ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

தளபதி விஜய், அஜித் என மாஸ் ஹீரோக்களுக்கு மத்தியில், சாக்லேட் பாய் இமேஜுடன் நுழைந்து இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்திருப்பவர் நடிகர் மாதவன். சமீபத்தில் வெளியான துரந்தர்: தி ரிவெஞ்ச்' (Dhurandhar : The Revenge) திரைப்படத்தின் அதிரடி வெற்றி, அவரை மீண்டும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்தியுள்ளது.

சினிமாவில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் ஒரு புத்திசாலி முதலீட்டாளராக திகழும் மேடியின் சொத்து மதிப்பு இன்று பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. சுமார் 125 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட அவரது நிதி சாம்ராஜ்யம், சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக்குகள் என ஒரு பிரம்மாண்டமான லைஃப்ஸ்டைலை கொண்டது.

How didchocolate boy Madhavan build his Rs 125 crore financial empire  chocolate boy madhavan chocolate boy R madhavan  chocolate boy madhavan assets  chocolate boy madhavanassets in tamil  tamil actor madhavan assets  r madhavan assets value today  rmadhavan assets value today in tamil  r madhavan assets value today 2026  dhurandharactor madhavan net worth  dhurandhar actor madhavan net worth today  dhurandharactor madhavan net worth today tamil

திரைப்படங்களில் வாங்கும் சம்பளம் மட்டுமின்றி, பிராண்ட் எண்டார்ஸ்மெண்ட் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் என மாதவனின் இந்த நிதி சாம்ராஜ்யம் எப்படி உருவானது? அவரது சொத்து விவரங்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்ப்போம்.

சினிமா துறையில் நான்கு தசாப்தங்களாக பயணித்து வரும் துரந்தர் நாயகன் மாதவன், 1997-ல் இன்பெர்னோ என்ற ஆங்கில திரைப்படம் மூலம் அறிமுகமானார். கதைகளை தேர்ந்தெடுப்பதில் காட்டும் அதே நுணுக்கத்தை, அவர் தனது பணத்தை நிர்வகிப்பதிலும் காட்டி வருகிறார். இதுவே அவரது இன்றைய பெரும் சொத்து மதிப்புக்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் யூடியூப் உரையாடல் ஒன்றில், 55 வயதான மாதவன் தனது நிதி மேலாண்மை குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். பணம் வந்தவுடன் விரைவில் நிலத்தில் முதலீடு செய் என்ற தனது தாத்தாவின் அறிவுரைப்படி, திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே நிலம் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்து வந்தார். மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக நகை அல்லது விலை உயர்ந்த கார்களை வாங்குவதில் தமக்கு விருப்பமில்லை என்று கூறும் சாக்லேட் பாய், பங்குச் சந்தையில் முதலீடு செய்தது தான், அவர் செய்த மிகப்பெரிய தவறு என்றும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை என்றும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி, மாதவனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 125 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு படத்திற்கு 6 முதல் 10 கோடி ரூபாய் வரையிலும், விளம்பரங்களுக்கு 2 கோடி ரூபாய் வரையிலும் சம்பளமாக வாங்குகிறார். துரந்தர் திரைப்படத்திற்காக அவர் சுமார் 9 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இவரின் பெரும்பான்மையான வருமானம் படங்கள் மற்றும் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் ஈட்டப்படுகிறது.

இவரின் சொத்தில் சொகுசு இல்லங்கள், விலையுயர்ந்த கார்கள், பைகுகள், ஆடம்பர படகு என பலவும் அடங்கும். குறிப்பாக பல்வேறு நகரங்களில் பிரம்மாண்டமான வீடுகளை வைத்துள்ளவர், மும்பையின் பிகேசி பகுதியில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு சுமார் 17.5 கோடி ரூபாய். சென்னையில் உள்ள வீட்டின் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாய். அவரது மகன் வேதாந்தின் நீச்சல் பயிற்சிக்காக துபாயிலும் ஒரு வீட்டை வாங்கியுள்ளார். இருப்பினும் அதன் மதிப்பு வெளியிடப்படவில்லை.

வாகன பிரியரான சாக்லேட் பாயிடம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ், 1 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர், பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) கார்டுகளும் உள்ளன. அதோடு ரோட்மாஸ்டர் குரூஸர், யமஹா வி-மேக்ஸ் (Yamaha V-Max), பிஎம்டபிள்யூ K1600 GTL மற்றும் டுகாட்டி டயவல் (Ducati Diavel) போன்ற இருசக்கர வாகனங்களும் உள்ளன.

அவரிடம் உள்ள ஆச்சரியமான சொத்துக்களில் ஒன்று, அவர் வாங்கியதிலேயே மிக விலை உயர்ந்த அவரின் வீட்டை தவிர, அவர் வாங்கிய மிக விலையுயர்ந்த பொருள் அந்த சொகுசு படகு தான் என்றும் தனது நேர்காணலில் கூறியுள்ளார். எனக்கு எப்போதும் ஒரு கப்பல் கேப்டன் உரிமம் பெற வேண்டும் என்று ஆசை. கோவிட் காலத்தில் வேலை இல்லாத போது, ஆறு மாதங்கள் படித்து தேர்வு எழுதி உரிமம் பெற்றேன். இப்போது என்னால் 40 அடி நீளமுள்ள படகை செலுத்த முடியும். எனது ஆசையை நிறைவேற்றவே அந்தப் படகை வாங்கினேன் என்று கூறியுள்ளார். மேற்கண்ட சொத்து மதிப்பானது பல்வேறு ஊடக அறிக்கைகளின் படி, தோராயமாக கணக்கிடப்பட்டது.

English Summary

சினிமா செய்திகள் - சொத்து மதிப்பு - மாதவன் - Dhurandhar actor R. Madhavan's Rs 125 crore net worth stems from early real estate investments, disciplined spending, and high film fees.