இந்தியாவில் பல ஆண்டுகளாக உலகளாவிய திறன் மையங்கள் அதாவது GCC-க்கள் திறக்கப்படும் போது, பொதுவாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே மற்றும் டெல்லி போன்ற பெரிய நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தன. இந்த நகரங்களில் திறமையான பணியாளர்கள், வலுவான கட்டமைப்பு மற்றும் வளர்ந்த சூழல் இருந்ததால் இதுவே சரியான வழி என்று கருதப்பட்டது. ஆனால், சமீப காலமாக இது பெரிய அளவில் மாறத் தொடங்கியுள்ளன.
செலவுகள் அதிகரிப்பு, கடுமையான போக்குவரத்து சிக்கல்கள், பணியாளர் திரும்பிச் செல்லும் விகிதம் அதிகரித்தல் மற்றும் தொழில் தொடர்வதில் இருக்கும் ஆபத்துகள் போன்ற காரணங்களால் இந்த நகரங்களின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளன. இதனால் நிறுவனங்கள் புதிய இடங்களைத் தேர்வு செய்து வருகின்றன.

உலகளாவிய திறன் மையம் என்றால் என்ன..?: உலகளாவிய திறன் மையம் (GCC) என்பது, ஒரு பெரிய நிறுவனத்தின் உலகளாவிய பணிகளை, வெளிநாட்டில் இருந்து செய்ய அமைப்படும் ஒரு கிளை அலுவலகம் போன்றது. இது திறமையான ஊழியர்கள், தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனை ஒருங்கிணைத்து உலக அளவிலான வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. உதாரணத்திற்கு கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களில் GCC மையங்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் தொழில்துறை நகரமாக திகழும் கோயம்புத்தூர், இப்போது உலகளாவிய திறன் மையங்களின் (Global Capability Center) விருப்பமான இடமாக திகழ்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவையில் புதிய GCC மையங்களில் எண்ணிக்கை 21 சதவீதம் வருடாந்திர வளர்ச்சியில் அதிகரித்து வருகிறது. இப்போது கோவையில் 50-க்கும் மேற்பட்ட GCC மையங்கள் உள்ளன. 11,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சுமார் 60% பேர் பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஐடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். கோயம்புத்தூர் பல டெக் ஊழியர்களின் சொந்த ஊருக்கு அருகாமையில் இருக்கும் காரணத்தால் பணியாளர்கள் நீண்ட காலம் வேலை பார்க்கின்றனர். இதனால் ஒரு நிறுவனத்தில் இருந்து மாற்றொரு நிறுவனத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மேலும், மூத்த பணியாளர்களை வேகமாக தேர்வு செய்ய முடிகிறது. மேலும் கோயம்புத்தூரில் மாற்றத்திற்கு ஏற்ப தரமான அலுவலக இடங்கள் (8.1 மில்லியன் சதுர அடி) உள்ளன. அதற்கு இணையான இணையம் மற்றும் டிஜிட்டல் வசதிகளும் கிடைக்கின்றன.
அதோடு, தமிழ்நாடு அரசு GCC நிறுவனங்களுக்கு பலவித உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனால், கோயம்புத்தூரில் டெக் துறையில் வர்த்தகம் செய்வது என்பது மிக எளிதாக மாறிவிட்டது. மேலும் GCC அலுவலகங்களை ஈர்ப்பதில் கோயம்புத்தூர் தற்போது 2ஆம் நிலை நகரங்களில் முன்னோடியாக இருக்கும் வேளையில், தற்போத பெரும் மெட்ரோ நகரங்களோடு போட்டி போடும் நிலைக்கு வந்துவிட்டது. மேலும், இங்கு சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் தொடர்பான பயிற்சி திட்டங்கள் அதிகமாக உள்ளது. அதனால், இங்கிருந்து வேலைக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். குறிப்பாக டிஜிட்டல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் அதிகளவு பணியாளர்களை வேலைக்கு எடுக்க முடிகிறது.
இதுக்குறித்து Kovai.co நிறுவனத்தின் தலைமை ஊழியர் அதிகாரியான சரவணன் பாலகிருஷ்ணன் குட்ரிட்டன்ஸ் செய்தியாளரிடம் பேசிய போது, "கோயம்புத்தூர் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மிக உறுதியான மற்றும் வளர்ந்து வரும் GCC ஹைப் ஆக மாறியுள்ளது. இது தற்செயலாக கிடைத்த வெற்றி அல்ல, கோயம்புத்தூர் நகருக்கு இருக்கும் பொறியியல் பாரம்பரியம், பொருளாதார நடைமுறை, மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றின் சிறந்த கலவையால் உருவாக்கப்பட்டது.
கோயம்புத்தூர் தற்போது இந்தியாவின் 2ஆம் நிலை நகரங்களுக்கிடையேயும், சில அம்சங்களில் முதல் நிலை நகரங்களையும் முந்தி உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் விருப்பமான நகரமாக மாறியுள்ளது.
கோயம்புத்தூர், தென்னிந்தியாவின் "மான்செஸ்டர்" என்று வரலாற்றுப் புகழ்மிக்க பெற்ற நகரம், ஒரு காலத்தில் டெக்ஸ்டைல் மற்றும் மோட்டார் பம்ப் தொழிற்சாலைகளால் தனது பயணத்தை தொடங்கியது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், அந்த உற்பத்தி நகரம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

இது குறித்து Fabevy நிறுவனத்தினர் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான வேல்முருகன் கூறுகையில்,"பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் ஜிசிசி மையங்களை அமைக்கும் போது முக்கியமாக அந்த நகரத்தின் மனித வளத்தை கருத்தில் கொள்வார்கள். அதாவது வேலைக்கு வரக் கூடிய ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் நீடிக்க போகிறார் என்பதை முக்கியமாக கவனிப்பார்கள். அந்த வகையில் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுடன் ஒப்பிடும் போது கோவையில் ஊழியர்கள் தொடர்ந்து ஒரே நிறுவனத்தில் நீண்ட காலம் வேலை செய்வது என்பது அதிகமாக இருக்கிறது. இதற்காக தான் பன்னாட்டு நிறுவனங்கள் பெரு நகரங்களை விடுத்து கோவையில் தங்களின் ஜிசிசி மையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன" என கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக கோயம்புத்தூரில் அதிகப்படியான கல்லூரிகள் இருக்கும் காரணத்தால் வருடம் முழுவதும் திறன்வாய்ந்த ஊழியர்கள் இப்பகுதியில் இருந்துக்கொண்டே இருக்கிறது. இதோடு சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி, நொய்டா ஆகிய நகரங்களை ஒப்பிடும் போது ரியல் எஸ்டேட்டில் துவங்கி ஊழியர்களின் சம்பளம் வரையில் கேயம்புத்தூரில் செலவு குறைவு. இதுவும் ஜிசிசி நிறுவனங்களுக்கு முக்கியமாக கவனிக்கும் விஷயமாக உள்ளது.
கோவை ஒரு பழமையான துணி மற்றும் உற்பத்தி நகரம். இப்போது, ஒரு உற்பத்தி மற்றும் டெக் நகரமாக மாறிவருகிறது. மேலும், கோவையில் GCC நிறுவனங்கள் அதிகரிப்பதால், ஏராளமான மக்கள் தங்களது வீட்டிற்கு அருகிலேயே வேலையை பெறுகின்றனர். இதனால் மக்கள் பிற நகரங்களுக்கு குடியேறுவதும் குறைகிறது. இதன் காரணமாக, கோவையில் புதிய தொழில்களும் அதிகரித்து வருகின்றன.
Coimbatore Rising: A New Blueprint for GCC Expansion" என்ற தலைப்பில் CII (Confederation of Indian Industry) மற்றும் Zinnov ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், திறமையான ஊழியர்கள் படை, கல்வி அமைப்புகள் மற்றும் வாழ்விற்கு ஏற்ற சூழல் ஆகியவை GCC நிறுவனங்களை இங்கு விரிவுபடுத்த ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. இது கோவையை அடுத்த தலைமுறை தொழில்நுட்ப மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற இடமாக முன்னிறுத்துகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications