் சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 36.66% பங்களிப்பாகும்.
கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி மதிப்பு 9.5 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த நிதியாண்டில் 12 பில்லியன் டாலருக்கும் மேலாக ஏற்றுமதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி பூங்காக்கள் அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு மின்சார கட்டணங்கள், நிலம் ஒதுக்கீடு மற்றும் விலக்கு அளிப்பு போன்ற சலுகைகளை வழங்கி வருகிறது.
மாநில அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் பணிபுரிவதற்கு தேவையான திறமைகளை இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றன. இதனால் இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் பணிபுரிவதற்கு தேவையான திறமைகளை இளைஞர்களுக்கு வழங்கி வருகின்றன. இதுவே இத்துறை வேகமாக வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications