தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள நொச்சி பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பொன்னரசி. 10 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் முருங்கை விவசாயம் செய்து வரும் இவர், கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட முருங்கை அரசி (Murungai Arasi) நிறுவனம் மூலம், முருங்கையை 36 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி, உலகெங்கும் ஏற்றுமதி செய்து வருகிறார்.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்!
இன்று சிறந்த தொழில் முனைவோராக வலம் வரும் இவர், முருங்கை இலை, முருங்கை பூ, அதன் விதை, பட்டை, முருங்கை தோட்டத்தில் இருந்து தேன் உள்ளிட்டவற்றில் இருந்து பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறார். இயற்கை விவசாயம் மட்டுமல்ல கால்நடை வளர்ப்பையும் செய்து வரும் அரசி, வறுமை காரணமாக 10-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார். ஆனால் இன்று பல கல்லூரி மாணவர்கள், பெண்கள், தொழில் செய்ய ஆர்வம் மிக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார்.

முருங்கை எப்படி தேர்வு?
விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக ஆரம்பத்தில் கால்நடைகள், நாட்டு கோழி வளர்க்க தொடங்கியவர், அதற்கான தீவனச் செலவுகளை குறைக்க தீவனங்களையும் வளர்க்க தொடங்கினார். அதனால் கணிசமான லாபம் கிடைக்க தொடங்கிய நிலையில், வேளாண் பல்கலை கழகங்கள், விவசாய வல்லுநர்கள், வேளாண் அறிவியல் மையங்கள், மண்ணியல் வல்லுநர்கள் போன்றவர்களை தொடர்பு கொண்ட நிலையில், அவர்கள் வறட்சி நிலத்திற்கு ஏற்ற பயிரை பரிந்துரைத்துள்ளனர். அதன்படி முருங்கையும், மற்ற சில விவசாய பயிர்களையும் பயிரிடத் தொடங்கியுள்ளார்.

வறுமையும் குடும்பமும்?
ஒரு காலத்தில் தனது குழந்தைகளுக்கு தேவையான ஸ்நாக்ஸ்களை கூட வாங்கி தர முடியாத நிலையில் இருந்த அந்த தாய், தனது குழந்தைகளை ஒரு சிறிய இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது உறவினர்களால் கேலி செய்யப்பட்டவர். அந்த சமயத்தில் தங்கள் குடும்பத்தின் முக்கிய வருமான ஆதாரமாக இருந்த முருங்கை விதைகளோ கிலோ வெறும் 5 ரூபாய்க்கு மட்டுமே விலை போனது.
ஆனால் தனக்கு வந்த அத்தனை பிரச்சனைகளையும் தன்னம்பிக்கையால் வென்று, இன்று முருங்கையில் இருந்து ஹெல்த் பவுடர், அழகு சாதன பொருட்கள், முருங்கை தேன் என பல வகையான தயாரிப்புகளை உருவாக்கி வருகிறார். அதன் மூலம் ஆண்டுக்கு சில லட்ச ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். அவருடைய தயாரிப்புகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
சவால்களும் அரசியின் பயணங்களும்!
ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்த பொன்னரசி, குடும்ப வறுமையால் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றவர். கஷ்டப்பட்ட சமயத்தில் உறவினர்கள் யாரும் உதவவில்லை. ஆனால் அதற்காக நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். ஒரு வேளை அவர்கள் எனக்கு உதவி செய்திருந்தால், நான் சோம்பேறி ஆகியிருக்கலாம். இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருக்க முடியாது.
சில தனிப்பட்ட இழப்புகளுக்கு பிறகு, கணவரின் ஆதரவும் இன்றி எட்டு குழந்தைகளின் பொறுப்பு அவர் வசம் வந்தது. உயிர் பிழைக்க காய்கறிகள் விற்பது, கால்நடைகளை வளர்ப்பது என சிறிய அளவில் தனது போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். 10 ஆண்டுகள் விவசாயம் செய்தும் பெரிய அளவில் எதுவும் வருமானம் ஈட்டவில்லை.
ஆனால் ஒரே ஒரு விஷயம் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது. அது விவசாய விளைபொருட்களை அப்படியே விற்காமல், அவற்றை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றியது தான். இந்த யோசனை தான் அவரது மொத்த வாழ்க்கையையும் மாற்றியது. முறையான பயிற்சிக்கு பிறகு, அதிக விலைக்கு விற்கக்கூடிய முருங்கை எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார்.
தொழில் விரிவாக்கம்?
கடன் வாங்கிய 50,000 ரூபாயை கொண்டு தனது பயணத்தை தொடங்கிய அவர், பிறகு தனது நகைகளை அடமானம் வைத்து தொழிலை விரிவுபடுத்தினார். ஆரம்பத்தில் செலவை குறைக்க இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தார். பின்னர் அரசு மானியமாக பெற்ற 2 லட்சம் ரூபாயை கொண்டு ஒரு சிறிய யூனிட்டை அமைத்தார்.
குறைந்த படிப்பு மற்றும் சமூகத்தின் ஏளன பேச்சுக்கள் ஒருபுறம் இருந்தாலும், பணமதிப்பிழப்பு மற்றும் கோவிட்-19 போன்ற சவால்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டார். இடைத்தரகர்களை நம்பியிருக்காமல், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் மூலம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு தனது வேலைப்பாடுகளை பகிர்ந்து நம்பிக்கையை உருவாக்கினார். இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
தற்போது முருங்கை அரசி நிறுவனம் உணவு, ஆரோக்கியம் மற்றும் தனிநபர் பராமரிப்பு என 85 முதல் 5,000 ரூபாய் வரையிலான தயாரிப்புகளை வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள பொன்னரசி, முருங்கையை உலகெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்வதையே தனது லட்சியமாக கொண்டுள்ளார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications