குஜராத்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமம். இப்படி ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் ஆரம்ப சம்பளம் வெறும் 300 ரூபாய் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
திருபாய் அம்பானி குஜராத் மாநிலம் சோர்வாடு பகுதியில் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஒரு பள்ளி ஆசிரியராக வேலை செய்து வந்தார். திருபாய் அம்பானி வீட்டில் மூன்றாவது குழந்தை, ஆரம்பத்தில் மிகப்பெரிய குடும்பம் என்பதால் அவரது தந்தையின் வருமானம் மட்டும் குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே திருபாய் அம்பானி சிறு வயதிலேயே வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்.

தன்னுடைய 16 ஆவது வயதில் அதாவது 1948 ஆம் ஆண்டு தன்னுடைய மூத்த சகோதரர் ராம் நிக்கிலால் உதவியோடு திருபாய் அம்பானி ஏமனில் உள்ள ஈடன் நகருக்கு சென்று வேலை செய்தார். அங்கே இவர் பணியாற்றிய நிறுவனத்தில் இவருக்கு மாதத்திற்கு 300 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
திருபாய் அம்பானி பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு 1958 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 350 சதுர அடி கொண்ட ஒரு சின்ன அலுவலகத்தில் இரண்டு உதவியாளர்கள் மற்றும் மூன்று இருக்கைகள் ஒரு மேசை ஆகியவற்றுடன் இவர் தன்னுடைய தொழிலையே தொடங்கினார்.
பின்னர் படிப்படியாக தன்னுடைய நிறுவனத்தை வளர்த்தார் 1955 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானிக்கும் கோகிலாபென்வின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி என இரண்டு மகன்கள் பிறந்தனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி திருபாய் அம்பானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் 2002ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி தன்னுடைய 69 வயதில் அவர் காலமானார்.
திருபாயின் மனைவி கோகிலாபென் 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே தன்னுடைய மகன்களுக்கு தொழில்களையும் சொத்துக்களையும் பிரித்து வழங்க தொடங்கி விட்டார். 2006ஆம் ஆண்டில் தான் இந்த நடைமுறைகள் முடிவடைந்தன.
இந்த சொத்துக்களையும் தொழில்களையும் பிரிப்பதில் முக்கிய பங்காற்றியவர் அப்போது ஐசிஐசிஐ வங்கி நிறுவனத்தின் தலைவராக இருந்த வி கே கமத். திருபாய் அம்பானியை பொறுத்தவரை உடனடியாக அவருக்கான வெற்றி என்பது கிடைத்துவிடவில்லை. படிப்படியாக பல்வேறு சவால்களையும் கடந்துதான் அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மிகப்பெரிய ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார்.
இவரது மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோரும் தொழிலில் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். இருந்தாலும் அனில் அம்பானி சற்றே பின்னடைவை சந்தித்து விட்டார் முகேஷ் அம்பானியை பொறுத்தவரை தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் மிகத் திறம்படவும் தன்னுடைய தந்தையின் பாரம்பரியத்தை பாதுகாத்து வருகிறார்.
story written by: Devika
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications