முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார். இந்த நிறுவனத்திற்கு வித்திட்டவர் முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி. தற்போது அம்பானி குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
அம்பானி குடும்பம் என்ற உடனே பலருக்கும் மும்பையில் இருக்கும் ஆன்டிலியா என்ற அவர்களுடைய பிரம்மாண்டமான வீடு தான் ஞாபகத்திற்கு வரும். இந்த வீட்டில் சுமார் 170 ஆடம்பர கார்கள் இருக்கின்றன. ஆனால் திருபாய் அம்பானி பயன்படுத்திய ஒரு கார் மட்டும் இவர்கள் வசம் இல்லை. தற்போது அதன் உரிமையாளராக இருப்பவர் மலையாள திரை உலக நட்சத்திரமான மோகன்லால்.

திருபாய் அம்பானிக்கு மிகவும் பிடித்தமான ஆடம்பர காரில் தான் மோகன்லால் ஜாலியாக வலம் வருகிறார். மோகன்லால் நடிகர் மற்றும் இயக்குநர் என பல அவதாரம் கொண்டவர். எப்படி நடிப்பு மீது அவருக்கு ஆர்வமோ அதே போல புது வாகனங்களை வாங்கி பயன்படுத்துவதிலும் ஆர்வம் அதிகம்.
குறிப்பாக அரிய வகை விண்டேஜ் வாகனங்களை வாங்கி சீர் செய்து பயன்படுத்துவது மோகன்லாலுக்கு பிடித்தமான ஒன்று. அப்படித்தான் அவர் திருபாய் அம்பானிக்கு சொந்தமான விண்டேஜ் சொகுசு காரை சொந்தமாக்கி இருக்கிறார்.
1958 ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட கேடிலியாக் (Cadillac ) என்ற அந்த கார் இடது புறம் ஸ்டியரிங் கொண்டது கேடிலியாக் ஒரு செடான் வகை கார் ஆகும். முதன் முதலில் இந்தியாவில் திருபாய் அம்பானி தான் இதனை வாங்கியதாக சொல்லப்படுகிறது. பின்னர் திருபாய் அம்பானியிடமிருந்து மோகன்லாலின் மாமனாரும் புகழ்பெற்ற திரை பட தயாரிப்பாளருமான பாலாஜி தான் சொந்தம் ஆகியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து பாலாஜி தான் தயாரித்த பல்வேறு படங்களிலும் இந்த காரை பயன்படுத்தி இருக்கிறார். பின்னர் இந்த காரை பராமரிக்கும் பொறுப்பு மோகன்லால் வசம் சென்றது. முதலில் மரூண் கலரில் இருந்த இந்த கார் பின்னர் கொச்சியில் இருக்கும் கேரேஜூக்கு அனுப்பப்பட்டு முழுவதுமாக சீரமைக்கப்பட்டது. தற்போது அதனை புதுப்பித்து மோகன்லால் பயன்படுத்தி வருகிறார்.
மிக பழைய காராக இருந்தாலும் மோகன்லால் இதனை தற்போதும் பயன்படுத்தும் வகையில் புதுமையாக மாற்றியுள்ளார். தொடக்கத்தில் சென்னையில் இருந்து இந்த கார் பின்னர் கொச்சின் எடுத்து செல்லப்பட்டதாம்.
பாலாஜி இந்த காரினை திருபாய் அம்பானி இடமிருந்து எப்போது வாங்கினார் என்ற விவரங்கள் தெரிய வரவில்லை. மோகன் லாலை பொறுத்தவரை பழமையான மற்றும் நவீன ஆடம்பர கார்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். அவரிடம் பிந்துஸ்தான் அம்பாசிடர் எம்கே4 (Hindustan Ambassador MK4), ரேஞ்ச் ரோவர் ஆடோபயோகிராபி (Range Rover Autobiography), டொயோட்டா லேண்ட் க்ரூசர் (Toyota Land Cruiser), டொயோட்டா இனோவா கிரிஸ்டா ( Toyota Innova Crysta) ஆகிய கார்கள் இருக்கின்றன.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications