இந்தியாவில் கொரோனா தொற்று மே மாதம் துவக்கம் முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உச்சத்தைத் தொடத் துவங்கிய காரணத்தால் மாநில அரசுகள் அடுத்தடுத்து லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது.
வருமானம் இல்லாமல் தவிக்கவிட்ட மே மாதம்
இதனால் வகைப்படுத்தப்படாத துறையில் பணியாற்றும் கோடிக்கணக்கான மக்கள் தங்களது வேலை, வருமானத்தை இழந்துள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பல கோடி ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் வருமானம் குறைந்துள்ளது.
இதனால் மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைக் கூட முழுமையாகப் பூர்த்திச் செய்துகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
1.5 கோடி பேர் வேலை இழப்பு
மே மாதம் மட்டும் இந்தியா முழுவதும் சுமார் 1.5 கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர், இதன் மூலம் 2020 மார்ச் லாக்டவுன்-க்குப் பின் தற்போது வேலைவாய்ப்பின்மை அளவீடு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
மே மாத வேலைவாய்ப்பின்மை
இதன் மூலம் நாட்டின் வேலைவாய்ப்பின்மை மே மாதத்தில் 11.90 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. குறிப்பாக நகரங்களில் வேலைவாய்ப்பின்மை ஏப்ரல் மாத 9.78 சதவீத வேலைவாய்ப்பின்மை அளவில் இருந்து 14.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கிராமங்கள், டவுன் பகுதிகள்
மேலும் கொரோனா தொற்றின் முதல் அலையை விடவும் 2வது அலை இந்தியக் கிராமங்கள், டவுன் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் மே மாதத்தில் ஊரகப் பகுதிகளிலும் வேலைவாய்ப்பின்மை 7.13 சதவீதத்திலிருந்து 10.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வருமானம் குறைந்து
இதனால் நகரங்கள் முதல் கிராமங்கள் முதல் பல கோடி குடும்பங்கள் வருமானத்தை வர்த்தகச் சரிவு வாயிலாகவோ, வேலைவாய்ப்பு இழப்பு வாயிலாகவோ இழந்துள்ளது. இது மூலம் மக்களின் நுகர்வு அளவு பெரிய அளவில் குறைந்து, நாட்டின் வர்த்தகம், பொருளாதாரமும் சரிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications