சீனாவின் பணக்காரர்கள் பட்டியலை ஹூரன் வெளியிட்டுள்ள நிலையில் பிரபல டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங் முதல் முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 49.3 பில்லியன் டாலராக உள்ளது. இவரை தொடர்ந்து குடிநீர் பிராண்டான நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனர் ஜாங் ஷான்ஷானை 2வது இடத்திலும், மூன்றாவது இடத்தை டென்சென்ட் நிறுவனர் போனி மா பிடித்துள்ளார்.
டாப் 3 பில்லியனர்களுக்கு மத்தியில் சொத்து மதிப்பு வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தும் வேளையில், இந்திய பில்லியனர்களுக்கும், சீனா பில்லியனர்களுக்கும் மத்தியிலான வித்தியாசம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் பில்லியனர்களின் சொத்து மதிப்பு கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக ஹூரன் சீனா பணக்காரர் பட்டியல் 2024 தெரிவிக்கிறது. சீன பில்லியனர்களின் மொத்த செல்வம் 3 டிரில்லியன் டாலராக குறைந்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 10% குறைவு. சீனாவின் பொருளாதார சவால்கள் மற்றும் பங்குச் சந்தை நிலைத்தன்மை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், சீனாவில் பில்லியனர்களின் எண்ணிக்கையும் இந்த ஆண்டு குறைந்துள்ளது. 2021-ல் 1,185 பில்லியனர்கள் இருந்த நிலையில், இந்த ஆண்டு 753 பில்லியனர்களாக குறைந்துள்ளது. இதோடு புதிய பில்லியனர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையான 54 புதிய பில்லியனர்கள் மட்டுமே இந்த ஆண்டு சீன பணக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பில்லியனர்களின் சொத்து மதிப்பு பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பணக்காரர்கள் முதன்முறையாக மொத்த மதிப்பு 1 டிரில்லியன் டாலரைத் தாண்டியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 316 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இந்தியாவின் 80% பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை அதிகரித்துள்ளனர். 58 பில்லியனர்கள் தங்கள் செல்வத்தில் குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலரை அதிகரித்துள்ளனர்.
"சீனாவின் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தை கடினமான காலத்தை கடந்து வருவதால், ஹூரன் சீனா பணக்காரர் பட்டியல் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக சுருங்கியுள்ளது" என்று ஹூரன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை ஆராய்ச்சியாளர் ரூபர்ட் ஹூஜ்வர்ஃப் தெரிவித்தார்.
தனிநபர் செல்வத்தை ஒப்பிடும்போது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர் பட்டியலிலும், ஆசிய பணக்காரர் பட்டியலிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரது மதிப்பிடப்பட்ட செல்வம் 119.5 பில்லியன் டாலராகும். இது பைட்டான்ஸ் நிறுவனர் ஜாங் யிமிங்கை விட கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகம். அதேபோல், கௌதம் அதானியும் அவரது குடும்பத்தினரின் 116 பில்லியன் டாலர் செல்வத்துடன் ஜாங் யிமிங்கை விட அதிக செல்வம் கொண்டுள்ளனர்.
இந்த போக்குகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறையும் பல புதிய பில்லியனர்களை உருவாக்குவதோடு, பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரிப்புக்கு வழிவகுப்பதாகக் காட்டுகிறது.
சீனாவின் பொருளாதார மந்தநிலை மற்றும் ஒழுங்குமுறை சவால்கள் அந்நாட்டு பணக்காரர்களை பாதித்துள்ள நிலையில், சீன பில்லியனர்களின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications