தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக கோயம்புத்தூர் இருக்கிறது. சென்னை, மும்பை போன்ற மற்ற மெட்ரோ நகரங்களாகட்டும், இரண்டாம் நிலை நகரங்களாகட்டும் அவற்றுடன் ஒப்பிடும் போது கோவையின் வளர்ச்சி மிகவும் தனித்துவமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை Kovai.co நிறுவனத்தின் தலைமை ஊழியர் அதிகாரியான சரவணன் பாலகிருஷ்ணன், குட்ரிட்டர்ன்ஸ் தமிழுக்கு பிரத்தியேகமாக சிறப்பு கட்டுரையாக எழுதி இருக்கிறார்.
பிரமிக்க வைக்கும் கோவை: பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய உலகளாவிய திறன் மையங்களை (GCC) கோயம்புத்தூரில் நிறுவுவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றன, இந்த மாற்றம் ஒரே நாளில் வந்து விடவில்லை. கோயம்புத்தூர் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் ஜிசிசி மையங்களுக்கான நகரமாக வளர்ந்து வருகிறது. பொறியியல் பாரம்பரியம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார நிலைத்தன்மை ஆகியவற்றின் தனித்துவமான கலவை தான் கோயம்புத்தூர் நகரை ஜிசிசி மையங்களின் நகரமாக மாற்றி இருக்கிறது. கோவை மற்ற இரண்டாம் நிலை நகரங்கள் மட்டுமல்ல சென்னை, பெங்களூரு போன்ற முதல் நிலை நகரங்களோடும் போட்டிடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

டெக் நகரமாக மாற்றம்: வரலாற்று ரீதியாக கோயம்புத்தூரை நாம் தென்னிந்தியாவின் மேன்செஸ்டர் என அழைக்கிறோம். டெக்ஸ்டைல் ஆலைகள் மற்றும் மோட்டார் பம்ப் தொழிற்சாலைகளின் நகரமாக இருந்த கோவை மாவட்டம், கடந்த 10 ஆண்டுகளில் டெக் நகரமாகவும் உருவெடுத்து இருக்கிறது. "build with hands" என்பதில் இருந்து "build with code" என உருமாற்றம் பெற்றுள்ளது. கோயம்புத்தூரில் ஓர் ஆண்டுக்கு 50 ஆயிரம் பொறியாளர்கள் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைவாய்ப்பு சந்தைக்குள் நுழைகின்றனர். எனவே திறன் மிகு ஊழியர்களுக்கு பஞ்சம் கிடையாது, அதே போல வெறும் சம்பள உயர்வுக்காகவும் பதவி உயர்வுக்காகவும் அடிக்கடி கம்பெனி மாறும் நபர்களாக இவர்கள் இருப்பது இல்லை. ஒரு ஊழியர் நீண்ட காலம் ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்வது கோவையின் பலம். இதற்கு முக்கியமான காரணம் கோவை டெக் துறையில் பணியாற்றும் பெரும்பாலான மக்கள் கோவை மற்றும் அதன் அண்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருப்பது தான்.
சத்தமே இல்லாமல் சாதனை: இந்தியாவில் மற்ற பெரு நகரங்களோடு ஒப்பிடும்போது கோயம்புத்தூரில் வாழ்க்கை தரம் சிறப்பானதாக இருக்கிறது, மற்ற இரண்டாம் நிலை நகரங்களிடம் இருந்து கோயம்புத்தூர் தனித்துவமாக நிற்பதற்கு முக்கிய காரணம் கோயம்புத்தூர் அடுத்த பெங்களூருவாக மாற வேண்டும் என முயற்சிக்கவில்லை "என் வழி தனி வழி" என பயணிக்கிறது. இதுதான் கோயம்புத்தூர் வேகமான வளர்ச்சியை அடைந்ததற்கும் சத்தமே இல்லாமல் சாதித்து வருவதற்கும் காரணம்.

கோவையின் தனித்துவமே மக்கள் தான்: கோவையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடனே வசிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இது அவர்களின் மனநிலையை சிறப்பாக வைத்திருக்கிறது திறம்பட வேலையையும் செய்ய வைக்கிறது. இதனால் அடிக்கடி வீடு மாற வேண்டும், வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்கு சென்று வர வேண்டும் என்ற அழுத்தம் இல்லை. எளிய போக்குவரத்து வசதியும் இருப்பதால் தினமும் அலுவலகம் வந்து செல்வது என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதில்லை.
பொறுப்பும், லட்சியமும் நிறைந்த மக்கள்: கோயம்புத்தூரில் வேலை செய்பவர்களின் கலாச்சாரமே வேறு , பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் வார இறுதி நாட்கள் என்றாலே பார்ட்டிக்கு சென்று பணம் செலவழிக்கும் கலாச்சாரம் உள்ளது, ஆனால் இங்கே இளம் தலைமுறையினர் கூட பணத்தை முதலீடு செய்வது, நிலம் வாங்குவது ஆகியவற்றை காணலாம் . தனிப்பட்ட லட்சியத்துடன் தொழில்முறை பொறுப்பும் இணைந்த மக்களை இங்கே தான் காண முடியும். இந்த அனைத்து தகுதிகளும் ஜிசிசி மையங்களை கோவை நோக்கி படையெடுக்க வைக்கிறது .

வெளியூர் சென்றவர்களே திரும்பி வருகின்றனர்: வேலை காரணமாக வெளியூர் சென்றவர்கள் கூட , தற்போது கோயம்புத்தூரிலேயே சிறப்பான சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் காரணத்தால் மீண்டும் கோவைக்கே திரும்புகின்றனர். மற்ற இரண்டாம் நிலை நகரங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய ஐடி நிறுவனம் வந்து தொழில் தொடங்க வேண்டும், அதனை சுற்றி ஒரு தொழில் சூழல் உண்டாகி அந்த நகரம் வளரும். ஆனால் கோவை ஏற்கனவே தனக்கென ஒரு தொழில்சூழலை உருவாக்கி வைத்துவிட்டது, அது தான் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கிறது. உலகமே வேகமாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் கோயம்புத்த்தூர் நிலைத்தன்மைக்கு முக்கியம் தருகிறது, அது தான் இந்த நகரத்தை தனித்துவமாக நிலைக்க வைத்திருக்கிறது.
இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் என்னுடைய சொந்த கருத்துக்கள், இவை நான் பணியாற்றும் நிறுவனத்தின் கருத்துக்கள் இல்லை எனவும் சரவணன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, குட்ரிட்டர்ன்ஸ் எழுத்தாளர் தேவிகா இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். சரவணன் பாலகிருஷ்ணன், கோவை.கோ நிறுவனத்தின் தலைமைப் பணியாளர் அதிகாரி ஆவார், தமிழ் குட்ரிட்டர்ன்ஸுக்கு விருந்தினர் எழுத்தாளராக இக்கட்டுரை எழுதியுள்ளார்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications