ஒரு ஐடி நிறுவனத்தை எப்படி தொடங்க வேண்டும், அதனை எப்படி சர்வதேச நிறுவனமாக உருவாக்க வேண்டும், என்பதற்கு முன்னோடியாக இருப்பவர்தான் அசிம் பிரேம்ஜி. அவர் எப்படி விப்ரோ நிறுவனத்தை தொடங்கினார், அதனை சர்வதேச நிறுவனமாக உயர்த்தினார் என்பது குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.
1966 ஆம் ஆண்டு அசிம் பிரேம்ஜி அவருடைய தந்தையின் மறைவு காரணமாக இந்தியாவிற்கு வருகை தர வேண்டிய சூழல் ஏற்பட்டது.அப்போது அவருக்கு வயது 21. அந்த நேரத்தில் அவர் சமையல் எண்ணெய் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இந்த நிறுவனத்தின் பெயர் வெஸ்டர்ன் இந்தியன் வெஜிடபிள் ப்ராடக்ட்ஸ் ஆகும். இந்த நிறுவனத்தின் கீழ் டால்டா நெய் , சன் ஃபிளவர் ஆயில் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தான் 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசு நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை அறிவித்தது. இதனால் அப்போது இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமாக இருந்த ஐபிஎம் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட அசிம் பிரேம்ஜி ஐடி துறையில் நுழைந்தார். இவரது நிறுவனம் மினி கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய தொடங்கியது. தன்னுடைய வெஸ்டர்ன் இந்தியா ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் பெயரை விப்ரோ என சுருக்கினார். இதற்காக தொழில்நுட்பத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை பணிக்கு அமர்த்தினார்.
இப்படி தான் 1980-ம் ஆண்டு விப்ரோ நிறுவனம் தொடங்கியது. மினி கம்ப்யூட்டர்களுக்கான உரிமங்களை பெற்ற விப்ரோ நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த சென்டினல் கம்ப்யூட்டர் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் மினி கம்ப்யூட்டர் தயாரிக்கப்பட்டது.
இன்டெல் நிறுவனத்தின் சிப் கொண்டு இந்த கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு 100 கணினிகள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் 1988 களில் கணினி பயன்பாடு மற்றும் மென்பொருள்களின் பயன்பாடு வெளிநாடுகளில் வளர்ந்து வருவதை உணர்ந்த அசிம் பிரேம்ஜி முதன்முறையாக கணினி வன்பொருள் மட்டும் இல்லாமல் மென்பொருளிலும் கால் பதிக்க தொடங்கினார். அப்படி தான் 1990 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனம் தங்களுடைய ஐடி மேம்பாட்டுக்காக முதல் முறையாக வெளிநாட்டில் ஒரு ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைத்தது.
சன் மைக்ரோ சிஸ்டம், ஜெனரல் எலக்ட்ரிக் ஆகிய வாடிக்கையாளர்களை ஈர்த்த விப்ரோ நிறுவனம் 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய மென்பொருள் ஏற்றுமதியாளர் என்ற அந்தஸ்தை பெற்றது. 2000 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனம் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாகில் பட்டியலிடப்பட்டது. படிப்படியாக ஐடி துறையில் வளர்ச்சி அடைந்த விப்ரோ நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் 5,881 கோடி ரூபாய் வருமானம் பெற்று 1,032 கோடி லாபம் மீட்டிய நிறுவனமாக உருவெடுத்தது.
இந்த வகையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஐடி நிறுவனமாக விப்ரோ நிறுவனம் உருவானது. ஆனால் அசிம் பிரேம்ஜி அத்துடன் நிறுத்திவிடவில்லை . 2011 ஆம் ஆண்டு விப்ரோ நிறுவனம் இந்தியாவின் முதல் வேகமாக இயங்கக்கூடிய சூப்பர் கம்ப்யூட்டரான சாகா 220-ஐ இஸ்ரோ உடன் இணைந்து உருவாக்கியது. 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு விப்ரோ நிறுவனம் பெரும்பாலும் ஐடி பிரிவிலேயே தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறது.
2017 ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் வருமானம் 55,417 கோடி ரூபாய் என உயர்ந்தது.
தற்போது விப்ரோ நிறுவனம் 65 நாடுகளில் செயல்படுகிறது. 2,30,000 ஊழியர்கள் இதில் வேலை செய்கின்றனர் .இந்த நிறுவனத்தின் வருமானம் 89 ,760 கோடி ரூபாய், இதில் 11,000 கோடி ரூபாய் லாபம் மட்டுமே ஆகும். சர்வதேச அளவில் ஐடி சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களில் விப்ரோ நிறுவனம் ஏழாவது பெரிய நிறுவனமாக இருக்கிறது.
அசிம் பிரேம்ஜி இந்திய பணக்காரராகவும் சர்வதேச பணக்காரராகவும் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 1,50,000 கோடி ரூபாய் ஆகும். 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர் தன்னுடைய சொத்தில் 50 சதவீதத்தை அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கினார்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications