மக்களை சுத்தி சுத்தி அடிக்கும் பணவீக்கம்.. மொத்த சேமிப்பும் மாயம்..!!

வெங்காயம், காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் இந்த ஆண்டு நவம்பரில் எட்டு மாதத்தில் இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதத்தில் இருந்து 0.26 சதவீதம் அதிகரித்தது. இது ஏப்ரல் மாதத்தில் இருந்து அக்டோபர் வரை மைனஸ் 0.52 சதவீதமாக இருந்தது.

நெல் மற்றும் பழங்களில் பணவீக்கம் முறையே 10.44 மற்றும் 8.37 சதவீதமாக இருந்தது. உருளைக்கிழங்கின் பணவீக்கம் நவம்பரில் மைனஸ் 27.22 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

மக்களை சுத்தி சுத்தி அடிக்கும் பணவீக்கம்.. மொத்த சேமிப்பும் மாயம்..!!

உணவுப் பொருட்கள், மினரல்கள், இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ஆப்டிகல்ஸ், மோட்டார் வாகனங்கள் மற்றும் இதர போக்குவரத்து, உற்பத்தி விலையேற்றத்தால் தான் 2023 நவம்பரில் பணவீக்கம் அதிகரித்தது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அண்மையில் தெரிவித்திருந்தது.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் நவம்பரில் 8.18 சதவீதம் உயர்ந்தது. அக்டோபரில் அது 2.53 சதவீதமாக இருந்தது. ங்காயத்தின் விலையேற்றம் 101.24 சதவீதமாக நவம்பரில் இருந்தது. அக்டோபரில் 62.60 சதவீதமாக இருந்தது.

இதனிடையே உணவுப் பொருட்கள் விலையேற்றத்தின் காரணமாக 2023 டிசம்பரில் பணவீக்க விகிதம் மேலும் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி மானிட்டரி பாலிஸி ரெவ்யூ கூறியுள்ளது. போகப்போக பணவீக்கமானது கணிக்கமுடியாத அளவுக்கு உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படும். உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பால் மொத்த விலை குறியீடு அடுத்த சில மாதங்களுக்கு அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் அதிகரித்தால் பொருட்கள் மற்றும் சேவையின் கட்டணம் அதிகரிக்கும். இதனால் ஒருவரது தனிநபர்கள் மற்றும் குடும்பத்தினரின் செலவீனம் அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்கும் என்று பொருளாதார நிபுணர் விகாஸ் சிங் கூறுகிறார்.

உயர்ந்துவரும் எரிபொருள் விலையானது நேரடியாக பொருட்கள் மற்றும் சேவைகள் செலவை அதிகரித்து பணவீக்கத்தையும் உயர்த்தும். விலையேற்றத்துக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்காவிட்டால் நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறனையும் இது பாதிக்கும்.

Rakuten Insight என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் நாட்டில் 2023 மார்ச் மாதத்தில் 55 வயது மற்றும் அதற்கும் மேலானவர்கள் தங்களது அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், ஆடைகள், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகக் கூறினர் என்று தெரிய வந்தது.

அதேபோல் அவர்களால் தங்களால் சேமிக்க முடியாமல் போனதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. பணவீக்கமானது தனிமனிதர்களின் சேமிப்பை பாதித்ததோடு முதலீட்டு வாய்ப்புகளையும் வாங்கும் திறனையும் குறைத்து விட்டது.

அதேபோல விவசாயத் துறையையும் பணவீக்கம் மிக மோசமாக பாதித்து விட்டது. பணவீக்கம் அதிகரிப்பது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. விவசாயிகளின் கடன் சுமையை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று விகாஸ் சிங் கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+